பொது விடுதி ஒன்றில் புகழ்பெற்றபியானோ கலைஞர் ஒருவர் தொடர்ந்து வாசிப்பது வழக்கம். அவர் இசைப்பதைக் கேட்பதற்காகவே ரசிகர்கள் கூடுவார்கள். விடுதிக்கு தொடர்ந்து வரும் செல்வந்தர் ஒருவர் நிறைய நன்கொடை தருபவர்.

ஒருநாள் அவர் “நீ பியானோ வாசித்தால் மட்டும் போதாது. பாடிக்கொண்டே வாசிக்கவேண்டும்” என்று நிபந்தனை விதித்தார். தயங்கிய இசைக்கலைஞர், வேறுவழியின்றிப் பாடினார். தானோர் அற்புதமான பாடகர் என்பதே அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது. “மோனா மோனாலிசா” என்றஅந்தப் பாடல் உலகப் புகழ் பெற்றது. தனக்குத் திறமை இருந்தும் அதனைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பவர்கள் இன்னும் எத்தனையோ?