Tuesday, 13 September 2011

நகைச்சுவை

——————————

காதலன்: என்னை காதலிக்கிறாயா கண்ணே !
காதலி : ஆமாம் அன்பே…
காதலன் : அப்ப.. எனக்காக இறந்து போவாயா கண்ணே..
காதலி : மாட்டேன்..என்னுடையது இறவா காதல் அன்பே…

—————————————————————————————————————————————————–

நோயாளி : என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்..
டாக்டர் : கவலையே படாத… இப்பதான் வைத்தியம் ஆரம்பிச்சிருக்கேன் !.. இன்னும் கொஞ்ச நேரத்தில எமதர்மன் தெரிவான்

—————————————————————————————————————————————————–

எமன் : அங்கே என்ன சத்தம்… சித்திரகுப்தா ..?

சித்திரகுப்தன் : புதிதாக எமலோகம் வந்திருக்கும் மானிடர்களை இங்கே ஏற்கனவே இருப்பவர்கள் “ராகிங்” (பகிடிவதை) செய்கிறார்கள் பிரபு..!!!

—————————————————————————————————————————————————–

சங்கீத வித்துவான் 1: எனக்கு மேடை ஏறி கச்சேரி செய்கிறதைவிட வானொலியில் கச்சேரி செய்கிறதுதான் ரொம்ப பிடிக்கும்

சங்கீத வித்துவான் 2: ஏன் அப்படி சொல்லுறிங்க..?

சங்கீத வித்துவான் 1: அப்பதானே மேலே கல்லு வந்து விழாது.

——————————————————————————————————————————————————

கட்சி ஆதரவாளர்: தலைவரே ! … எப்போது பார்த்தாலும் மரத்து மேலே ஏறி இருக்கிறாரே.. யார் அவர்?
தலைவர் : அவர் நம்ம “கிளைச்செயலாளர் ” .

—————————————————————————————————————————————————–

பிச்சக்காரன் : ” பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் ” என்ற புத்தகத்தை எழுதியது நான் தான்..!
ஒருத்தன் : பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?
பிச்சக்காரன் : அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி…

——————————————————————————————————————————————————

ஆசிரியர் : “உங்க மகனின் கையெழுத்தை இன்று முழு நாளும் பாத்துக்கிட்டே இருக்கலாம் சார்!”

தந்தை: அடடா ! அவ்வளவு அழகா எழுதுவானா!”

ஆசிரியர்: சுத்தம்… எழுத்து புரிஞ்சாத்தானே மேலே படிக்கறதுக்கு!..அதான் நாள் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம் என்றேன் !

—————————————————————————————————————————————————–

சுந்தரி : நாளுக்கு நாள் குண்டாகிட்டே போகிறாய்… நீச்சல் அடித்தால் இளைத்து விடுவாயடி..

ராஜீ :அது எப்படி..? திமிங்கலம் கடலிலே தானே 24 மணி நேரமும் இருக்கு.. அது இளைத்தா இருக்கு

—————————————————————————————————————————————————–

ஒருவன் : சின்ன முள் குத்திவிட்டது..என்னசெய்யலாம்
மற்றவன்: இன்னெரு முள்ளாகப்பார்த்து குத்திகொண்டு வாடா…. நேரம் பார்க்கலாம்

—————————————————————————————————————————————————–

சுரேஸ் : என்ன சார் தலைகொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு..

ரமேஸ் : “இனிமேல் அடிக்கமாட்டேன்” என்று என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினா !

—————————————————————————————————————————————————-

ராஜா : என் ஜாதகப்படி எனக்கு அறிவு கொஞ்சம் அதிகமாம்
மந்திரி : இப்போதாவது புரிகிறதா.. நான் ஏன் ஜாதகம் பார்ப்பதில்லை என்று..

——————————————————————————————————————————————————

சிலந்தி1: அந்த சிலந்தி பூச்சிக்கு ஏன் இவ்வளவு தற்பெருமை.
சிலந்தி2: “வெப் சைட்” ஆரம்பிச்சிருக்காம்..அதானாலதான்

——————————————————————————————————————————————————

மனைவி : அத்தான்… பல்லு வலி தாங்கமுடியல்ல..
கணவன் : ஏன் ?.. என்னத்தை அப்படி கடித்த நீ..
மனைவி : உங்க அம்மாவைத்தான்

—————————————————————————————————————————————————-

ஒருவன் : பொண்ணு “கிளி” மாதிரி இருக்காளே என்று தெரியாதனமா கல்யாணத்துக்கு
ஒத்துக்கிட்டது தப்பா போச்சுது
மற்றவன் : என்னாச்சுடா..?
ஒருவன் : பேசியதை திரும்பத்திரும்ப பேசி என் உயிரை வாங்கிக்கிட்டிருக்கா..

—————————————————————————————————————————————————-

ராம் : கண்ணன் வீட்டுக்கு போயிடாதே.. அவன் சுத்த கஞ்சப்பையன்
கோகு : ஏன்டா மச்சான்
ராம் : அவன் வீட்டில இருக்கும் போது “டிரஸ்” கூட போடமாட்டான்

——————————————————————————————————————————————————-

நீதிபதி : “ஏம்பா, மூணாவது தடவையா இந்த கோர்ட்டுக்கு வந்துருக்கீயே……உனக்கு வெக்கமாயில்லே?”
குற்றவாளி : ” நீங்க தினமும் வர்றீங்களே…ஒங்களுக்கு வெக்கமாயில்லையா சார்?”

———————————————————————————————————————————————————

ராஜா: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…

ரவி : பரவாயில்லையே… நிஜமாகவா..?

ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..

———————————————————————————————————————————————————-

முதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண்­ணீ ஊத்திட்டியா?
தோட்டக்காரன்: ஐயா! நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
முதலாளி: அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே.

———————————————————————————————————————————————————–

சங்கர் : படத்தின் முடிவில் தற்கொலை செய்து கொள்கிறார்…

மற்றவர்: யார்..வில்லனா? கதாநாயகனா?..

சங்கர் : அட போங்க… தயாரிப்பாளர்..

—————————————————————————————————————————

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.