Saturday 10 September 2011

இன்று ஒரு தகவல்

நல்ல மெசேஜ் !!!

ஒரு ஆளோட வீட்ல ஏதோ fire accident. அவர் வெளிய இருந்து ஒரே கத்து கத்தி அழுதுட்டு இருந்தார். அப்போ அவரோட முதல் பையன் வெளிய வந்து "அப்பா நம்ம வீட்ட நேத்தே ஒருத்தர்க்கு வித்துட்டோம்." அத கேட்ட உடனே அவருக்கு ஒரே சந்தோசம்..

அப்போ அவரோட ரெண்டாவது பையன் வெளிய வந்து "அப்பா, அண்ணன் நேத்து ஒருத்தர்க்கு விக்கலாம்னு சொல்லி எல்லாம் தயாரா வச்சு இருந்தான். ஆனா இன்னைக்கு தான் பத்திரம் கொடுத்து மத்த ஏற்பாடுகளை செய்யனும்னு இருந்தோம். அதனால இன்னும் விற்க வில்லை.இத கேட்ட வுடனே மறுபடியும் அவர் அழ ஆரம்பிச்சுட்டார்

இந்த கதை மூலமா தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள் என்ன சொல்ல வர்றாருனா, எப்போ அவர் அவரோட வீடுன்னு நினச்சாரோ, அப்ப அவருக்கு வருத்தம் இருந்துச்சி..
அந்த பொருளை இழந்துடுவோம்னு பயம், கவலை இருந்தது..
எப்போ அவனோடது இல்லேனு நெனச்சானோ, அப்ப சந்தோஷ பட்டாரு..
இதுல இருந்து புரிஞ்சுக்க வேண்டியது எதுவுமே நம்மளோடது கெடையாது.
நம்ம கீதையில இத ரொம்ப தெளிவா சொல்லி இருக்காங்க.,
"எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது...." அதே மாத்ரி நாமளும் இருக்கணும்னு .அத கேட்டுட்டு நான் கொஞ்சம் யோசிச்சு பாத்தேன்.. என்னோட பாமிலி, என்னோட நண்பர்கள், என்னோட வேலை, என்னோட இடம், என்னோட கணினி, என்னோட எழுதுகோல், என்னோட keyboard, Mouse..etc.(இதுல பாருங்க எத்தன "என்னோட")
ஆ.. , நிஜமா இதெல்லாம் என்னை விட்டு போக கூடாதுன்னு நினைச்சுகிட்டே இருப்பேன்...நம்ம நண்பர்கள் கிட்ட தான் நாம ரொம்ப possessive a இருப்போம். அவங்க வேற யார் கூடவாவது close ஆனா, நல்லா பேசினா நமக்கு கோவம் வரும், சண்டை வரும் கஷ்டம்னு தெரிஞ்சு ஏன் நாம அப்படி feel பண்ணனும்? எதுவுமே/யாருமே எப்பவுமே நம்ம கூட இருக்க முடியாதுல அதனால ஏன் நம்ம கிட்ட ரொம்ப நெருக்கமா இருக்கும் நண்பர்கள் கிட்ட, அதிக கோபமும் வெறுப்பும் வருது அவங்க நம்மள விட்டு விலகும் போது.. ஹ்ம்ம்ம்ம்ம்அதனால யாருமே எப்பவுமே நமக்கு நிரந்தர உறவாக முடியாது...என்னுடன் பணி புரியும் எனது நண்பர் சொக்கலிங்கம், அடிக்கடி ஒரு கருத்து சொல்லுவார்..

"ஒரு பொருள் கிடைக்கலைனா சந்தோசம்
அதே பொருள் கிடைச்சா ரொம்ப சந்தோசம்.."

அதே போல,ஒரு பொருள் நம்மள விட்டு விலகி போனா சந்தோசம்..
அதே பொருள் விலகி போகலைனா ரொம்ப சந்தோசம்..

இங்க வருத்தம்னு ஒண்ணு கிடையவே கிடையாது..
(ஈஷா யோகா ல சுவாமி சத்குரு ஜாக்கி வாசுதேவ் .. எல்லோரும் அவர பத்தி கேள்வி பட்டு இருப்பீங்க. அங்க இந்த மாதிரி நெறைய விசயங்கள நமக்கு உணர்துவாங்க.. )

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.