Tuesday 13 September 2011

பயனளித்த புத்தகம்

ஒரு நிருபர் பெர்னாட்ஷாவை பார்த்துக்கேட்டார் எந்தப் புத்தகத்திலிருந்து உங்களுக்கு அதிகமான மகி்ழ்ச்சி கிடைத்தது என்று சொல்ல முடியுமா ?
பெர்னாட்ஷா பளிச்சென்று பதில் சொன்னார் :
என்னுடைய “செக்”(காசோலை) புத்தகத்தில் இருந்து….

—————————————————————————————————————————————————-
நாய்களுக்குத் தெரியாது

தலைமை நீதிபதியை அவருடைய வீட்டில் பார்க்க ஒரு வக்கீல் சென்றிருந்தார்.
அவரைப்பார்த்து விட்டு வெளியே வரும்போது… நீதிபதியின் வீட்டு நாய் பலமாகக்
குரைத்துக்கொண்டே வக்கீலின் பின்னால் ஓடிவந்தது…வக்கீல் பயந்து போய் வேகமாக ஓடத்தொடங்கினார்.

அதைப் பார்த்த நீதிபதி உரத்த குரலில் கேட்டார் :
“ஏனய்யா ஓடுகிறீர் ? குரைக்கிற நாய் கடிக்காது ” என்கிற பழமொழி உமக்குத் தெரியாதா?’

வக்கீல் திரும்பிப் பார்த்துச்சொன்னார் :
” பழமொழி உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்…..நாய்க்குத்தெரிய வேண்டுமே..? “

——————————————————————————————————————————————————

இப்படித்தான் செய்தேன்..

ஜெஹாங்கீருடைய காதலி நூர்ஜஹான் என்பது நம் அனைவருக்கும் தெரியும்
ஜெஹாங்கீர் அவளிடம் இரண்டு புறாக்களைக்கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி
சொல்லிவிட்டுப்போனார். திரும்பி வந்தபோது அவளுடைய கையில் ஒரு புறா மட்டுமே இருப்பதை
பார்த்து ஜெஹாங்கீர் கோபமடைந்தார்.

“இன்னொரு புறா எங்கே…? ” என்றார் அவளைப்பார்த்துக் கடுமையாக..

“பறந்து போய்விட்டது ” என்றாள் அவள்.

“எப்படிப்பறந்து ? ” என்றார் அவர்.

“இப்படித்தான் பறந்தது ” என்று அடுத்த புறாவையும் கையில் இருந்து நழுவ விட்டாள்.
அது ஆகாயத்தை நோக்கிப்பறந்தது.
ஜெஹாங்கீர் கோபமடையவில்லை…அவளுடைய குறும்புத்தனம் அவரை மிகவும் கவர்ந்தது

——————————————————————————————————————————————————
வினோத வழக்கு

விவாகரத்து வழக்கு அது.
விவாகரத்து கோரிய அந்தப் பெண்…. நீதிபதியை பார்த்து தன்னுடைய கணவரிடமிருந்து ஜுவனாம்சத்தொகை எதையும் தான் எதிர்பார்க்கவில்லை என ஆணித்தரமாக சொன்னாள்.

” நான் விரும்புவதெல்லாம்… நான் அவரைத் திருமணம் செய்து கொண்டபோது என்ன நிலையில் இருந்தேனோ அந்த நிலையிலேயே அவர் என்னை விட்டு விட்டுப் போனால் போதும்.”

நீதிபதி கேட்டார்…. “நீ என்ன நிலையிலிருந்தாய் ? “

“அவர் திருமணம் செய்து கொண்டபோது நான் விதவையாக இருந்தேன்.” என பளிச்சென்று பதில் சொன்னாள் அவள்.

——————————————————————————————————————————————————–

யார் அங்கே?….
அமெரிக்கன், ஆங்கிலேயன், இந்திய நாட்டு சர்தாஜி ஆகிய மூவரும் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்தக் கார் பழுதாகி நின்று விட்டது.
சிறிது தூரம் நடந்த அவர்கள் ஒரு வீட்டைக் கண்டார்கள். அந்த வீட்டுக் கதவைத் தட்டிய அவர்கள் தங்கள் நிலையைச் சொல்லி “இன்றிரவு எங்களை இங்கே தங்க அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டினார்கள்.
“இங்கே வயதுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள். உங்களைத் தங்க அனுமதிக்க முடியாது. வீட்டிற்கு வெளியே மாட்டுக் கொட்டகை ஒன்று உள்ளது. இன்றிரவு அங்கே தங்கிவிட்டுச் செல்லுங்கள். யாராவது இங்கே வர முயற்சி செய்தால் இந்தத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவேன்” என்று மிரட்டினான் வீட்டுக்காரன்.
மூவரும் மாட்டுக் கொட்டகையில் படுத்தார்கள்.
அமெரிக்கனுக்குத் தூக்கம் வரவில்லை. எழுந்த அவன் மெல்ல நடந்து அந்த வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தான்.
காலடி ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, “யார் அங்கே” என்று குரல் கொடுத்தான்.
தப்பிக்க நினைத்த அமெரிக்கன் “மியாவ்” என்று பூனையைப் போலக் கத்தினான்.
வந்தது பூனை என்று நினைத்த வீட்டுக்காரன் சும்மா இருந்தான்.
உயிர் பிழைத்த அமெரிக்கன் மாட்டுக் கொட்டகைக்குத் திரும்பினான். நடந்ததை நண்பர்களிடம் சொன்னான்.
அடுத்தது ஆங்கிலேயன், மெல்ல நடந்து அந்த வீட்டிற்குள் நுழைந்தான். ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, “யார் அங்கே” என்று கேட்டான்.
“மியாவ்” என்று குரல் கொடுத்தபடி அங்கிருந்து தப்பித்து வெளியே வந்தான் ஆங்கிலேயன்.
நாமும் முயற்சி செய்து பார்ப்போம் என்ற எண்ணத்தில் சர்தாஜி அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.
ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, “யார் அங்கே” என்று கோபத்துடன் குரல் கொடுத்தான்.
“நான் தான் பூனை” என்று பதில் சொன்னான் சர்தாஜி…

——————————————————————————————————————————————————–

ஐயோ! சிங்கம்!…

சர்க்கஸ்(circus-வித்தை) முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான்.

இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்.
அவனும் ஒப்புக் கொண்டான்.

சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.
பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது.
பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான்.

உடனே அந்தச் சிங்கம், முட்டாளே! வாயை மூடு. இப்படி நீ அலறினால் நாம் எல்லோரும் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னது….

——————————————————————————————————————————————————–

உண்டியலில் பணம்….

தன் மகனை அழைத்த தந்தை, “நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும். அப்படிச் சேரும் தொகையைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட வேண்டும்” என்றார்.
மகனும் இதற்கு ஒப்புக் கொண்டான்.

அவரின் திட்டம் அப்படியே நடந்தது. திடீரென்று அவர் உடல்நிலை மோசம் ஆயிற்று. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குத் தந்துவிட்டு மருத்துவ மனைவில் சேர்ந்தார்.

மகனைப் பார்த்து, “நான் இல்லாத போதும் இந்தப் பழக்கத்தை விட்டு விடாதே. ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில் போட்டுவிடு” என்றார்.

மருத்துவ மனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பினார். உண்டியலைத் திறந்து பார்த்தார். அதில் ஒரே ஒரு ரூபாய் தான் இருந்தது.

மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார்.

“இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?” என்று கேட்டார்.

“இல்லை அப்பா! உண்டியலில் முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது” என்றான் அவன்.

“அந்தப் பணத்தைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட்டாயா?” என்று கேட்டார் அவர்.

“அப்பா! உண்டியலைத் திறந்து அந்தப் பணத்தை நானே எடுத்துக் கொண்டேன். அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன்” என்றான் அந்த கெட்டிக்கார மகன்.

——————————————————————————————————————————————————–

சொர்க்கத்தில் காந்தி…

சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் இறந்து சொர்க்கத்திற்கு சென்றனர். ஒவ்வொருவரையும் கடவுள் தனியே சந்தித்து, அவர்களது குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து கேட்டார். குறைவான குழந்தை உடையவர்களுக்கு அதிகமான பரிசும், அதிகமான குழந்தை பெற்றவர்களுக்கு குறைவான பரிசும் கொடுத்தார். காந்தியும் கடவுளை சந்திக்க உள்ளே சென்றார். ஆனால் வெளியே வரும்போது வெறுங்கையுடன் வந்தார். என்னவென்று மற்றவர்கள் விசாரித்தபோது காந்தி கோபமுடன் சொன்னார்.

“யாரோ ஒரு முட்டாள் கடவுளிடம் ‘நான் தான் இந்தியாவின் தந்தை’ என்று சொல்லியிருக்கிறான்”

—————————————————————————————————————————————————

பாதிப் பேர் கழுதைகள்?..

ஆங்கில நாடக ஆசிரியரான ஷெரிடன்(Sheridan), பார்லிமெண்டில் ஒருமுறை பேசியபோது,
“இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப் பேர் கழுதைகள்” என்றார்.
“நீ பேசியதை வாபஸ் வாங்கு” என்று உறுப்பினர்கள் கூச்சலிட்டார்கள்.
கூச்சலை அடக்கி, ஷெரிடன் அமைதியாக, “மன்னிக்க வேண்டும். இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப்பேர் கழுதைகள் அல்ல” என்றார்.

—————————————————————————————————————————————————–

சிறுவன் போட்ட போடு ..

தன் நண்பனுடன் பேருந்திற்குள் ஏறிய 12 வயதுச் சிறுவன், ஓட்டுனரின் பின்பக்கம் உள்ள
இருகையில் அமர்ந்தான். பேருந்து இன்னும் புறப்படவில்லை.

வந்த சிறுவனோ வழவழவென்று தன் நண்பனிடம் கத்திப்பேசிக்கொண்டிருந்தான்.

“எங்க அப்பா காளைமாடாகவும், எங்க அம்மா பசுமாடாகவும் இருந்தால் நான்
கன்னுக்குட்டி. எங்கப்பா ஆண்யானையாகவும், எங்க அம்மா பெண் யானையாகவும்
இருந்தால் நான் குட்டி யானை”

இந்த ரீதியில் அவன் பேசிக்கொண்டிருந்தான்.

எரிச்சலைடைந்த ஓட்டுனர் சும்மா இருந்திருக்கலாம், அவருடைய கெட்ட நேரம்,
பையனிடம் அவர் வாயைக் கொடுத்தார்.

“டேய் கொஞ்சம் நிறுத்துடா தம்பி. இப்ப நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு.
உங்கப்பா குடிகாரனாகவும், உங்க அம்மா ஊதாரியாகவும் இருந்தா, நீ இப்ப என்னவா இருப்பே?”

பையன் தயங்காமல் சட்டென்று பதில் சொன்னான்.

“நான் பஸ் டிரைவரா இருப்பேன்”

———————————————————————————————————————————————————

டாஷ்மாக்கில் வினோத் .

டாஷ்மாக் கடை நண்பர் வினோத்திடம் “ என்ன.சிவா இன்று சீக்கிரமாகவே போகிறீர்கள் ? என்று கேட்டார்..
அதற்கு வினோத் சொன்னார் “ இது என்னுடைய அன்றாட பிரச்சனையான மனைவிதான் என்றார்.

நண்பர் கேலியாக .. “ என்னது மனைவியா ? அவரிடம் பயமா உங்களுக்கு ? நீரெல்லாம் ஒரு ஆண்மகனா ? அல்லது எலியா ? ”என்றார்,

வினோத் சொன்னார் ” நான் ஒரு ஆண்மகன்தான் ” அதில் என்ன சந்தேகம்..

நண்பர் உடனே சொன்னார் … “ அப்படியென்றால் ஏன் இவ்வாளவு சீக்கரமாக செல்கிறாய் ? நீ ஆண்மகன் என்பதற்க்கு என்ன ஆதாரம் ? “

வினோத் சொன்னார் ” நான் நிச்சயமாக சொல்கிறேன் நான் ஒரு ஆண்மகன் தான் , என்னுடைய மனைவிக்கு எலிகள் என்றால் பயம். எனக்கு என் மனைவி என்றால் பயம் , நான் மட்டும் எலியாக இருந்திருந்தால் ?எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ? ” என்றார்….

——————————————————————————————————————————————————–

முல்லாவும் மருத்துவரும்....

முல்லா ஒரு மன நல மருத்துவரிடம் சென்றார்…

தான் இரவுகளில் தொடர்ச்சியாக காணும் கொடிய கனவை பற்றி மிகவும் பயந்ததை எடுத்து கூறினார்..

மன நலமருத்துவரோ.. ” கவலைப்படதே… முதலில் என்ன கனவு கண்டாய் சொல் ” என்று கேட்டார்

முல்லா சொன்னார் “ நான் , நான் திருமணம் செய்வதாக கனவு கண்டேன்!”

மன நலமருத்துவர் உடனே “ அதனால் என்ன ? ஏன் பயப்படவேண்டும் ? கனவினில் யாரை திருமணம் செய்தாய் சொல் ! “

முல்லா சட்டென்று “ எனது மனைவியைத்தான் , அதனால்தான் பயந்துவிட்டேன் என்றார் “

———————————————————————————————————————————————— ஆராய்ச்சி…

முல்லா எல்லா விஷயங்களையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்பவர் , எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டவர். இப்படித்தான் ஒரு நாள் அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது….

வழியில் எதோ ஒன்று கிடப்பதைக் காண்கிறார், அவர் அதனருகில் குனிந்து பார்த்தார் அவருக்கு அது என்ன வென்று தெரியவில்லை , பிறகு அதை கையில் எடுத்து வைத்து கொண்டு ஆராய்ந்தார் அப்போதும் அவருக்கு விளங்கவில்லை, அதை தனது மூக்கின் அருகில் எடுத்துச் செனறு முகர்ந்து பார்த்தார் , அவருடைய சந்தேகம் சிறிது தெளிவுபெற்றது அனாலும் அவரால் அதை உறுதியாக்கிக் கொள்ள முடியவில்லை , பிறகு அதிலிருந்து சிறிது பகுதியை எடுத்து தனது வாயில் போட்டு கொண்டார் அவருடைய முகம் ஒரு தெளிவு பெற்றதைப் போல் பிரகாசித்தது பிறகு சொன்னார் ” ஆஹா , நான் சந்தேகப்பட்டது சரிதான், இது சந்தேகமே இல்லாமல் மாட்டுச்சானம்தான் , நல்லவேலை இது தெரியாமலிருந்தால் இதை காலில் மிதித்திருப்பேன் ” என்று தன்னைத்தானே பாராட்டிக்க்கொண்டார்

——————————————————————————————————————————————————

முல்லாவும் அவரது மனைவியும்..

முல்லாவும் அவரது மனைவியும் ஒரு நெடுஞ்சாலையில் சண்டையிட்டு கொண்டே நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சில பன்றிகள் சென்றன அதை ப் பார்த்த முல்லா தனது மனைவியை கடுப்பாக்க… ” உன்னுடைய சொந்தங்கள் செல்கின்றன பார் ” என்று மனைவியை பார்த்து சொன்னார்.

அதற்கு அவர் மனைவி சட்டென்று ….. ” ஆம் , எனது மாமனாரும் மாமியாரும் செல்கின்றார்கள்” என்றாள்

——————————————————————————————————————————————————

மனைவி யாருடனோ நேற்று இரவு ஓடிவிட்டாள்…. !

அதிகாலை , மனநல மருத்துவ தலைமை அலுவலகத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு

“ஐயா தங்களுடய மருத்துவமனையிலிருந்து ஏதாவது மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ? ” எனக் கேட்டார் ஒருவர்.

“இல்லை” என்றார் மருத்துவமனை ஊழியர்

அப்படியென்றால் உங்கள் கீழ் உள்ள மற்ற மருத்துவமனைகளிலிருந்து யாரவது தப்பியதாக செய்தி உண்டா ? என மீண்டும் கேட்டார்.

” இல்லை சார் அப்படி ஏதும் செய்திகள் இதுவரை வரவில்லை ” என்று பதில் சொன்னார் ஊழியர்.

“ நன்றாக பார்த்து சொல்லுங்கள் , கண்டிப்பாக ஏதாவது மனநிலை பாதிக்கப்பட்டவர் தப்பியிருக்ககூடும் “ என விடாமல் கேட்டார் தொலைபேசி அழைப்பாளர்

“ யார் சார் நீங்கள்… காலையில் இப்படி போன் செய்து உயிரை வாங்குகிறிர்கள் ? ஏதாவது மனநலம் பாதிக்கப்பட்டவரை வழியில் பார்த்திங்களா ? “ எனக் கேட்டார் ஊழியர்.

“ இல்லை ! ஆனால் எனது மனைவி யாருடனோ நேற்று இரவு ஓடிவிட்டாள் ! அதுதான் அந்த பாவப்பட்டவரை தேடிக்கொண்டிருக்கிறேன் ! “ என்றார் அழைப்பாளர்.

——————————————————————————————————————————————————

கம்யூனிஸ்ட் கட்சி தான் எனது தாய்…

குருச்சேவ் ரஷ்யாவில் பொருப்பில் இருந்தபோது ஒரு பள்ளி மாணவனை பார்த்து…

உன் தந்தை யார் ? எனக் கேட்டார்

“ நிச்சயமாக குருச்சேவ்தான் எனது தந்தை “ என்றான் மாணவன்..

“நல்லது ” அப்படியானால் உனது தாய் ? “
“கம்யூனிஸ்ட் கட்சி தான் எனது தாய்” என்றான் மாணவன்..

குருச்சேவுக்கு மிகவும் மகிழ்ச்சி மீண்டும் அந்த குழந்தையை பார்த்து கேட்டார் “ மிகவும் மகிழ்ச்சி! இப்படித்தான் சொல்லவேண்டும் ,
இப்போது சொல் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் ? “

“அநாதையாக” என்றது குழந்தை…

—————————————————————————————————————————————————–

மிகச்சிறந்த நடிகன்….
ஒருவன் ஒரு சினிமா அரங்கில் உட்காந்திருந்தான், மனைவி தொடர்ச்சியாக அவனிடம் கதாநாயகன் தன் மனைவியை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறான் எண்பதனை சொல்லிக்கொண்டே இருந்தாள்.
நிறுத்து உன் உளறலை என்று தொடர்ந்த கணவன்…. அதற்காக அவனுக்கு எவ்வளவு தொகை தரப்படுகிறது என்பது உனக்கு தெரியாது. அவன் ஒரு நல்ல நடிகன் என்பது மட்டும் நிச்சயம் என்றான்.

மனைவி சொன்னாள் , ” வாழ்க்கையிலும் அவர்கள் கணவன் மனைவிதான் என்பது ஒருவேளை உங்களுக்கு தெரியாது போல ” என்றாள் கிண்டலாக…

அவன் சொன்னான் , ” அடக்கடவுளே! அது உண்மை என்றால், நான் இதுவரை பார்த்த நடிகர்களிலேயே மிகச்சிறந்த நடிகன் இவன்தான். இல்லாவிட்டால்,தன் சொந்த மனைவியிடம் இந்தளவு அன்பைத் திரையிலும் காட்டுவது மனித சக்திக்கு மீறியது ஆகும். நடிப்பை பொறுத்தவரை அவன் ஒரு மாமேதைதான் ” என்றான்

——————————————————————————————————————————————————

அவை என்னுடையதல்ல..

புத்தர் தன் பிரயாணத்தின் போது ஒரு கிராமத்தை வந்தடைந்தார்.
அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் மத போதகர்கள்.

புத்தரை, அவருடைய போதனைகளை வெறுப்பவர்கள்.எனவே
ஆனந்தா என்ற அவருடைய பிரதான சீடர் அந்த வழியாக
செல்ல வேண்டாம் என்றார்.

ஆனால் புத்தர் அதை மறுத்து அந்த வழியாக சென்றார்.
அவர் ஊருக்குள் நுழைந்ததுமே அந்த மதவாதிகள் அவரை சூழ்ந்து
கொண்டு கண்டபடி திட்ட ஆரம்பித்தனர். ஆனால் புத்தரோ எவ்வித
சலனமும் இன்றி அந்த இடத்தை விட்டுச் சென்றார்.அந்த ஊரைக்
கடந்ததும் இளைப்பாற ஓரிடத்தில் தங்கினர். ஆனந்தாவால் பொறுக்க
முடியவில்லை “குருவே ! அவர்கள் உங்களை எந்த அளவு கேவலமாக
பேசி விட்டனர்,நீங்கள் அவர்களோடு சண்டையிட வேண்டாம்
குறைந்த பட்சம் மறுப்புத் தெரிவித்து ஏதாவது சொல்லி விட்டு
வந்திருக்கலாமே”என்றார்.

புத்தர் அமைதியாக தான் பிச்சை எடுக்கும் திருவோட்டைக் காட்டி
“ஆனந்தா! இது யாருடையது?” என்றுகேட்டார்.

“இது உங்களுடையது”

“இல்லை இது உன்னுடையது ,இதை நான் உனக்கு கொடுத்து விட்டேன்”

என்றார்.சிறிது நேரம் சென்றதும் மீண்டும்”ஆனந்தா!இது யாருடையது ?”
என்று கேட்டார்.

“இது என்னுடையது சுவாமி!”

“எப்படி ? இது என்னுடையது என்று சொன்னாயே?”

“சுவாமி!இதை நீங்கள்தான் எனக்கு கொடுத்தீர்கள்.நான் அதை ஏற்றுக்
கொண்டதால் இது என்னுடையதாயிற்று”என்றார்.

“ஆம் , நான் கொடுத்ததை நீ ஏற்றுக் கொண்டதால் அது உன்னுடையதாயிற்று ,
அவர்கள் என்னைக் குறித்துச் சொன்னவைகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை
எனவே அவை என்னுடையதல்ல”என்றார்.

——

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.