தன் பலவீனங்களை விட்டுவிட முடியவில்லை என்றபுகாருடன் ஒரு துறவியைத் தேடிப்போனார் ஓர் இளைஞர். “சிறிது தூரம் உலாவிவிட்டு வருவோம்” என்று துறவி அழைத்தார். வழியில் தென்பட்ட மரமொன்றைஇறுகக் கட்டிக்கொண்ட துறவி, “இந்த மரம் என்னை விடமாட்டேன் என்கிறது” என்றலறி ஆர்ப்பாட்டம் செய்தார்.

அவர் கைகளை விடுவிக்க இளைஞர் முயன்றார். துறவியோ மரத்தை இறுகப் பற்றியிருந்தார். குழப்பமடைந்த இளைஞரிடம் சொன்னார். மரம் என்னைப் பற்றவில்லை என்று உனக்குத் தெரிகிறதல்லவா? உன் பலவீனங்களைக் கூட நீதான் பற்றியுள்ளாய். நீயாக அதைவிட நினைத்தால் நிச்சயம் விடலாம்” என்றார் துறவி.