கடல் நண்டு ஓடு பக்கவாதத்தை குணப்படுத்தும்!
கடல் நண்டின் ஓட்டில், பக்கவாதத்தை குணப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
***
அமெரிக்கா, இண்டியானா பகுதியிலுள்ள பக்கவாத ஆராய்ச்சி மைய இயக்குனர் ரிச்சர்ட் போர்ஜென் கூறியதாவது:
பக்கவாதத்துக்கு பல்வேறு மருந்துகள் இருந்தாலும், அவை முற்றிலும் குணமாக்குவதில்லை.
*
ஆனால், கடல் நண்டின் ஓட்டில், ஒருவகை ரசாயனம் உள்ளது.
*
ரசாயனமாக இருந்து சர்க்கரையாகும் இந்த பொருளுக்கு, நரம்பு மண்டல பாதிப்புகளை குணமாக்கும் சக்தி உள்ளது.
*
குறிப்பாக முதுகு தண்டு பாதிப்பை முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
*
பக்கவாதத்துக்கு நல்ல மருந்து இல்லாமல்இருந்தது. தற்போது இந்த நண்டு ஓடு எங்களுக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது.
*
நண்டு ஓட்டில் சேகரமாகக் கூடிய இந்த ரசாயனத்தை, சுத்தமான தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் ரத்தத்தில் செலுத்தினால், ரத்தத்தில் கலந்த பின் இந்த ரசாயனம் சர்க்கரையாகமாறி, முதுகுதண்டில் ஏற்பட்ட பாதிப்புகளையும், நரம்பு மண்டல பாதிப்புகளையும் குணமாக்குகிறது.
*
கினியா பன்றிகளுக்கு இந்த சோதனை செய்து பார்த்ததில், முழு வெற்றி கிடைத்துள்ளது.
*
மனிதர்களுக்கு, இந்த நண்டு ஓடு ரசாயனத்தை செலுத்தி பார்த்து
சோதனை செய்து வருகிறோம்.
இவ்வாறு ரிச்சர்ட் போர்ஜென் கூறினார்.
கிவி (பசலிப்பழம் ) பழம் மருத்துவ குணங்கள்
சுவையும் பயனும்:
இதை நாம், கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். பழத்தின் சுவை புளிப்பு அல்லது துவர்ப்பாக இருக்கலாம். பசலிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
*
உயிர் சத்துக்கள்:
அதில் உடல் நலனுக்குத் தேவையான சத்துக்கள் கொட்டிக் கிடப்பதாக லேட்டஸ்ட் ஆய்வு தெரிவிக்கிறது.
*
ட்ரிவோலி கிராண்ட் ஓட்டல் நிபுணர் பாட் கூறியதாவது:
கிவி ப்ரூட்டில் ஏராளமான மினரல்கள், விட்டமின்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழமான அதில் விட்டமின் ஏ, சி, இ அதிகம். தோல், இதய நோய்கள், புற்றுநோய், உடல் பருமன் உட்பட பலவற்றில் இருந்து விட்டமின் சி நம்மைக் காக்கிறது.
*
விட்டமின் சியின் பணிகளை விட்டமின் இ அதிகரிக்கும். இந்த இரண்டும் கிவி ப்ரூட்டில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.
***
மருத்துவ குணங்கள்:
கிவி ப்ரூட்டில் உள்ள நார்ச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால் டயபடீஸ் குணமாகும்.
*
ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
*
குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால் கிவி ப்ரூட் குணப்படுத்தும் என்றார்.
*
முக்கிய பழச் சந்தைகள், மார்க்கெட்களில் கிடைக்கும் கிவி ப்ரூட்டை வாங்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.
***
கிவி பழ சீன உணவு வகை:
சீன உணவு வகைகளில் பழங்கள் இடம்பெறுவது அதிகமில்லை. ஆனால், சில வேளையில், அதிகம் இனிப்பில்லாத பழங்களைப் பயன்படுத்துவதை காண முடியும்.
*
கிவி பழம், அதிக வைட்டமின் எனும் உயிர்சத்து சி கொண்ட பழ வகையாகும். அதிகமாகச் சாப்பிட்டால், உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.
*
தேவையான பொருட்கள்:
கிவி பழம் 2
கோழி இறைச்சி 300 கிராம்
சிவப்பு நிறமான மிளகாய் 1
சமையல் மது ஒரு தேக்கரண்டி
கறுப்பு மிளகுத் தூள் அரை தேக்கரண்டி
உலர்ந்த தக்காளி மாவு ஒரு தேக்கரண்டி
உப்பு போதிய அளவு
சமையல் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
*
நாம் முதலில், கிவி பழங்கள், சிவப்பு நிறமான மிளகாய், கோழி இறைச்சி ஆகியவற்றை நன்றாக கழிவி சுத்தம் செய்ய வேண்டும்.
கிவி பழங்களின் தோலைக் கவனமாக நீக்கிக் கொள்ளுங்கள். 3 சென்டி மீட்டர் அளவுடைய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
சிவப்பு மிளகாயையும் கோழி இறைச்சியையும் துண்டு துண்டாக வெட்டிக்கொள்ளுங்கள்.
பிறகு, கோழி இறைச்சி துண்டுகள், சமையல் மது, தக்காளி மாவு, கறுப்பு மிளகுத் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
5 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்.
அடுப்பின் மீது வாணலியை வையுங்கள். சமையல் எண்ணெயை ஊற்றுங்கள்.
10 வினாடிகளுக்குப் பின், கோழி இறைச்சி துண்டுகளை வாணலியில் போட்டு, வதக்கலாம்.
பிறகு, முறையே, சிவப்பு மிளகாய் மற்றும் கிவி பழத் துண்டுகளை இதில் சேர்க்கலாம். இறுதியில், கொஞ்சம் உப்பு சேர்க்கவும்.
கிவி பழம், சிவப்பு மிளகாய், இறைச்சி கோழி ஆகியவை இடம்பெறும் இன்றைய வறுவல் தயார்.
மிளகாய் சிவப்பானது. கிவி பழம் பச்சை நிறமாகும். கோழி இறைச்சித் துண்டுகள் வெள்ளை நிறமாகும். இன்று நாம் தயாரித்த இந்த உணவு வகையின் நிறம் அழகானது.
by- க்ளீட்டஸ், வாணி
***
பப்பாளி & கிவி ஜூஸ்
தேவையான பொருட்கள் :
பப்பாளிபழம் - ஒரு கப்
கிவி பழம் - ஒரு கப்
வென்னிலா ஐஸ் கிரீம் - ஒரு ஸ்கூப்
சர்க்கரை - நான்கு தேக்கரண்டி
பப்பாளி & கிவி - அரை கப் (பொடியாக அரிந்தது)
ஐஸ் கட்டிகள் - பத்து துண்டு
செய்முறை:
பப்பாளி, கிவி, ஐஸ் கிரீம், ஐஸ் கட்டிகள், சர்க்கரை, ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நல்ல அடித்து ஜூஸ் டம்ளரில் ஊற்றி பொடியாக அரிந்து துண்டுகளை போட்டு குடிக்கவும்.
ஆப்பிளும்... ஆரோக்கியமும்..!
இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்குகளையும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலானோர் உண்ணும் உணவை செரிப்பதற்கும், போதைக்கும் குறைந்தளவு மதுவை அருந்துவதுண்டு. இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கும் மதுபோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர்.
*
இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.
*
பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
*
ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.
*
மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர மது அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது.
*
வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.
மணத்தக்காளி மருத்துவ பண்புகள்!
கத்தரி இனத்தைச் சேர்ந்ததாகும், மணத்தக்காளி. அறுபது சென்டிமீட்டர் உயரம் வரை இச்செடி வளரும். இச்செடியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த சத்துணவாகும்; உணவு மருந்தும் ஆகும்.
*
மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.
*
இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, மணத்தக்காளி. இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை டானிக்காக மணத்தக்காளிக் கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன.
*
இக்கீரை சத்துணவுப் பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பிவிடுகிறது. இக்கீரையை உணவாகச் சாப்பிட்டால் அன்றைய தினம் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும்.
*
எந்த உறுப்பு எந்தப் பொருளைக் கிரகித்துக் கொள்ள வேண்டுமோ அதற்கு ஏற்ற வகையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.
***
குத்தலா? எரிச்சலா?
மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும். இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும். உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது.
***
சிறுநீரகக் கோளாறு தீர்க்கும் இலைக் காய்கறி!
இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.
***
மலச்சிக்கலா?
மணத்தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும். பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது. வாரத்துக்கு இரு நாள் மட்டுமே மலம் கழிக்கிறவர்கள் இப்பழத்தைச் சாப்பிடலாம். இதனால் கழிவுகள் உடனே வெளியேறும்.
இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.
***
நீர்க்கோவை குணமாகும்!
நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கஷாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.
***
வயிற்று வலி குணமாகும்!
செரிமானக் கோளாறுகள் அனைத்தையும் மணத்தக்காளிக் கீரையின் இரசம் குணப்படுத்துகிறது. ஒரு கைப்பிடி அளவு சுத்தம் செய்யப்பட்ட இக்கீரையை மிக்ஸி மூலம் சாறாக மாற்றுங்கள். உங்களுக்குப் பிடித்த பழ இரசப் பானம் ஒன்றுடன் இந்தக் கீரைச் சாற்றையும் சேர்த்து அருந்துங்கள். இந்தச் சாறு வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும். இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். மேற்கண்ட வயிறு சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாக இக்கீரையுடன் பாசிப் பருப்பு, வெங்காயம் முதலிய சேர்த்து கூட்டாகச் செய்தும் சாப்பிடலாம்.
***
நல்ல தூக்கம் இல்லையா?
இக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் களைப்பு நீங்கும். இத்துடன் நன்கு தூக்கத்தையும் கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.
மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. மிக்ஸி மூலம் எடுத்த சாற்றை இவர்கள் அருந்த வேண்டும். இதே சாறு கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும் கணிக்கிறது. கல்லீரல் கோளாறுகள் அனைத்தையும் இக்கீரைச்சாறு குணமாக்கும்.
***
காய்ச்சலா? கவலை வேண்டாம்!
எல்லா வகையான காய்ச்சல்களையும் இக்கீரை தணிக்கும். உலர்ந்த மணத்தக்காளிக் கீரையை (அல்லது கீரைப் பொடி என்றால் ஒரு தேக்கரண்டி) தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். உடனே வடிகட்டி, சூட்டுடன் அருந்த வேண்டும். இது உடனே செயல்பட்டு நோயாளியை நன்கு வியர்க்கச் செய்துவிடும். வயிர்வை வெளியேறுவதால் காய்ச்சலின் தீவிரம் குறையும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும். மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
கீரையைப் போலவே பழமும் சக்தவாய்ந்த மருந்தாகும். ஆஸ்துமா நோயாளிகள் சளியுடன் ‘கர்புர்’ என்று சிரமத்துடன் மூச்சு விட்டுக்கொண்டு இருப்பார்கள். இவர்களும் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும்.
நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். இப்பழம் உடனே கருதரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. குழந்தை ஆரோக்கியமாய் உருவாகிப் பிரசவமாக இப்பழம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும்.
தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப்பெறலாம்.
நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வரவேண்டும்.
மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது. காசநோய், ஆஸ்துமாகாரர்கள் தொந்தரவு இன்றி இரவில் அயர்ந்து தூங்க வற்றல் குழம்பு உதவும்.
***
தினமும் சாப்பிடலாமா?
மனத்திற்கு மகிழ்ச்சியைத் தந்து உடலில் உள்ள நோய்களையும் குணப்படுத்தும் இக்கீரையைத் தினமும் உணவில் உண்ணலாம்.
100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன. நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் பாஸ்பரஸும், நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன.
***
மகிழ்ச்சி வேண்டுமா?
மேலும், தசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும் கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும் ரிபோஃபிலவின் என்னும் வைட்டமின் பி2ம், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும் ‘பி’ குரூப்பைச் சேர்த்த வைட்டமின் நியாஸினும் உள்ளன.
பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது.
***
நெஞ்சவலி இனி இல்லை!
இக்கீரையையும், பழத்தின் விதைகளையும் உலர வைத்துப் பொடியாக்க வேண்டும். அவற்றைத் தலா அதைக் கரண்டி வீதம் காலையும் மாலையும் உட்கொண்டால் நெஞ்சுவலி குணமாகும். காய்ச்சல் நேரத்திலும் நாள்பட்ட புண்கள் இருந்தாலும் இதுபோல் உட்கொள்ள வேண்டும். இப்பொடியைத் தேன் கலந்தும் சாப்பிடலாம்.
மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது, மணத்தக்காளிக் கீரை, இதன் விஞ்ஞானப் பெயர், ஸோலனம் நைக்ரம் என்பதாகும். இப்போது உலகம் முழுவதும் இது பயிர் செய்யப்படுகிறது.
காரணம், குறைந்த செலவில் சிறந்த உணவாகவும் நோய்களைக் குணப்படுத்தும் மருந்துணவாகவும் இருப்பதால்தான்.
இன்றே, உங்கள் வீட்டில் மணத்தக்காளி விதையைத் தூவி இக்கீரையை வளர்க்க ஆரம்பியுங்கள், உடல் நலன் பெறுங்கள்.
***
குடல் புண் குணமாக...
கொப்பும் கிளையுமாக 3 அடி வரை செழுமையாக வளரும். வேர்கள் கொத்துச் செடிகளுக்கு இருப்பதுபோல இருக்கும். மிளகைவிட சற்றுப் பெரிய காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். இது சிறுசெடி இனம். இதைக் கீரையாகவும் பயன்படுத்தலாம். தமிழகம் எங்கும் மழைக் காலத்தில் ஈரப்பசை உள்ள இடங்களிலும் தோட்டங்களிலும் தானாகவே வளரும். இதில் கருப்பு, சிவப்பு என இரு வகையுண்டு. இரண்டுக்கும் பெரிய வேற்றுமை இல்லை.
வேறு பெயர்கள்: மணித்தக்காளி, மிளகுத் தக்காளி, உலகமாதா, விடைக்கந்தம், கண்ணிகம், காகதேரி, காளி, துகமாசி, குட்டலத் தக்காளி, வனங்காத்தாள், காகசிறுவாசல், ரெத்தத்திர மானப்பழத்தி, சுரனாசினி, வாயசம், காமமாசி.
தாவரவியல் பெயர்: Solanum nigrum
மருத்துவக் குணங்கள்:
1. மணத்தக்காளிக் கீரையை உணவுடன் சேர்த்து உண்ண உடம்பு குளிர்ச்சி அடையும்.
2. வாரம் ஒரு முறை இக்கீரையை உண்டுவர, கடுமையான உழைப்பு காரணமாக உடலின் உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அழற்றியைப் போக்கலாம்.
3. இதயத்திற்கு வலிமை ஏற்றும்.
4. களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.
5. மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெற உதவும்.
6. கண்பார்வையும் தெளிவு பெறும்.
7. வயிற்றுநோய், வயிறு பெறுக்கம், வாய்புத் தொல்லை உடையவர்கள், வாரம் இருமுறை மணத் தக்காளிக் கீரையை சமைத்து உண்டு வர, நோய் கட்டுபட்டு குணமாகும்.
8. கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து தொடர்ந்து சாப்பிட்டால், குடல் புண் மற்றும் மூத்திரப்பை எரிச்சல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.
9. மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையை நீக்கும்.
10. கீரைப்பூச்சி போன்ற கிருமித் தொல்லை உடையவர்கள் வற்றலை உண்டுவர அவை வெளியேறும்.
11. மணத்தக்காளிப் பழம் குரலை இனிமையாக்கும்.
12. கருப்பையில் கரு வலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் உதவுகிறது.
13. மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
14. மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
15. இதன் பழத்தைச் சுத்தம் செய்து கொஞ்சம் தயிர் கலந்த உப்பில் சிறிது நேரம் ஊற வைத்து வெயிலில் காய வைத்து கண்ணாடிப் புட்டியில் பத்திரப்படுத்தவும். இதை வற்றலாக எண்ணெய் விட்டு வறுத்து சாப்பிட்டுவர, உடல் சூட்டைச் சமப்படுத்தி, மலச்சிக்கலைப் போக்கும். ஆனால் வயிற்றுக் கழிச்சல் உள்ளவர்கள் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.
16. இதன் கீரையை உணவுடன் சேர்த்து உண்டு வர மூலம் நாளடைவில் குணமாகும்.
17. மணத்தக்காளி இலைச்சாறுடன் சிறிது நெய் கலந்து பூசிவர அக்கி குணமாகும்.
18. மணத்தக்காளி சாறு 50 கிராம் அளவு எடுத்து அத்துடன் காயத்துண்டு பொடியுடன் சேர்த்து 2 முறை குடித்துவர இடுப்பில் வலி, பிடிப்பு குணமாகும்.
19. மணத்தக்காளி இலைச்சாறுடன் 200 மில்லியளவு எடுத்து அதில் சிறிது நெய்விட்டுக் காய்ச்சி தண்ணீர்ப்பதம் நீங்கியவுடன் அதை வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்துவர ஈரலில் உள்ள வீக்கம், குடல்புண் நெஞ்சு எரிச்சல், வயிற்றில் உள்ள கட்டிகள் கரையும்.
20. மணத்தக்காளி இலைச்சாறுடன் 200 மில்லியளவு எடுத்துக் காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர உடம்பில் உள்ள துர்நாற்றம் பேதியாகி வெளியேறும். இதே ரசத்தில் சிறிது தேன் கலந்து வாய் கொப்பளிக்க நாள்பட்ட வாய்ப்புண் ஆறும்.
21. மணத்தக்காளி இலையைக் கசக்கி 1/2 சங்களவு குழந்தைகளுக்குக் கொடுத்துவர, மலபந்தம் நீங்கும்.
***
மணத்தக்காளி வற்றல்
Favoured : 4
தேவையானவை :
பச்சை மணத்தக்காளி : 1 கிலோவிலிருந்து தேவையான அளவு)
புளித்த தயிர் : கால் லிட்டரிலிருந்து தேவையான அளவு)
உப்பு : தேவைக்கேற்ப
செய்முறை :
மணத்தக்காளியை நன்கு சுத்தம் செய்தபின், அதில் புளித்த தயிர் ஊற்றி உப்பு சேர்த்துக் கலந்து 3 நாட்கள் வரை மூடி வைக்க வேண்டும். தினமும் காலை ஒரு முறையும், மாலை ஒரு முறையும் அதை குலுக்கி விட்டு மறுபடியும் மூடி வைக்க வேண்டும். 4 -வது நாள் அதை எடுத்து வற்றல் காயப்போடும் பிளாஸ்டிக் உறையில் காயப்போட வேண்டும். நன்கு காயும் வரை வெய்யிலில் வைத்துவிட்டு, காய்ந்த பின்பு எடுத்து பாத்திரத்தில் மூடி வைக்கலாம்.
பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள்
தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர் இங்கேயே பெரிதும் பயிரப்படுகிறது. தமிழர் சமையலிலும் இது ஒரு முக்கிய இடத்தப் பெறுகிறது. கொழுக்கட்டை, மோதகம் ஆகியவை பயற்றைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன.
*
முளைக்கவைத்தும் சமைப்படுதவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்கப்படுவதுண்டு. தோல் உரிக்காமல் பச்சை நிறத்தில் இருப்பது பச்சைப் பயறு என்றும், அதுவே தோல் உரித்து உடைத்த பருப்பை பாசிப் பருப்பு என்றும் கூறுகிறோம்.
பாசிப் பருப்பு பொதுவாக பொங்கல் வைக்கவும், கூட்டு செய்யவும் மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். அதன் பயன்கள் ஏராளம் ஏராளம். பாசிப் பருப்பில் இருக்கும் சத்துக்களோ தாராளம் தாராளம்.
பயறு வகைகளில் ஏராளமான புரதச் சத்து நிறைந்துள்ளது. பாசிப் பருப்பில் புரதமும், கார்போஹைட்ரேட்டும்,கலோரியும் சரிவிகிதத்தில் கலந்து உள்ளது.
இந்த பருப்பு வகைகளை நன்கு வேக வைத்து சாப்பிடுவது நல்லது என்பதால்தான், குழைந்து செய்யும் பொங்கல்மற்றும் கூட்டுக்களை இந்த பருப்பை வைத்து செய்துள்ளனர் நம் முன்னோர்கள்.
***
எளிதில் செரிக்கும் பச்சைப் பயறு:
ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பச்சைப் பயறு பெரும் பங்கு வகிப்பதாக கேரள தேசத்தில் பொதுவாக நம்பப்படுகிறது. முழுப் பச்சைப் பயறு பற்றி குறிப்புகள் ஏதேனும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா?
புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு. சிறந்த புஷ்டியும், பலமும் தரும். இது சீக்கிரம் ஜீரணமாவதும், வயிற்றில் வாயுவை அதிகமாக உண்டாக்காமல் இருப்பதும்தான் காரணம். பயறு அறுவடையாகி ஆறுமாதங்கள் வரை தானிய சுபாவத்தை ஒட்டிப் புது தானியத்தின் குணத்தைக் காட்டும்.
*
கபத்தைச் சற்று அதிகமாக உண்டாக்கக் கூடும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு, அது மிகவும் சிறந்த உணவாகிறது. ஓராண்டிற்குப் பின் அதன் வீரியம் குறைய ஆரம்பிக்கும். தோல் நீக்கி லேசாக வறுத்து, உபயோகிக்க மிக எளிதில் ஜீரணமாகக் கூடியது.
*
நீர்த்த கஞ்சி, குழைந்த கஞ்சி, பாயசம், வேகவைத்த பருப்பு, துவையல், ஊறவைத்து, வறுத்து, உப்பு, காரமிட்ட பயறு, சுண்டல், கறிகாய்களுடன் சேர்த்து அரைகுறையாக வெந்த கோசுமலி, பொங்கல் எனப் பலவகைகளில் உணவுப் பொருளாக இது சேர்கிறது.
*
பயறு பல வகைப்படும். பாசிப் பயறு, நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறு என்று. இவற்றில் நரிப் பயறு மருந்தாகப் பயன்படக்கூடியது. தட்டைப் பயறும், காராமணியும் பயறு என்ற பெயரில்குறிப்பிடப்படுபவையாயினும், வேற்றினத்தைச் சேர்ந்தவை. தட்டைப் பயிறு இனத்தைச் சார்ந்த பயற்றங்காய் நல்ல ருசியான காய்.
*
பச்சைப் பயறு இரண்டுவிதமாகப் பயிரிடப்படுகின்றன. புஞ்சை தானியமாகப் புஞ்சைக் காடுகளில் விளைவது ஒருவகை. நஞ்சை நிலங்களில் நெல் விளைந்த பின் ஓய்வு நாட்களில் விளைச்சல் பெறுவது ஒருவகை. புஞ்சை தானியமாக விளைவது நல்ல பசுமையுடனிருக்கும். மற்றது கறுத்தும், வெளுத்த பசுமை நிறத்திலும், சாம்பல் நிறத்துடனும் காணப்படும். இரண்டும் சற்றேறக்குறைய ஒரே குணமுள்ளவைதான்.
*
பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், சீத வீரியமுள்ளதுமாகும். நல்ல ருசி உடையது. பசியைத் தூண்டி எளிதில் ஜீரணமாகக் கூடியது. ரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறைக்கும். ரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேறிவிடும். ஆகவே ரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.
*
பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்ற பின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிடக் களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும்.
உபவாசமிருப்பவர்கள் ஏதேனும் ஒரு வேளை லகுவாக உணவேற்பதாயின், பயற்றங் கஞ்சித் தெளிவுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து உண்பர். சீக்கிரம் ஜீரணமாவதுடன் உபவாச நிலையில் அதிகரித்துள்ள பித்தத்தின் சீர் கேட்டைத் தணிக்க இது பெரிதும் உதவும்.
*
பச்சைப் பயிரை வேக வைத்து, கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.
*
தலையில் உள்ள எண்ணெய்ப் பசையை நீக்க இதன் தூள் மிகச் சிறந்தது. தலைக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சி தரும். சிகைக்காய் போன்றவை ஒத்துக் கொள்ளாத போது, இது அதிகம் உதவுகின்றது. இதன் மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி, தாய்ப்பால் தரும் மாதரின் மார்பில் பற்றிட பால்க்கட்டு குறைந்து, வீக்கம் குறையும். மார்பின் நெறிக் கட்டிகளும் குறையும்.
*
இவ்வாறு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பச்சைப் பயறு பெரும் பங்கு வகிப்பதாக கேரளத்தில் நம்புவதுபோல, தமிழகத்திலும் பயறின் மகத்துவத்தை நாமும் உணர்ந்து அதைப் பயன்படுத்தத் துவங்குவோம்.
***
பயறு சாப்பிடக் கூடாதவர்கள்:
1. பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.
*
2. பச்சைப் பயறின் தன்மை ஈரலின் பிரச்சினையை அதிகமாக்கும்.
*
3. எனவே ஈரலில் கல் இருப்பவர்களோ, பிரச்சினை உள்ளவர்களோ பச்சைப் பயறை குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
*
4. மேலும், பச்சைப் பயறை வேக வைத்து, அந்த நீரை வடித்துவிட்டுச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
*
5. பச்சைப் பயறை அதிகம் சாப்பிட்டால் உடல் அதிக குளிர்ந்த தன்மையை அடைந்துவிடும். எனவே ஆஸ்துமா, சைனஸ் போன்ற நோயுள்ளவர்கள் கவனமாக கையாள வேண்டும்.
ஓமம் மருத்துவ குணங்கள்!
இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் பழமாகிப் பின் உலர்ந்தகாய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும்.
*
இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.
*
ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன.
ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும்.
ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது.
**
ஓமத்தின் விசேஷம்
சிறிது புரோட்டீன், தாது, உப்புக்களான கால்சியம், அயோடின், பாஸ்பரஸ், அயர்ன், பொட்டாசியம், வைட்டமின்களான தையாமின், ரிபோபிளாவின், நிக்கோடினிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின் மற்றும் கரோட்டின் ஆகியவை உள்ளன.
*
சீதசுரங் காசஞ் செரியாமந் தப்பொருமல்
பேதியிரைச் சல்கடுப்பு பேராமம்-ஓதிருமல்
பல்லொடுபல் மூலம் பகமிவைநோ யென்செயுமோ?
சொல்லொடுபோம் ஓமமெனச் சொல்
-அகத்தியர் குணபாடம்.
*
சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், மூக்கடைப்பு ,பீனிசம். வலி நீக்கியாகவும் பசியைத் தூண்டவும் உதவுகிறது.இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.
*
இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் செரியாமையைப் போக்கும் தன்மை கொண்டது.
***
மருத்துவ குணங்கள்
உடல் பலம் பெற
சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள்.
இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
**
வயிறுப் பொருமல் நீங்க
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை
1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
**
புகைச்சல் இருமல் நீங்க
சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .
**
மந்தம்
பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
**
பசியைத் தூண்ட
நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.
பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.
**
சுவாசகாசம், இருமல் நீங்க
காற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி விட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று, நீரால் சுவாசகாசம், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.
ஓமம் - 252 கிராம்
ஆடாதோடைச் சாறு - 136 கிராம்
இஞ்சி ரசம் - 136 கிராம்
பழரசம் - 136 கிராம்
புதினாசாறு - 136 கிராம்
இந்துப்பு - 34 கிராம்
சேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி. கிராம் அளவு கொடுத்து வந்தால் இருமல், சுவாசகாசம், அஜீரணம் போன்றவை குணமாகும்.
**
1. மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும்.
*
2. ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான்.
*
3. ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
*
4. ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.
*
5. ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
**
6. சோர்வு நீங்க ஓமத்தண்ர்
நம் தினசரி உணவில் ஓமத்தைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். காரக் குழம்பா? ஓமம் வறுத்துப்போடுவோம். மோர்க் குழம்பா? தேங்காயுடன் ஓமத்தை அரைத்துக் போடுவோம்.
ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம். காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு.
*
7. வயிற்றுக் கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து.
*
8. தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது.
**
9. ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.
வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.
நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும்.
மார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெயை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம்
பல்வலி இருந்தால், இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.
வயிறு "கடமுடா" வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம்.
ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.
சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்!.
***
10. தொப்பையை குறைக்க
தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.
**
11. ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து"
" ஓமம், சீரகம் கலவை " வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து. " ஜெலூசில் " போன்ற ந்யூட்ரலலைசர் தேவைப்படாது. பக்க்க விளைவுகளும் கிடையாது.
செய்முறை :
ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் கருகாமல் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து 'மிக்சியில்' போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி, குவியலாக, சாப்பிடலாம்.
மந்த வயிற்றுக்கான அறிகுரி கண்டால் உட்கொள்ளலாம். தற்காப்பக "கல்யாண சமையல் சாதம் " சாப்பிட்ட பிறகும் சாப்பிடலாம். வயிற்றுக் கடுப்புப் புறங்காட்டி ஓடும் !
ஒழிக ஜெலுசில் !
***
12. இடுப்பு வலி நீங்க:
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
*
இனியும் தாமதியாமல் ஓமம் என்னும் அருமருந்தை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளையும், உங்களையும் ஆரோக்கியமானவராக மாற்றி நீண்ட ஆயுளோடு இனிதே வாழுங்கள்.
ரோஜாவின் மருத்துவக் குணம்!
இந்த தாவரம் மேலே ஏறுகிற அல்லது இறங்குகிற செங்குத்தான புதர்காடாக அமைந்து இதன் தண்டு பகுதி பெரும்பாலும் கூரிய முட்கள் கொண்டதாக இருக்கும். ரோஜாவில் முட்கள் உண்டு என்பது ஒரு பொதுவாக நிலவுகிற பிழையான கருத்தாகும். முட்கள் என்பவை திருத்தி அமைக்கப்பட்ட கிளைகள் அல்லது தண்டுகள், ஆனால் ரோஜாவில் காணப்படும் இந்தக் கூரிய நீண்ட அமைப்புகள் திருத்தி அமைக்கப்பட்ட மேல் தோல் போன்ற திசுக்களாகும் (கூர்முனைகள்).
*
இந்த தாவர வகையில் பெரும்பாலானவை ஆசிய கண்டத்தை சேர்ந்தவை. சில வகைகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, வடமேற்கு ஆபிரிக்காவை சேர்ந்தவை. பூர்விக வகைகள், பயிரிடு வகைகள் மற்றும் கலப்பின வகைகள் இவை அனைத்தும் இவற்றின் அழகு மற்றும் நறு மணத்திற்காக பரவலாக வளர்க்கப்படுகின்றன.
*
இதன் இலைகள் ஒன்று விட்டு ஒன்றாக இறகு போன்ற அமைப்புடனும் கூரிய முனைகளுடன் நீள்வட்ட வடிவத்தில் சிறுசிறு இலைக்கொத்துக்களாகவும் இருக்கும். இந்தத் தாவரத்தின் உட்கொள்ளக்கூடிய சதைப்பிடிப்பான பழம் "ரோஜாவின் இடுப்பு" என்று அழைக்கப்படுகிறது. மெலிந்த, மிகச்சிறிய ரோஜா மலர் வகையிலிருந்து 20 மீட்டர் உயரம் ஏறக்கூடிய வகை வரை ரோஜா தாவரம் வடிவத்தில் பலவகைப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்த தாவர வகைகளை எளிதாக கலப்பியலுக்கு உட்படுத்த முடிவதால், பல விதமான தோட்ட ரோஜாக்களைக் காண முடிகிறது.
*
ரோஜா என்பது கிரேக்க தேசத்தின் காலனி ஆதிக்கத்திலிருந்த தெற்கு இத்தாலியின் ஆஸ்கன் மொழியிலிருந்து பெறப்பட்ட லத்தீன வார்த்தை ரோசா விலிருந்து வருவது. ரோடான் (யலிக் வடிவம் : வ்ரோடான் ), ஆரமைக்லிருந்து வர்ரதா, அஸீரியன் இலிருந்து உர்டினு , பழங்கால ஈரானியநிலிருந்து வார்தா (மேலும் பார்க்க : ஆர்மேனியன் வர்த், அவெஸ்தான் வார்தா, சொக்டியான் வர்த் - மேலும் ஹீப்ருவின் வெரட் இவை மேற்கூறிய கிரீக்க வார்த்தைக்கும் முற்பட்டவை.
*
ரோஜாவின் இத்தர் எனப்படும் ரோஜா மலர்களிலிருந்து நீராவி முறையில் பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் பல நூற்றாண்டுகளாக நறுமணப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஜா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படும் ரோஜா நீர் ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளின் சமையல் முறையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ரோஜா இதழ்களின் சாறிலிருந்து தயாரிக்கப்படும் ரோஜா பானகம் பிரெஞ்சு மக்களிடையே பிரசித்தம். அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ரோஜா ஸ்கோன் எனப்படும் கேக் தயாரிக்க இந்த பிரென்ச் ரோஜா பானகம் பயன்படுத்தப்படுகிறது.
*
ரோஜாவின் இடுப்பு அரிதாக பழக்கூழ், பழக்கூழ்பாகு, பழப்பாகாக மாற்றப்படுகிறது அல்லது முதன்மையாக அதில் அதிக அளவில் அடங்கியிருக்கும் விட்டமின் சிக்காக தேநீர் தயாரிக்கக் காய்ச்சப்படுகிறது. அவை பிழியப்பட்டு வடிகட்டப்பட்டு ரோஜா இடுப்பு பானகம் தயாரிக்கப்படுகிறது. ரோஜாவின் இடுப்புகள், சருமப் பொருட்கள் மற்றும் சில அலங்காரப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ரோஜா இடுப்பு விதை எண்ணெய் தயாரிக்கவும் பயன்படுத்தப் படுகின்றன.
***
ரோஜாவின் மருத்துவக் குணம்:
பிறந்தகம் அந்நிய பூமியாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டு அங்கிங்கெனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
*
இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை,மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும்.
*
குழந்தைகளின் சீதபேதிக்கு இதனிடம் இருக்கும் துவர்ப்புச்சத்து மருந்தாகி குணமாக்குகிறது. அஜீரணமா? வயிற்று வலியா? வேக்காளமா? அனைத்தும் இதனைத் தொகையலாக்கி உண்டாலே பறந்தோடும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.
*
மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது.
*
அன்பிற்குரியோருக்கு தந்தது ஆரத் தழுவ வைக்கும் இந்த ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. பூவையர்க்கு ஏற்படும் கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு நன்கு வேலை செய்து அவர்களைப் புன்னகை பூக்க வைகப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது ரோஜா.
செம்பருத்திப்பூவில் தங்கச்சத்து !
சில்லென்ற உடலுக்கு செம்பருத்தி
கோபத்தினால் உடலின் வெப்பம் அதிகப்பட்டு, ரத்த அழுத்தம் கூடி, நாளமில்லா சுரப்பிகளில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி, ஹார்மோன்களை சீர்குலைத்து பல நோய்களை உண்டாக்கிவிடுகின்றன. மேலும், அடிக்கடி கோபம் ஏற்படுவதால் உடல் எப்பொழுதும் சூடாக இருப்பது போன்ற ஒருவித உணர்ச்சி, முகத்தில் ஒருவித வெறி, மனம் அமைதியின்மை ஆகியன ஏற்பட்டு சமூகத்தில் இருந்து ஒதுங்க ஆரம்பிக்கின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர்.
*
உடலில் பித்தத்தின் அதிகரிப்பால் தோன்றும் இந்த கோபத்தை பித்தபிரமேகம் என்று மனம் சார்ந்த நோயாக சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது. உடல் மற்றும் மனதில் தோன்றும் ஒருவித உஷ்ணம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தி, உடலுக்கு குளிர்ச்சியையும், மனதிற்கு அமைதியையும் தரும் அற்புத மூலிகை செம்பருத்தி.
*
சிவப்புநிற பூக்களையுடைய பருத்திச் செடியே செம்பருத்தி என்று அழைக்கப்படுகிறது. காசிபியம் ஆர்போரியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் பூக்களே மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகின்றன. இதே குடும்பத்தைச் சார்ந்த செம்பரத்தை செடிகளை நாம் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகளாகும்.
*
செம்பரத்தை செடிகளும், செம்பருத்திச் செடிகளும் வேறு, வேறு செடிகளாகும். செம்பருத்தி செடிகளின் பூக்களிலுள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துடன், அதிக சூடு மற்றும் வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் வராமல் நம்மை காக்கின்றன.
*
செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்து, அம்மியில் வைத்து மைய அரைத்து, அரைநெல்லிக் காயளவு உருண்டையாக உருட்டி, பாலுடன் கலந்து காலை மற்றும் மாலை தொடர்ந்து 5 நாட்கள் உட்கொண்டு வர தேவையற்ற கோபம் மற்றும் பதட்டத்தினால் உண்டான உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியுண்டாகும்.
*
செம்பருத்திப் பூக்களின் பூவிதழ்கள் அரை கைப்பிடி, சீரகம்-1 கிராம், நெல்லிவற்றல் - 1 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை அருந்தி வர அதிக உடல் உஷ்ணம் தணியும், செம்பருத்தி பூவிதழ்களை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சியோ அல்லது தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தோ தலையில் தேய்த்து வரலாம். இதனால் தலைசூடு தணியும்.
***
இருதய நோய் குணமாக...
செம்பருத்திப்பூவில் தங்கச்சத்து உள்ளது. பூவின் மொத்த எடையில் 4ல் ஒரு பாகம் தங்கச்சத்து உள்ளது. செம்பருத்திப்பூக்களைப் பக்குவப்படுத்தி சாப்பிட்டால், தங்கச்சத்தின் பலனைப் பெறமுடியும்.
*
செம்பருத்திப்பூ உஷ்ண நிவாரணி. கல்லீரல், இருதயம், மூத்திரப்பை வியாதிக்கும் கணைச்சூடு, எலும்புருக்கி, மேகக்காரிகை, வெள்ளை, வெட்டை, ரத்தப் பிரமியம், நீர்க்கடுப்பு, எரிச்சல், கல்லீரல் வீக்கம் முதலியவற்றிற்குச் சிறப்பான நிவாரணியாகும்.
*
ஐந்து செம்பருத்திப் பூக்களை அரை லிட்டர் தண்ரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டால், காய்ச்சல், நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.
*
செம்பருத்திப்பூக்களை நூறு எண்ணிக்கையில் சேகரித்து 1,250 மில்லி நீரில் போட்டுக் காய்ச்சி 500 மில்லியாக வந்ததும் வடிகட்டி இதில் ஒரு கிலோ žனி சேர்த்து சர்பத் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு, குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி பால் அல்லது வெந்நீரில் கலந்து 4-50 தினங்கள் கொடுத்தால், குழந்தைகளின் கணைச்சூடு நிரந்தரமாகக் குணமாகும்.
*
நவீன மருத்துவத்தில் கணைச்சூட்டை நிரந்தரமாகக் குணமாக்க முடியாது. சயரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சர்பத்தைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டால் சயரோகம் முழுமையாக நிவர்த்தியாகும்.
*
கல்லீரல், இருதய நோய்கள் குணமாகும்.
*
ஒரு கைப்பிடியளவு பூக்களை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொதிக்கும் வெந்நீர் இரண்டு டம்ளர் விட்டு, மூடிவைக்க வேண்டும். பத்து நிமிடங்கள் சென்றபின் எடுத்து வடிகட்டி பால், சர்க்கரை தேவைக்குச் சேர்த்துச் சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் உபயோகித்து வந்தால், கணைச்சூடு நீங்கும். கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும்.
*
ரத்தசோகை நீங்கும். இதய பலவீனம் நீங்கும். மூளையின் செயல்பாடுகள் பலம் பெறும். இரத்தவிருத்தி உண்டாகும். வெள்ளை, வெட்டை நோய்கள் நீங்க பூக்களைச் சேகரித்து அரைத்து ஒரு எலுமிச்சங்காய் அளவில் எடுத்து பசும் பாலில் கலக்கி காலை, மாலை ஆகாரத்துக்கு முன், மூன்று தினங்கள் சாப்பிட்டால் குணமாகும்.
*
செம்பருத்திப்பூக்களின் மத்தியில் உள்ள மகரந்தக் காம்புகளைச் சேகரித்து, இதில் உள்ள மகரந்தப் பொடியை நன்றாகக் காயவைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி பொடியைப் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும். ஆண் தன்மை அதிக வலிமை பெறும்.
*
செம்பருத்திப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து, 250 மில்லி தண்ரில் போட்டு நன்றாக ஊறும்படி வைத்திருக்கவேண்டும். நன்றாக ஊறியபின் இந்த நீரைக் குடித்து வந்தால் சிறுநீர் தொடர்பான நோய்கள் நீங்கும். நீரடைப்பு, நீர் எரிச்சல் உடனே நிவர்த்தியாகும்.
*
செம்பருத்திப்பூ இதழ்களைச் சேகரித்து நிழலில் நன்றாக உலர்த்தி எடுத்து, ஒரு கிலோ அளவிற்கு ஒரு ஜாடியில் போட்டு, இதில் கால் கிலோ தேன் சேர்த்து 5 கிராம் ஏலப்பொடியையும் இதில் சேர்த்து ஒன்றாகக் கலந்து மூடி வைக்கவேண்டும். பத்து தினங்கள் ஊறியபின் ஒருநாள் சூரிய வெப்பத்தில் வைத்து எடுத்துப் பயன்படுத்தவேண்டும்.
*
காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு எடுத்துச் சாப்பிட்டு வந்தால் கணைச்சூடு, எலும்புருக்கி, கல்லீரல் வீக்கம், மேகக் காங்கை, இருதய பலவீனம் நீங்கும்.
தினமும் காலையில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்
அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்:
1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
*
2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
*
3. வயிற்றுப் புண் குணமாகும்.
*
4. இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
*
5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
*
6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
*
7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
*
8. மலச்சிக்கல் நீங்கும்.
*
9. புற்று நோய்க்கு நல்ல மருந்து.
*
10. உடல் இளைக்க உதவும்
*
11. இரவில் நல்ல தூக்கம் வரும்.
*
12. பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
*
13. மூட்டு வலி நீங்கும்.
*
14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
*
15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.
*
16. அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
*
17. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.
*
18. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.
*
அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.
சிறுகீரை அதன் மருத்துவ குணங்கள்!
இச்சிறுகீரையில் உள்ள சத்துக்கள்:
இச்சிறுகீரையில் 90 விழுக்காடு நீர் இருக்கிறது
சக்தி - 33 கலோரி,
நீர்சத்து - 90கிராம்,
புரதம் - 2.8கிராம்,
கொழுப்பு - 0.3கிராம்,
தாதுக்கள் - 2.1கிராம்,
கார்போஹைட்ரேட் - 4.8கிராம்,
கால்சியம் - 251 மில்லி கிராம்,
பாஸ்பரஸ் - 55 மில்லி கிராம்,
இரும்பு - 27.3 மில்லி கிராம்
ஆகிய சத்துக்கள் உள்ளன.
***
பயிரிடப்படும் முறை:
சாதாரணமாக இந்தியாவெங்கும் தோட்டங்களிலோ, வீட்டுத் தோட்டங்களிலோ பயிர் செய்யப்படும் கீரை வகைகளில் இக்கீரையும் ஒன்றாகும். இக்கீரையானது வட இந்திய மலைப் பகுதிகளில் ஏராளமாக விளையக்கூடியது.
*
இந்தக் கீரையானது முளைக்கீரை, தண்டுக் கீரை ஆகிய கீரைகளின் இனத்தைச் சார்ந்த சிறிய கீரை வகையாகும். சுமார் இருபது செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது; செங்குத்தாக வளரும். நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இச்செடி மிக மெல்லிய தோற்றமுடையது.
*
இச்செடி 10 செ.மீ. உயரம் வளர்ந்தவுடனேயே கீரையைப் பறித்து உணவுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இக்கீரையை மசியலாகச் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். கறி சமைக்கவும் இக்கீரை உதவுகிறது. இக்கீரையின் இலைகளையும் தண்டுகளையும் முளைக்கீரையைப் போலவே உணவாகத் தயா¡¢த்துப் பயன்படுத்தலாம். இக்கீரை விதையும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
*
இக்கீரை இந்தியாவெங்கிலும் தோட்டப் பயிராகவும், காட்டுப்பயிராகவும் பயி¡¢டப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும் பயிர் செய்யலாம். விதையைப் பாத்திகளில் விதைத்து வளர்க்கலாம். இக்கீரையைப் பயி¡¢டுவதற்கு முன் இதற்கு¡¢ய பாத்தியை முன்பே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
*
பாத்திகளைக் கொத்தி எருவிட்டு வைத்துக்கொள்ளுதல் நலம். கோடைகால இறுதியில் விதைகளை அதிக நெருக்கமில்லாமல் விதைப்பது நல்லது. விதைத்த பாத்திகளில் பூவாளியினால் தண்ணீரைத் தெளிப்பது சிறந்த முறையாகும். இவ்வாறு தண்ணீரை காலை வேளைகளில் தெளிப்பதுதான் நல்லது.
*
ஐந்தாறு நாட்களில் விதைகள் எல்லாம் நன்கு முளைத்துவிடும். இருபத்தைந்து நாட்களில் கீரை தயாராகிவிடும். நாற்பது அல்லது ஐம்பது நாட்களில் கீரை தக்க முதிர்ச்சியடைந்துவிடும். அப்பொழுது கீரையைச் செடியோடு பிடுங்கி உபயோகப்படுத்தலாம்.
*
இக்கீரைக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. ஆனால் பாத்தி எப்போதும் ஈரமாக இருக்கவேண்டும். இக்கீரைக்கு நிழல் கூடாது, வெளிச்சம் மிகுதியும் தேவை. ஆனால் வெப்பம் மிகுதியான காலங்களில் இக்கீரைக்கு அடிக்கடி நீர்பாய்ச்சுதல் வேண்டும்.
***
மருத்துவ குணங்கள்:
பெயரில் தான் சிறுகீரையே தவிர பலன்கள் அதிகம். இக்கீரையை பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் விலகும்.
*
இந்தக் கீரையை தினமும் சமைத்துச் சாப்பிட இரும்புச் சத்தும், புதுரத்தமும் உடலில் பரவும்.
*
காச நோய் குணமாகும். நீர்க்கடுப்பு, வீக்கம், பித்தநோய் சரியாகும்.
*
பெண்களின் மேனி எழிலுக்கு ஒரு வரப்பிரசாதம் இக்கீரை. உடல் நலிவுக்கு மருந்து சாப்பிடும்போது மட்டும் சிறுகீரை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும்.
*
சிறுகீரை ஒரு சத்து மிகுந்த கீரையாகும். இது மருத்துவ மகத்துவம் வாய்ந்தது. இந்தக் கீரையையினால் உடலுக்கு அழகும் வனப்பும் கிடைக்கும்.இது காச நோய்,படலம்,பாதரச வேகம், வெரணம், மூத்திரக் கிரிச்சர வீக்கம், பித்த் நோய், தாவரங்களினால் ஏற்படும் நஞ்சு முதலியவைகள் நீங்கும்.
*
மேலும் இக்கீரை வாத நோயை நீக்க கூடியது என்பார்கள்.அத்துடன் கல்லீரலுக்கும் நன்மையைச் செய்யும். விஷக்கடி முறிவாக பயன்படக்கூடிய இக்கீரை , சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளையும் அகற்றவல்லது.
*
இக்கீரையுடன் சீரகம், மிள்கு, சோம்பு, வெங்காயம், இஞ்சி, தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து சூப் வைத்தும் சாப்பிடலாம், கீரையை கடைந்து சாதத்துடனும் சாப்பிடலாம்.
*
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் சாப்பிட்டால் இன்சுலின் இயல்பாக சுரக்கும் என்பார்கள்.
*
நல்ல சுவையும் நாவிற்கு ருசியும் உடலுக்கு வலுவும் கொடுக்கும் இக்கீரையை வீட்டுத்தோட்டங்களில் வளர்த்து உணவுடன் சேர்த்து பயனடையுங்கள்.
முளைக் கீரையின் மருத்துவ குணங்கள்!
முளைக்கீரையும் தண்டுக்கீரையும் ஒன்றுதான் எனக் குறிப்பிடுகிறார்கள். இளம் நாற்றுக்களை முளைக்கீரை எனவும் வளர்ந்தனவற்றைத தண்டுக்கீரை எனவும் கூறப்படுவாகக் குறிக்கிறார்கள்.
*
ஏனெனில் இவ்விரண்டு கீரைகளினுடைய பயிறியல் பெயர்கள் "அமரந்தஸ்" "காஞ்செடிகஸ்" (Amarantus Gangeticus) என்றிருப்பதனால் இவ்வாறு கருதப்பட்டது போலும். ஆனால் இவ்விரு கீரைகளும் வேறு வேறானவை.
*
முளைக்கீரை ஓர் குறுகிய காலப்பயிர். 45 நாட்கள் வரை வளரக் கூடிய கீரை. அதற்கு மேல் விட்டால் அந்தக் கீரையானது முதிர்ந்து தண்டு நார் பாய்ந்துவிடும். இளங்கீரைகளையே பிடுங்கிப் பயன்படுத்த வேண்டும். தண்டுக் கீரையோயெனில் ஒரு நீண்ட நாள் பயிர்; இது ஆறுமாத கீரை என அழைக்கப்பட்டாலும் 100-120 நாட்களுக்கு வளர்க்கலாம்.
*
100 நாட்களுக்கு மேல் ஆனால் கூட தண்டுக் கீரையின் தண்டு சமைப்பதற்கு ஏற்றதாக இருக்கும். ஏறக்குறைய 100-லிருந்து 120 நாட்களுக்குட்பட்ட கீரைத்தண்டே மிகச் சிறப்புடையது. இக்கீரைத்தண்டு முளைக் கீரையைப் போல் வேகமாக வளராது. இளந்தண்டுகளில் அதிகக் கீரை இருக்காது.
*
செழிப்பான மண்ணில் வளரும் போது தண்டுகள் சிறிது கூட நார் இல்லாமல் சுவையாக இருக்கும். தண்டுக் கீரையின் இளங்கீரையைப் பிடுங்கிப் பயன்படுத்தலாம். ஆனால் அது நன்கு வளர்ந்தபின் பயன்படுத்தினால் தான் அதிகளவு சாப்பிடக்கூடிய தண்டு இலை முதலியன கிடைக்கும்.
*
எனவே தண்டுக் கீரையை நன்கு வளர்ந்தபின் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் முளைக்கீரையோயெனில் முதிராமல் இளமையிலேயே அதாவது ஏறக்குறைய 45 நாட்களுக்குள்ளேயே பயன்படுத்த வேண்டும்.
*
முளைக்கீரைக்கு இளங்கீரை என்ற மற்ற பெயரும் உண்டு. முளைக்கீரை உணவுச் சத்துக்கள் மிகுந்த ஒரு கீரையாகும். இக்கீரையை சமையல் செய்துண்ண நாவுக்கு உருசியைத்தரும். முளைக் கீரையை மற்றப் பருப்பு வகைகளுடன் சேர்த்துக் கூட்டாகவும், மசியலாகவும் செய்துண்ணலாம். இதனைப் பொறியல் செய்து சிறிது தேங்காய்த் துருவல் சேர்த்து உண்ண மிகச் சுவையாக இருக்கும்.
*
இக்கீரையில் உண்ணும் தகுதிபெற்ற பகுதி முழுச் செடியில் 39 விழுக்காடு ஆகும். முளைக்கீரையில் 85.7 விழுக்காடு நீரும், 4 விழுக்காடு புரதச்சத்தும், 0.5 விழுக்காடு கொழுப்புச் சத்தும், 2.7 விழுக்காடு தாதுப்புக்களும், ஒரு விழுக்காடு நார்ச் சத்தும், 6.3 விழுக்காடு மாவுச் சத்தும் நிறைந்துள்ளன.
*
இக்கீரை 46 கலோரி சக்தியைக் கொடுக்கக் கூடியது. நூறு கிராம் கீரையில் 397 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும், 247 மில்லி கிராம் மெக்னிசியமும், 772 மில்லி கிராம் ஆக்ஸாலிக் அமிலமும், 83 மில்லி கிராம் மணிச்சத்தும், 25.5 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 230 மில்லி கிராம் சோடியமும், 341 மில்லி கிராம் பொட்டாசியமும், 0.33 மில்லி கிராம் தாமிரச் சத்தும்எ 61 மில்லி கிராம் கந்தகச் சத்தும், 88 மில்லி கிராம் குளோரின் சத்தும் அமைந்திருக்கிறது.
*
இக்கீரை ஒன்றே எல்லாவிதமான தாதுப்புக்களையும் தன்னுள் அடக்கியுள்ளது என்பது தெள்ளத் தெளிந்த உண்மையாகும். இதனை நாள்தோறும் உணவுடன் சேர்த்துக்கொள்வதால் ஒரு பூரண உணவுக்குரிய எல்லாச் சத்துக்களையும் கொடுக்கக் கூடியது.
*
இக்கீரையுள் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தைச் சுத்தி செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லன. மற்றும் இதிலடங்கியுள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவுச் சத்தாகும். எலும்பினுள்ளே அமைந்துள்ள ஊண் அல்லது 'மேதஸ்' என்னும் மூளை வளர்ச்சிக்கு இம்முளைக் கீரையில் அமைந்துள்ள மணிச்சத்து பொரிதும் உதவுகின்றது.
*
நூறு கிராம் முளைக் கீரையில் 9,000/IU (அகில உலக அலகு) வைட்டமின் A அமைந்திருக்கிறது.
***
இக்கீரையைப் பயிரிட்டுப் பயன்பெறுவது:
முளைக்கீரை விதை, நன்கு உரமுள்ள நிலத்தில் நெருக்கமில்லாதபடி விதைத்து மேலே சிறிது மணலைத் தூவிவிடுதல் வேண்டும்.
*
இவ்வாறு விதைக்கப்பட்ட விதைகளின் மேல் வைக்கோலைப் போட்டு மூடி அதன் மீது பூவாளியைக் கொண்டு தண்ணீர் தெளிப்பது நல்லது. விதை விதைத்த உடனேயே தண்ணீர் தெளிப்பது மிகவும் முக்கியம். மூன்று நாட்களுக்குப் பிறகு மேலே மூடப்பட்ட வைக்கோலை நீக்கிவிட வேண்டும். நான்காம் நாள் விதைகள் நன்கு முளைத்துவிடும். முளைத்துவந்த செடிகளுக்கு அடிக்கடி தண்ணீர் விடக்கூடாது.
*
விதைக்கப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்கு மழையில்லாமலிருப்பது நல்லது. அவ்வாறு மழை பெய்தால் முளைத்த கீரையெல்லாம் அழுகிக்கெட்டுப்போய் விடும். பதினைந்து நாட்கள் ஆன பிறகு வேண்டிய கீரைகளை அவ்வப்போது நெருக்கம் கலையும்படியாகச் சிறது சிறிதாகப் பிடுங்கிப் பயன்படுத்தலாம். களைகளை அகற்றி போதியளவு நீர்பாய்ச்சி வந்தால் 4 வாரத்திலிருந்தே கீரையைப் பிடுங்கிப் பயன்படுத்தத் தக்க நிலையை அடையும். 6 வாரத்தில் எல்லாக் கீரைகளையும் பறித்து விடலாம்.
*
உணவுக்காக கீரையைப் பறிக்கும் பொழுது கீரை பூக்குமுன் பறித்துவிடுதல் நல்லது. அப்போதுதான் கீரையின் தண்டு நார் இன்றி மென்மையாக இருக்கும். செடி பூத்துவிட்டால் தண்டுப் பாகம் முதிர்ந்து நார் பாய்ந்துவிடும். அடைமழை பெய்யும் காலம் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் இக்கீரையைப் பயிர் செய்யலாம்.
*
சிறுசிறு பாத்திகளில் ஆண்டு முழுவதும் பயிரிட்டுக்கொண்டே வரலாம். காலத்தே பறித்த முளைக்கீரையும் அதன் தண்டும் நாவுக்கு உருசியும், உடலுக்கு வலுவும் தருவதால் வீட்டுத் தோட்டத்தில் இக்கீரையைப் பயிரிட்டுப் பயன்பெறுவது சிறந்ததாகும்.
***
மருத்துவ குணங்கள்:
1. முளைக் கீரையானது சிறந்த மருத்துவக் குணங்களைப் பெற்றிருக்கிறது. இதை சமையல் செய்துண்ண நாவுக்கு உருசியைக் கொடுப்பதோடு நல்ல பசியையும் கொடுக்கக் கூடியது.
*
2. இக்கீரையை நன்கு ஆய்ந்து அலம்பிச் சுத்தப்படுத்தி பாத்திரத்திலிட்டு சிறிது அரிந்த வெங்காயத்துடன் பச்சை மிளகாயைக் கூட்டி உப்பிட்டுக் கடைந்து உட்கொண்டால் உட் சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குணமாகும். அத்துடன் கண் குளிர்ச்சியைப் பெறும்.
*
3. சொறி சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்தக் கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது; குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை யாவரும் உண்ணலாம். முளைக்கீரை வீட்டுத் தோட்டம் முதல் எல்லா வகை நிலங்களிலும் பயிரிடலாம்.
*
4. வயது முதிர்ந்து நாடி, நரம்புகள் தளர்ந்து போனவர்களும், நடுத்தர வயதினரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கீரை முளைக்கீரை. இந்தக் கீரை மிகவும் ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
*
5. சிறுவர், சிறுமியருக்கும் முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது.
*
6. கீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும். வருடம் முழுவதும் தடையின்றி கிடைக்கும்.
*
7. முளைக்கீரையை விதைத்த பின்னர் 45 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். அதற்கு மேல் வளர விட்டால்கீரை முதிர்ந்து தண்டு நார் பாய்ந்துவிடும். உண்ணுவதற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் முளைக்கீரையும் ஒன்று.
*
8. நல்ல மலமிளக்கியாகவும் அது விளங்குகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
*
9. முளைக்கீரையைப் பருப்புடன் நன்கு வேக வைத்து மசித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
*
10. முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். முளைக் கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள் இரத்தத்தை சுத்தி செய்து உடலுக்கு அழகையும் மெருகையும் ஊட்டுகின்றன.
*
11. இக்கீரையில் மட்டுமே எல்லா விதமான தாது உப்புக்களும் உள்ளதால் இதை நாள்தோறும் உணவுடன் சேர்த்துக்கொண்டால் ஒரு பரிபூரண உணவுக்குரிய எல்லாச் சத்துக்களையும் நாம் பெற முடியும்.
*
12. முளைக்கீரை காச நோயின் துன்பத்திலிருந்து விடுபட வைக்கும்.
வீட்டிலேயே சீயக்காய் தயாரிப்பது பற்றி
சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) - 100 கிராம்
எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25
பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ
மருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்
கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப் அளவ
*
மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதக் கஞ்சி தேவையில்லை.
நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் காய்கறிகள்
அந்த வகையில் காய்கறிகளில் நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான விட்டமின், கனிமச் சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன.
*
அதேநேரத்தில் காய்கறிகளை உண்பதால், உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளால் கலோரி அளவும் குறைவாகவே இருக்கும்.
*
பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோடின், உடலுக்கு விட்டமின் ஏ சத்தினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன.
*
பீட்டா கரோடினானது புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும்.
*
நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.
*
மிளகு, முட்டைக்கோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பச்சை நிறை காய்கறிகள் அனைத்திலுமே வைட்டமின் சி உள்ளது. இவற்றை உண்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
*
வேறு சில காய்கறிகளில் இரும்புச் சத்துகள் அதிகம் இருக்கும். இவற்றால் உடலின் இரத்தம் தூய்மையாவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிகக் குறைவான இரும்புச் சத்து இருப்பின் அனீமியா எனப்படும் இரத்த சோகை நோய் ஏற்படும்.
*
பட்டாணி, கொண்டைக் கடலை உள்ளிட்ட பயறு வகைகள், பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது.
*
முட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை வண்ணத்திலான காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால், ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது.
*
அனைத்து காய்கறிகளுமே நார்ச்சத்தினைக் கொண்டிருக்கின்றன. தவிர அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவனாய்ட்ஸ் காணப்படுகிறது,
*
தவிர மிளகாய், பூசணி, கத்தரிக்காய், காரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சைக் கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது.
*
உடலின் பொட்டாசியம் அளவு சக்தி தேவைக்கு முக்கியப் பங்காற்றக் கூடிய நிலையில், பழங்கள், காய்கறிகளில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. தவிர, பழங்கள், காய்கறிகளில் அமினோ அமிலங்களும் உள்ளதால். உடலின் சுரப்பி செயல்பாடுகளை பராமரிக்க ஏதுவாகிறது.
*
எனவே அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்.
இயற்கை மருத்துவம்.
உடற்சூட்டை தணிப்பவை:
பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்.
***
ருசியின்மையைப் போக்குபவை:
புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி.
***
சிவப்பணு உற்பத்திக்கு:
புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , கேழ்வரகு ,பசலைக்கீரை.
***
மருந்தை முறிக்கும் உணவுகள்:
அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்.
***
விஷத்தை நீக்கும் உணவுகள்:
வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்பித்தம் தணிப்பவைசீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை.
***
நெஞ்சு சளி:
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
***
தலைவலி:
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
***
தொண்டை கரகரப்புசுக்கு:
பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
***
வாய் துர்நாற்றம்:
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய்துர்நாற்றம் நீங்கும்.
***
தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா:
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க, முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
***
வேனல் கட்டி தொல்லையா:
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
***
மேலும் சில மருத்துவ துளிகள்:
1. தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அண்டாது.
*
2. பொன்னாங்கண்ணி கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும்.உடம்பில் உள் சூடும் குறையும். இக்கீரையின் தைலத்தை தலை முழுகப் பயன்படுத்தி வந்தால் கண் நோய் அண்டாது. உடல் சூடு தணியும்.
*
3. அரைக் கீரை தைலமும் உடல் சூட்டைத் தணிக்கும்.
*
4. பாகற்காய் வற்றலை உணவுடன் உண்டு வந்தால் மூலம், காமாலை நோய் தீரும்.
*
5. ஹோட்டல்களில் சாப்பிடுவதால் ஏற்படும் நாக்குப் பூச்சித் தொல்லை, சிறுவர்களுக்கு ஏற்படும் வயிற்றுப்பூச்சித் தொல்லை நீங்க சுண்டைக்காயை உணவுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
*
6. இரவு உணவில் சுண்டைக்காய் வற்றலை சேர்த்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, காச நோய் நீங்கும். வயிற்றுப் போக்கும் நிற்கும்.
*
7. கற்கண்டு, இஞ்சி சாறு சேர்த்து அருந்திவர நீரிழிவு நோய் கட்டுப்படும்.
8. இஞ்சி ஊறுகாய் ஜீரணத்துக்குப் பயன்படும். பித்தத்தைத் தணிக்கும்.
*
9. மருதாணி இலையை எலுமிச்சைச் சாற்றில் கலந்து அரைத்து கட்டினால் குதிகால் வாதம், பாத எரிச்சல் தீரும்.
*
10. வெள்ளை கரிசலாங் கண்ணி தைலத்தைத் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கறுக்கும்.
*
11. கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழா நெல்லி ஆகிய இலைகளை சம அளவில் அரைத்து பாக்கு அளவில் எடுத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
*
12. கீழாநெல்லி செடியின் வேரை பசுமையாக 20 கிராம் எடுத்து அரைத்து பால், தயிர், மோர் என ஏதாவது ஒன்றுடன் கலந்து பருகினால் கை, கால் வலி நீங்கும். தேனில் கலந்து பருகி வர அம்மை நோய் தணியும்.
*
13. அரச இலையை அரைத்து பூசி வந்தால் கால் வெடிப்பு, ரணம் குணமாகும்.
*
14. அகலில் வேப்பெண்ணெயை விட்டு இரவில் எரித்து வந்தால் கொசுக்கள் பறந்துவிடும்.
*
15. துளசி இலையை வாயில் போட்டு மென்று தின்றால் பல் வலி, கூச்சம் நீங்கும். சில இலைகளைக் கசக்கி முகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பு நீங்கும்.
*
16. பிஞ்சு வில்வக் காயை அரைத்து தயிரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, ரத்த பேதி குணமாகும்.
*
17. அறுகம்புல்லை அரைத்து காய்ச்சிய பாலில் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் ரத்த மூலம் நிற்கும்.
*
18. வேப்பிலையை அரைத்து கட்டி வந்தால் ஆறாத ரணமும் ஆறும். உடையாத பழுத்த கட்டியும் உடையும்.
*
19. வேப்பங்கொட்டையினுள் உள்ள பருப்பை மை போல் அரைத்து வெந்நீரில் கலந்து குடித்தால் நஞ்சு நீங்கும்.
*
20. முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா?
*
ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன்,சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை...
இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள்.
*
தினமும் இரவு தூங்கப் போகும்போதுபருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.
*
இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.
சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்:
துளசி:-
ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.
***
வில்வம்:-
காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.
***
அருகம்புல்:-
எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும்.
அடுத்து மதியச் சாப்பாடுதான். இந்த மாதி¡¢ செய்தால் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகா¢க்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான்.
தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது. விநாயகர் கோயில்களில் அருகம்புல் கிடைக்கும்.
***
அரச இலை:-
ஏழைகளின் டானிக் அரச இலைச்சாறு, நல்ல மலமிளக்கி, உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது. காம உணர்ச்சிகளைத் தூண்டும்; கர்ப்பப்பைக் கோளாறுகள் மறையும். காய்ச்சலுக்கும் நல்லது. அரசமரத்தின் பழங்கள் மலட்டுத் தன்மையை நீக்கவல்லது. எல்லா விநாயகர் கோவில்களிலும் அரசமரம் இருக்கலாம்.
***
பூவரசு:-
நல்ல டானிக், தீக்காயங்கள், புண்கள், தோல் வியாதிகள், தொழுநோய் எல்லாவற்றிற்கும் இந்த இலையை அரைத்துப் பூசலாம். சாறும் குடிக்க வேண்டும். பேதி, சீதபேதிக்கு சாறு மிகவும் சிறந்தது.
***
கல்யாண முருங்கை (முள் முருங்கை):-
அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும். நீர் பி¡¢யும், மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும். நீ¡¢ழிவு, சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.
வாழைத்தண்டு:-
சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது.
பாம்புக்கடி போன்ற விஷத்தை வெளியேற்ற உதவுகிறது. (Very effecitve in kidney disorders).சிறுநீர் தொல்லைகள் வராமல், சிறுநீரகத்தைக் கழுவி சுத்தம் செய்வதற்காக ஆரோக்கியமாக வாழ்பவர்கள் கூட வாரம் இரண்டுநாள் வாழைத்தண்டு சாறு குடிக்க வேண்டும்.
***
கொத்தமல்லி:-
இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
***
கறிவேப்பிலை:-
நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், எ¡¢ச்சல், ஈரல் கோளாறுகள் மறையும்.
***
புதினா:-
நல்ல டானிக் சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி.
***
கற்பூர வல்லி (ஓமவல்லி):-
மிகச் சிறந்த இருமல் மருந்து. 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும். புகழ்பெற்ற இருமல் மருந்துகளைப் போல் விரைவாக செயல் புரியும்.
***
வல்லாரை:-
நல்ல டானிக், எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.
***
கண்டங்கத்திரி:-
காசநோய், ஆஸ்துமா, மார்சளி, காய்ச்சல், தொழுநோய், இரத்த அழுத்தம், பக்கவாதம், கல்லீரல் நோய்கள் முதலியவற்றிற்கு மிகவும் சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.
***
தூது வேளை:-
நரம்புத்தளர்ச்சி மறையும், மார்புச்சளி அகற்றும், தோல் வியாதிக்கும் நல்லது. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக் ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும். காது மந்தம், நமைச்சல், உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் தூது வேளை நல்லது.
***
குப்பைமேனி:-
ஒரு நேரத்தில் ஐந்து இலை சாப்பிட்டால் போதுமானது. கிருமிகளை வெளியேற்றும். பாம்புக் கடிக்கும் நல்லது. மூட்டுவாதம், சொறி, சிரங்கு, தோல் வியாதி, மூலம் முதலிய நோய்கள் குணமடையும். எந்தப் புண்ணுக்கும் இலையை அரைத்து பூசலாம். சொறி சிரங்குக்கு கட்டாயம் இலையை அரைத்தும் பூச வேண்டும். வெகு நாட்களுக்கு சிரங்கைக் குணப்படுத்தாவிட்டால் அது சிறு நீரகத்தைப் பாதிக்கும்.
மஞ்சள் கா¢சாலங்கண்ணி:-
காமாலை, கண்கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றிற்கு சிறந்தது.
***
செம்பருத்தி:-
மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது. காமத்தை வளர்க்கும். சர்க்கரை வியாதிக்கும் நல்லது. இதன் பூக்களையும் சாப்பிடலாம் அதில் தங்கச் சத்து நிரம்பியுள்ளது. பூவிலுள்ள மகரந்தத்தை நீக்கிவிடவும்.
***
மணத்தக்காளி கீரை:-
இதுவும் ஒரு டானிக் சீரணக் கோளாறுகள், வாய்வுத் தொல்லைகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றிற்கு நல்லது. உடலுக்கு உள்ளே, வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், குளிர் தாங்கும் சக்தியை அதிகா¢க்கிறது. காயங்களுக்கும், புண்களுக்கும் இலைச்சாறு தடவலாம். அரைத்தும் கட்டலாம். World best ointment.
***
தும்பை:-
பக்கவாதம், சளி, இருமல், தலைவலி, மார்சளி, மூட்டு வாதம் முதலியவற்றைக் குணப்படுத்த சிறந்தது. பாம்புக்கடிக்கு தும்பை இலைச்சாறு பாதியும் வாழைத் தண்டு சாறு பாதியும் கலந்து கொடுக்க வேண்டும். தும்பை இலை ஒரு தடவைக்கு பத்து இலை போதும்.
***
வெங்காயமும் பூண்டும்:-
கிருமிகளை வெளியேற்றும் டானிக், சொறி, சிரங்கு, யானைக்கால் வியாதி, சைனஸ், டான்ஸில், இரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். கொலாஸ்ட்ரால் குறையும். பச்சைப் பூண்டுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது.
எல்லா பழங்களில் உள்ள சத்துகள் :)
மாம்பழம்
வைட்டமின் ஏ 2743 மைக்ரோ கிராம் உள்ளது. வைட்டமின் பி, சி, மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன.
மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மாலைக்கண் நோய் ஏற்படும்.
***
ஆரஞ்சுப் பழம்
வைட்டமின் ஏ 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.
***
பப்பாளிப் பழம்
வைட்டமின் ஏ 666 மைக்ரோகிராம், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ஏ சத்து அதிகம்.
***
நெல்லிக்கனி
வைட்டமின் சி 600 மி.கி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களுடன் வைட்டமின்கள் ஏ.பி. சிறிதளவு உள்ளன. உடலுக்கு உரம் தரும். பசியைத் தூண்டும். சிறுநீரைப் பெருக்கும் வைட்டமின் சி, குறைவினால் ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் ஸ்கர்வி நோய் ஏற்படும்.
***
கொய்யாப்பழம்
வைட்டமின் சி 212 மி.கி. உள்ளது. பி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும் பற்களும் உறுதிதரும்.
***
சாத்துக்குடி
வைட்டமின் சி 45 மி.கி. உள்ளது. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்களும் உள்ளன. வைட்டமின் சி குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும்.
எலுமிச்சை
கால்ஷியம் 70 மி.கி. வைட்டமின் சி 39 மி.கி. இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருளகளும் வைட்டமின் பி சிறிதளவும் உள்ளன. அஜீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும் கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை அருமருந்தாகும். தாகத்தைப் போக்கும்.
***
கறுப்பு திராட்சை
வைட்டமின்கள் ஏ,பி,சி மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.
***
பச்சை திராட்சை
வைட்டமின் சி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. அதோடு நார்சத்து 2.9 கிராம் உள்ளது. பச்சை திராட்சைப் பழச்சாற்றை சாப்பிட தாகம் தணியும் நா வறட்சி நீங்கும்.
***
போ£ச்சம் பழம்
இரும்புச் சத்து 7.3 மி.கி., கால்ஷியம் 120 மி.கி. பாஸ்பரஸ் 50 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி சிறதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.
***
சப்போட்டா
மாவுச் சத்து 21.4 கிராம், இரும்புச் சத்து 2 மி.கி. உள்ளது. வைட்டமின் ஏ.பி மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.
***
வாழைப்பழம்
கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது (116 கலோ¡¢கள்). தவிர வைட்டமின்கள் ஏ.பி.சி உள்ளன. இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. பூவன்பழம் மலச் சிக்கலைப் போக்க உதவும் நேந்திரன் பழம் ரத்த சோகையை நீக்க உதவும். மலை வாழைப் பழம் ரத்த விருத்தி செய்ய வல்லது.
***
ஆப்பிள்
வைட்டமின்கள் ஏ.சி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும் பற்களின் உறுதித் தன்மைக்கும் உதவும்.
***
தர்பூசணி
இரும்புச் சத்து 7.9 கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. நீர்ச் சுருக்கைப் போக்கும். கோடையில் தாகம் தணிக்க உதவும்.
***
புளி
இரும்பு 17 மி.கி. கால்ஷியம் 170 மி.கி. பாஸ்பரஸ் 110 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்புச் சத்துக் குறைவினால் ரத்த சோகை ஏற்படும்.
***
சீத்தாப் பழம்
பொட்டாஷியம் 340 மி.கி. நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளன. இது தவிர கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் வைட்டமின்கள் பி, சி-யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச் சிக்கல் ஏற்படும். பொட்டாஷியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும்.
***
அண்ணாசிப் பழம்
இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஏ,பி,சி உள்ளன. நார்ச்சத்து 0.5கிராம், கால்ஷியம் 20 மி.கி., மாவுப் பொருள் 10.8 மில்லிகிராம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.
***
மாதுளம் பழம்
பாஸ்பரஸ் 70 மி.கி. உள்ளது. கால்ஷியம், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. கால்ஷியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது.
எல்லா பழங்களில் உள்ள சத்துகள் :)
மாம்பழம்
வைட்டமின் ஏ 2743 மைக்ரோ கிராம் உள்ளது. வைட்டமின் பி, சி, மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன.
மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மாலைக்கண் நோய் ஏற்படும்.
***
ஆரஞ்சுப் பழம்
வைட்டமின் ஏ 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.
***
பப்பாளிப் பழம்
வைட்டமின் ஏ 666 மைக்ரோகிராம், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ஏ சத்து அதிகம்.
***
நெல்லிக்கனி
வைட்டமின் சி 600 மி.கி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களுடன் வைட்டமின்கள் ஏ.பி. சிறிதளவு உள்ளன. உடலுக்கு உரம் தரும். பசியைத் தூண்டும். சிறுநீரைப் பெருக்கும் வைட்டமின் சி, குறைவினால் ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் ஸ்கர்வி நோய் ஏற்படும்.
***
கொய்யாப்பழம்
வைட்டமின் சி 212 மி.கி. உள்ளது. பி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும் பற்களும் உறுதிதரும்.
***
சாத்துக்குடி
வைட்டமின் சி 45 மி.கி. உள்ளது. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்களும் உள்ளன. வைட்டமின் சி குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும்.
எலுமிச்சை
கால்ஷியம் 70 மி.கி. வைட்டமின் சி 39 மி.கி. இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருளகளும் வைட்டமின் பி சிறிதளவும் உள்ளன. அஜீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும் கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை அருமருந்தாகும். தாகத்தைப் போக்கும்.
***
கறுப்பு திராட்சை
வைட்டமின்கள் ஏ,பி,சி மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.
***
பச்சை திராட்சை
வைட்டமின் சி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. அதோடு நார்சத்து 2.9 கிராம் உள்ளது. பச்சை திராட்சைப் பழச்சாற்றை சாப்பிட தாகம் தணியும் நா வறட்சி நீங்கும்.
***
போ£ச்சம் பழம்
இரும்புச் சத்து 7.3 மி.கி., கால்ஷியம் 120 மி.கி. பாஸ்பரஸ் 50 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி சிறதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.
***
சப்போட்டா
மாவுச் சத்து 21.4 கிராம், இரும்புச் சத்து 2 மி.கி. உள்ளது. வைட்டமின் ஏ.பி மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.
***
வாழைப்பழம்
கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது (116 கலோ¡¢கள்). தவிர வைட்டமின்கள் ஏ.பி.சி உள்ளன. இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. பூவன்பழம் மலச் சிக்கலைப் போக்க உதவும் நேந்திரன் பழம் ரத்த சோகையை நீக்க உதவும். மலை வாழைப் பழம் ரத்த விருத்தி செய்ய வல்லது.
***
ஆப்பிள்
வைட்டமின்கள் ஏ.சி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும் பற்களின் உறுதித் தன்மைக்கும் உதவும்.
***
தர்பூசணி
இரும்புச் சத்து 7.9 கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. நீர்ச் சுருக்கைப் போக்கும். கோடையில் தாகம் தணிக்க உதவும்.
***
புளி
இரும்பு 17 மி.கி. கால்ஷியம் 170 மி.கி. பாஸ்பரஸ் 110 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்புச் சத்துக் குறைவினால் ரத்த சோகை ஏற்படும்.
***
சீத்தாப் பழம்
பொட்டாஷியம் 340 மி.கி. நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளன. இது தவிர கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் வைட்டமின்கள் பி, சி-யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச் சிக்கல் ஏற்படும். பொட்டாஷியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும்.
***
அண்ணாசிப் பழம்
இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஏ,பி,சி உள்ளன. நார்ச்சத்து 0.5கிராம், கால்ஷியம் 20 மி.கி., மாவுப் பொருள் 10.8 மில்லிகிராம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.
***
மாதுளம் பழம்
பாஸ்பரஸ் 70 மி.கி. உள்ளது. கால்ஷியம், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. கால்ஷியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது.
நன்னாரி ( முலிகை )
இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும்.
*
இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.
*
நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.).
*
நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.
***
சித்த மருத்துவத்தில்:
சலதொடம் பித்தமதி தாகம் உழலை
சலேமேறு சீதமின்னார் தஞ்ச்சூடு லகமதிற்
சொன்னமது மேகம் புண் சுரமிவை யெ லா மொழிக்கும்
மென்மதுர நன்னாரி வேர் (அகத்தியர் குணபாடம்)
அன்காரிகை மூலி யாச்சியாத்தோ டுண்ண நித்தி
யங்கா ரிகை மூலி யாளுமே-யன்காரி
பற்றாது (தேரையர் வெண்பா )
காமவல் லியனடிக் கரியுணப் பித்தமா
நேமமே கப்பிணி நிலை குலைந்தாலுமே (தேரையர் கா )
ஆயுர்வேதத்தில் -நன்னாரியை சாரிப என்று கூறப்படுகின்றது.
***
மருத்துவ குணங்கள்:
1. மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாக...
*
2. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து அரைத்து 200 மில்லியளவு காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாகும். தொடர்ந்து குடித்துவர இளநரை, பித்த நரை முடி மாறும். நன்னாரியில் மேலே உள்ள தோல், உள்ளிருக்கும் நரம்பு இவற்றை நீக்கிவிட்டு, வெளுத்த நிலையில் உள்ள சதையை மட்டும் 100 கிராம் எடுத்து, அதேயளவு மஞ்ஜிட்டி (இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) எடுத்து இரண்டையும் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து 750 மில்லி நீரில் கலந்து அத்துடன் நல்லெண்ணெய் 1 1/2 கிலோ சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்ச வேண்டும். நல்லெண்ணெய் பொங்கி வரும். எனவே அடியில் பிடித்துள்ள கல்பத்தையும் திரும்பத் திரும்ப கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறாமல் இருந்தால் அடியில் பிடிக்கும். தீ அதிகமானால் பொங்கும். கவனமாகக் கையில் ஒட்டாமல் தங்கம் போல் திரண்டு வரும் சமயத்தில் இறக்கி வடிகட்டி அத்துடன் வெள்ளை குங்குலியம் 100 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து போட்டு, தேன் மெழுகு 100 கிராம் கூட்டிக் கலக்கி, நன்றாக ஆறிய பின்னர் கண்ணாடிப் புட்டியில் பாதுகாப்பாக வைக்கவும். நகச் சுற்று வந்தவர்களுக்கு இதை ஊற்ற, உடனே குணமாகும். 3 வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
*
3. பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.
*
4. சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாக-நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.
*
5. நன்னாரி நீர் “தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.
*
6. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற் ற்றை சரிசெய்யும் .
*
7. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.
*
8. பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.
*
9. வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள்,செரியாமை, பித்த குன்மம் தீரும்.
*
10. ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ் சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
*
11. குழந்தைகளின் உடலை தேற்ற -நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.
*
12. சிறு நீரகநோய்கள் தீர -நன்னாரிவேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறு நீரகநோய்கள் அனைத்தும் விலகும்.
*
13. வயிறு நோய்கள் தீர -நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மான கோளாருகள் நீங்கும். தவிர செரியாமை, பித்த குன்மம் தீரும்இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.
*
14. விஷக் கடிக்கு -நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.
*
15. கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.
*
16. குணங்களில் -நீர் பெருக்கும்,உடலுக்கு குளிர்ச்சி தரும் ,பசி தூண்டும் ,காய்ச்சலை குறைக்கும் ,வெள்ளை படுதலை சரியாக்கும்.
*
17. உடல் குளிர்ச்சி அடைய வெயில் காலங்களில் நன்னாரி வேரை நன்றாக அலசி பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திக் காயவைத்தோ மண்பானையில் போட்டு சுத்தமான நீரை அதில் ஊற்றி வைத்திருந்து அந்த நீரைக் குடித்தால், உடல் குளிர்ச்சி அடையும்.
***
18. குறிப்பு:
ரோட்டோரத்தில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தில் நன்னாரி எசன்சு மட்டுமே உள்ளது-இது நல்லதில்லை.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.