Tuesday, 23 August 2011

SONAIPATTY

எல்லோருக்கும் வணக்கம் !!!
இது சோனைபட்டியை பற்றிய இணையதளம் ...

Hello, Good to all .... those who look our SONAIPATTY website.



இது ஒரு மந்தை கோவில் காட்சி


சோனைபட்டி என்பது ஒரு சிறிய கிராமமாகும்.இது சிவகங்கையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த கிராமத்தில் அடிபடை வசதிகள் ஓரளவு உள்ளது .
அதாவது, ஒரு சர்வ சேவா பள்ளிகூடம் [ 1 லிருந்து 5 வரை ], பேருந்து வசதி , குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியன உள்ளன.

மேலும் இங்கே விவசாயம் பிரதான தொழிலாக இங்குள்ள மக்களுக்கு உள்ளது. அவர்கள் வாழை , கரும்பு , நெல் முதலியன முக்கியமாக பயிரிடப்படுகிறது.மேலும் இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் வெளி நாட்டில் அதாவது துபாய் , கத்தார் போன்ற நாடுகளில் வேலை செய்கிறார்கள்.


நாம் எல்லாம் இந்தியன் என்ற உணர்வோடு ஒற்றுமையாக வாழ்வோம்!!!


சோனைபட்டி :


இது தான் சோனைபட்டி

Map for SONAIPATTY

சோனைபட்டியின் Google Map

The way which leads to SONAIPATTY











சோனைபட்டிக்கு செல்லும் வழி


இது இந்திய நாட்டின் தென்முனையே உள்ள தமிழ்நாட்டின் தெற்க்கே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும்.

இது மந்தை கோவில் கட்சிப்படம்


சோனைபட்டி கிராமத்தில் கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். எங்கள் ஊரில் ஒரு ஆரம்ப பள்ளிகூடம் [ சர்வ சேவா பள்ளி ] உள்ளது. அதில் 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயிலுகிறார்கள்.

எங்கள் ஊர் அடிப்படை வசதிகள் அனைத்தையும் கொண்ட ஒரு அழகான சிறிய கிராமமாகும். மேலும் இது சிவகங்கையிலுருந்து மேலூர் செல்லும் வழியில் சற்று உள்ளாக கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் தொலைவில் [ சிவகங்கையிலிருந்து ] அமைந்துள்ளது.


எங்கள் ஊர் வெள்ளலூர் நாட்டை சார்ந்த்தது, அதாவது வெள்ளலூர் நாடு என்பது சுமார் 50 க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்களை கொண்ட ஒரு பகுதி. இந்த வெள்ளலூர் நாட்டில் இரு பெரும் காவல் தெய்வங்கள் உள்ளன ஒன்று ஏழைகாத்த அம்மன் [ இது கோவில்பட்டியில் அமைந்துள்ளது ],மற்றொன்று வல்லடிகாரர் கோவில் [ இது அம்பலகாரன்பட்டியில் அமைந்துள்ளது ] ,இந்த இரு பெரும் தெய்வங்களை எங்கள் மக்கள் புரட்டாசி மற்றும் பங்குனி மதங்களில் சிறப்பு பூஜை மற்றும் விழா நடத்தி கொண்டாடி வழிப்பட்டு வருகின்றனர். அவைகள் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்கள். வழிப்பட்டு பயன் அடையார் எவரும் இலர் ....

எங்கள் சோனைபட்டியில் மூன்று காவல் தெய்வங்கள் உள்ளன ஒன்று காளி [ துர்காதேவி ] கோவில் ஊருக்கு மேற்கு புறமாக அமைந்துள்ளது, இரண்டாவதாக மந்தை கோவில் ஊருக்கு நடுவே அமைந்துள்ளது , மற்றொன்று ஐயனார் கோவில் ஊருக்கு தெற்கு புறமாக அமைந்துள்ளது. எங்கள் ஊரில் இரண்டு கண்மாய்கள் உள்ளன , ஒன்று சின்ன கண்மாய் , மற்றொன்று பெரிய அல்லது தண்டு ஊரணி கண்மாய் .


தண்டு ஊரணி கண்மாய் மைய பகுதி






தண்டு ஊரணி கண்மாய் முடிவு பகுதி






sonaipatty bus













sonaipatty....















எங்கள் ஊரை பற்றி இன்னும் அறிய கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு செல்லவும் ....



மேலும் இதை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள முகவரிக்கு செல்க


Hello, This is another website for Sonaipatty

ஆங்கில இலக்கணம் :
English Grammar:


ஆங்கில இலக்கணம் :
English Grammar:

sentence

A group of words or words or which makes a complete sense is called a" sentence" .
பொருள் முடிவு பெற்றிருக்கின்ற சொற்றொடர் வாக்கியம் எனப்படும் .

The senteces are mainly divided into two parts.One is subject and the other is predicate.
The subjet and the predicate may each consist of a single word or words.

வாக்கியத்தை எழுவாய் (subject) பயனிலை(predicate) என இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம் .
வினைசொல்லுக்கு முன்னால் வரும் வார்தைகள் subject எனவும் வினைசொல்லுடன்
அதன் பின்னல் வரும் அணைத்து வார்த்தைகளும் சேர்ந்து predicate எனவும் அழைக்கப்படும்

KINDS OF SENTENCES :(வாக்கியங்களின் வகைகள் )
Generaly sentences are divided into four major categories.
They are

1.statement சாதாரண வாக்கியம்
2.interrogative sentences வினா வாக்கியம்
3.imperative sentences கட்டளை வாக்கியம்
4.exclamatory sentences உணர்ச்சி வாக்கியம்

STATEMENT: (சாதாரண வாக்கியம் )
The sentence starting with Noun or Pronouns is known as statement.
Nouns அல்லது Pronoun இல் துவங்கும் வாக்கியம் stetment எனப்படும் .
e.g:
Madurai is a temple city.
மதுரை ஒரு கோவில்
நகரம். .

INTERROGATIVE SENTENCE :(கேள்வி/வின வாக்கியம்)
Interrogative sentences are divided into two types.
a) 'wh' type Question :
what, when, where, who, how many, how long, how much, போன்ற கேள்வி வார்த்தைகளால் ஆரம்பிக்கப்படும்
கேள்விகள் 'Wh'type என அழைக்கப்படும்.
e.g:
why did you come here?
ஏன் இங்கு வந்தாய்?
b)'yes or no Question:

எந்த ஒரு கேள்வியை கேக்கும் பொழுது ஆம் அல்லது இல்லை என்ற பதில் கிடைக்கிறதோ அவ்வகை
கேள்விகள் 'yes or no' type Question என அழைக்கப்படும் .

பிரச்சினை என்ன?


நீங்கள் சந்தோசமாக இருக்கும் போதும் ,கருணையோடு இருக்கும் போதும் ,தாராளமாக வழங்கும் மன நிலையில் இருக்கும் போதும் உங்கள் வாழ்க்கை அழகாக அமைகிறது.யாராவது குற்றம் செய்ததாக நீங்கள் கருதும் போது,அந்த அழகு மறைந்து அசிங்கமாகிவிடுகிறது.உண்மையாகச் சொல்லுங்கள்.நீங்கள் செய்தேயிராத ஒரு குற்றத்தையா அவர் செய்து விட்டார்?நம் பிரச்சினை என்ன?நாம் ஒரு குற்றம் செய்தால் அதைப் பொருட்படுத்த மாட்டோம்.வேறு யாரும் பொருட்படுத்தக் கூடாது என்று எதிர் பார்ப்போம்.ஆனால் அதையே வேறொருவர் செய்தால் பெரிது படுத்துவோம்.
மற்றவர் மீது சுமத்துவதாக நாம் நினைக்கும் குற்றச்சாட்டு உண்மையில் நம் மனதில் தான் பாரமாக ஏறி உட்கார்ந்து கொள்கிறது.நம் இயல்பையும் வேகத்தையும் சிதைக்கிறது


நீயாக இரு.

இராம கிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரநாத்தின் தலை மீது கை வைத்து ஆசிர்வதித்ததும் அவர் விவேகானந்தர் ஆனார்,என்பதைப் படித்துத் தெரிந்த ஒருவர் வினோபாஜியிடம் சென்று ,''ஐயா,தாங்கள் என் தலை மீது கை வைத்து ஆசிர்வதித்தால்,நான் சங்கராச்சாரி ஆகி விடுவேன்.''என்று சொன்னார்.
''நான் ஆக்குவதால் நீ ஆகி விட்டால் ,பிறர் அழிப்பதால்,நீ அழிந்தும் போய் விடுவாய்.என்னைக் காட்டிலும் உண்மை மிகுந்தவர்கள் இருக்கிறார்கள்.எனவே நீ நீயாகவே இரு.எவராவது உன்னை ஏதாகிலும் ஆக்கினால்,அப்படி ஆகாதே..''என்று அறிவுறுத்தினார் வினோபாஜி.


மகனுக்கு

ஆபிரஹாம் லிங்கன் ,தன மகனுக்கு என்ன கற்பிக்கப் படவேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு விடுத்த வேண்டுகோள் கடிதம்;
எவரும் முற்றிலும் நேர்மையானவர் அல்லர்;உண்மையானவர் அல்லர்--இதை அவனுக்குச் சொல்லுங்கள்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் கற்றுக் கொடுங்கள்.
பெருமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
மனம் விட்டுச் சிரிக்கும் இரகசியம் அவனுக்குத் தெரியட்டும்.
டம்பப் பேச்சுக்கு அடிமை ஆவது எளிது என்பதை அவன் சிறு வயதிலேயே அறியட்டும்.
புத்தகங்களின் விரோதங்களை அவனுக்கு உணர்த்துங்கள்.
இயற்கை விநோதங்களை அலசி ஆராய அவனுக்கு நேரம் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட ,தோற்பது கண்ணியமானது என்பதனைக் கற்றுக் கொடுங்கள்.
எத்தனை பேர் கூடி 'தவறு'என்றாலும்,சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும்,உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடக்கக் கற்றுக் கொடுங்கள்.
துன்பத்தில் அவன் சிரிக்கட்டும்.அத்துடன் கண்ணீர் விடுவது அவமானம் இல்லை என்பதை உணர்த்துங்கள்.
குற்றங்குறை கூறுபவர்களை அவன் அலட்சியப் படுத்தட்டும்.அத்துடன் அளவுக்கு அதிக இனிமையுடன் பேசுபவரிடம் எச்சரிக்கையாகவும் இருக்கச் சொல்லிக் கொடுங்கள்.
உரக்கக் கத்தும் கூட்டத்திற்கு அவன் செவி சாயாமல் இருக்கட்டும்.தன மனதுக்கு 'சரி' என்று தோன்றுவதை துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
அவனை மென்மையாக நடத்துங்கள்.அதற்காகக் கட்டித் தழுவாதீர்கள்.
எப்போதும் எதிலும் ஆவல் மிக்கவனாக இருக்க அவனுக்குத் தைரியம் ஊட்டுங்கள்.தொடர்ந்து தைரியசாலியாக இருக்க விடாமுயற்சியைக் கற்றுக் கொடுங்கள்.
தன்னம்பிக்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.அப்போது அவன் மனித சமுதாயம்,அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனாக இருப்பான்.
இவையெல்லாம் மிகப்பெரிய ,கடினமான நடைமுறைகள்தான்.ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.ஏனெனில் இனிமையான என் மகன் மிகவும் சிறியவன்.



அறத்தின் உரு

மற்றவர்களது இரகசியங்களைத தெரிந்து கொள்வதில் செவிடனாக இரு.
பிறன் மனைவியைப் பார்க்கும் பொது குருடனாக இரு.
கோள் சொல்லும் விசயத்தில் ஊமையாக இரு.
அப்படி இருப்பவனுக்கு நல வழிப் பாடம் போதிக்க வேண்டியதில்லை.
அவனே அறத்தின் உருவமாவான்.



ஆதாரம்

ஓடம் போவதற்கு நீர் தேவையே. நீர் இன்றி ஓடம் இல்லை. ஆனால் ஓடத்திற்கு ஆதாரமான நீர் ஓடத்திற்கு வெளியே இருக்க வேண்டுமேயன்றி உள்ளே அன்று.
சமூகத்தின் செல்வமும் இத்தகையதே. செல்வம் ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளே தங்கி விடாமல் சமூக ஓட்டத்திற்கு வெளியே,அது மிதப்பதற்கு ஆதாரமாக அமைய வேண்டும்.
--வினோபாஜி

இனிமையோடு பழக

மற்றவர்களுக்கு உங்களைப் பிடிக்காது,உங்களைக் குறை கூறுவார்கள் என்று நினைக்காதீர்கள். அவரவர்க்கு அவரவர் பிழைப்பைக் கவனிக்கும் வேலையே தலைக்கு மேல் இருக்கிறது.உங்களை வெறுத்துக் கொண்டிருக்கவோ குறை கூறவோ அவர்களுக்கு நேரமில்லை.நீங்களாக ஏதாவது கோளாறாக நடந்து கொண்டாலன்றி உங்களைப் பற்றி அவர்கள் ஏன்சிந்திக்கப் போகிறார்கள்?
மற்றவர்களை அனுசரித்துப் போனால் நீங்கள் இன்னும் நன்றாக இருக்க முடியும் என்பதை உணருங்கள்.
மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் நீங்கள் இளக்கார மானவர்அல்ல என்று நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றோ மற்றவர்களைக் காட்டிலும் கெட்டிக்காரர்களாக இருக்க முயல வேண்டும் என்றோ எண்ணி எல்லாவற்றிலும் போட்டி போட வேண்டாம்.
பேசுவது நீங்களாகவே இருக்க வேண்டும் ,கேட்பதற்கு மட்டும் மற்றவர்கள் என்று நினைக்காதீர்கள்.உரையாடலின் போது மற்றவர்கள் பேசுவதற்குக் காது
கொடுத்து அவர்கள் பேச்சைக் கவனத்துடனும் ஆர்வத்துடனும் கேட்டுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.



இனிமையோடு பழக

மற்றவர்களுக்கு உங்களைப் பிடிக்காது,உங்களைக் குறை கூறுவார்கள் என்று நினைக்காதீர்கள். அவரவர்க்கு அவரவர் பிழைப்பைக் கவனிக்கும் வேலையே தலைக்கு மேல் இருக்கிறது.உங்களை வெறுத்துக் கொண்டிருக்கவோ குறை கூறவோ அவர்களுக்கு நேரமில்லை.நீங்களாக ஏதாவது கோளாறாக நடந்து கொண்டாலன்றி உங்களைப் பற்றி அவர்கள் ஏன்சிந்திக்கப் போகிறார்கள்?
மற்றவர்களை அனுசரித்துப் போனால் நீங்கள் இன்னும் நன்றாக இருக்க முடியும் என்பதை உணருங்கள்.
மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் நீங்கள் இளக்கார மானவர்அல்ல என்று நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றோ மற்றவர்களைக் காட்டிலும் கெட்டிக்காரர்களாக இருக்க முயல வேண்டும் என்றோ எண்ணி எல்லாவற்றிலும் போட்டி போட வேண்டாம்.
பேசுவது நீங்களாகவே இருக்க வேண்டும் ,கேட்பதற்கு மட்டும் மற்றவர்கள் என்று நினைக்காதீர்கள்.உரையாடலின் போது மற்றவர்கள் பேசுவதற்குக் காது
கொடுத்து அவர்கள் பேச்சைக் கவனத்துடனும் ஆர்வத்துடனும் கேட்டுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.



பொது ஒழுக்கம்

பொது ஒழுக்கம் இல்லாதவர்கள் சமய சொற்பொழிவு செய்யலாமா என்ற கேள்வியை ஒருவர் பரமஹம்ஸரிடம்கேட்டார். அழுக்காக இருக்கும் விளக்குமாறு தானே வீட்டைக் கூட்டி சுத்தமாக்குகிறது ,என்று பதல் அளித்தார் பரமஹம்ஸர்.


பணக்கர்வம்

ஒரு தவளையிடம் ஒரு ரூபாய் நாணயம் இருந்தது. அதை பூமிக்கு அடியில் ஒரு பள்ளத்தில் போட்டு வைத்தது. ஒரு நாள் ஒரு யானை அந்தப் பள்ளத்தின் மேலே நடந்து சென்றது. வந்ததே கோபம் தவளைக்கு. பள்ளத்தை விட்டு வெளியே வந்து யானையை உதைக்கக் காலைத்தூக்கியது.'என்ன தைரியம் இருந்தால் என் தலை மேலே நடந்து போவாய்?'என்று மிரட்டியது. பணத்தாலே வரும் கர்வம் இப்படிப்பட்டதுதான் என்று ராம கிருஷ்ண பரம ஹம்சர் சொல்கிறார்.




Sunday, November 14, 2010

ஆலோசனை

நம்மிடம் ஆலோசனை கேட்கப் பலர் வருவார்கள்.அவர்கள் எல்லோருமே நம்மை உயர்வாக மதித்து,நாம் கூறும் ஆலோசனைகளை அப்படியே எடுத்துக் கொண்டு அதன் படி செயல்பட வேண்டும் என்ன்ற எண்ணத்துடன் வருவார்கள் என்று நாம் நினைத்தால் அது மாபெரும் தவறு.அவர்களில் பெரும்பாலோர் தாம் எடுத்த முடிவு சரியானதுதானா என்பதை உறுதி செய்துகொள்ள வருகிறார்களே தவிர,நம்முடைய ஆலோசனையை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாட அல்ல.அவர்களுடைய சிந்தனையில் என்ன இருக்கிறதோ அதையே நாம் சொன்னால்,''நீங்கள் சொல்வது தான் சரி,''என்பார்கள்.அவர்கள் நினைத்ததற்கு நேர் மாறானஆலோசனையை நாம் சொன்னால் ,''இவரிடம் போய்க் கேட்டேன் பார்,''என்று மனதில் நினைத்துக் கொண்டு அதன் பின் நம் பக்கம் தலை காட்டக்கூட மாட்டார்கள். எனவே யாராவது ஆலோசனை கேட்டு வந்தால்,அவர்கள் முகக் குறிப்பு அறிந்து,''அட,உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லிவிடப் போகிறேன்,''என்று சொல்லலாம்.அதற்கு மேல் அவர்கள் வற்புறுத்திக் கேட்டால்,நம் கருத்தை சொல்லிவிட்டு,''உங்கள் பிரச்சினைக்கு பல தீர்வுகள் உள்ளன. எனக்குத் தெரிந்ததை நான் சொன்னேன்.நீங்கள் யோசித்து முடிவெடுங்கள்,''என்று சொல்லலாமே தவிர,நான் சொல்வது தான் ஒரே தீர்வு என்ற முறையில் பேசாதிருப்பது நல்லது.





எளிய அறிவுரை

நம் மீது யாராவது கோபம்கொண்டால்,நாம் நேரடியாக அவரைக் குற்றம் சொல்லாமல் 'நம் மீது அவன் கோபம் அடைய,நாம் அவனுக்கு என்ன செய்தோம்.அவன் ஏன் நம் மீது மட்டும் கோபப்படுகிறான்?மற்றவர்களிடம் நல்ல முறையில் தானே நடந்து கொள்கிறான்!'என்று எண்ணி அதற்கான காரணத்தை உங்களிடமே கண்டு பிடிக்க முயலுங்கள்.அடுத்து நீங்கள் அவனிடம் நேரடியாக,'நீ என் மீது கோபம் அடையக் காரணம் என்ன?உன் மனதைப் புண்படுத்தும்படி நான் என்ன செய்தேன்?நான் எந்தத் தீங்கும் உனக்கு செய்யவில்லை.உன் கோபத்திற்கு வேறு ஏதேனும் காரணம்இருக்க வேண்டும்.'என்று நட்பாகக் கேட்கவும்.உடனே அவன் கண்களில் நீர் மல்க உங்களிடம் மன்னிப்புக் கேட்கலாம்.
ஜார்ஜ் குருட்ஜிவ் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தை ஒரு எளிய அறிவுரையைக் கூறினார்.''யாராவது உன் மேல் கோபம் கொண்டால்,அதற்கு பதிலாக உடனே எதுவும் செய்யாதே.உடனே பதிலுக்கு சண்டை போடாதே.அவன் சொல்வதைக் கவனமாகக் கேள். பிறகு அவனிடம்,'நான் நீங்கள் கூறியவற்றைப் பற்றி சிந்திக்க எனக்கு 24 மணி நேர அவகாசம் கொடுங்கள்.பிறகு தகுந்த பதிலை உங்களுக்கு சொல்கிறேன்,'என்று கூறவும்.''குருட்ஜீவ் கூறுகிறார்,''இந்த அறிவுரைஎன் முழு வாழ்க்கையையும் மாற்றி விட்டது.ஏனெனில் சில சமயம் பிறருடைய கோபம் என்னை ஒன்றும் செய்வதில்லைஎன்பதனை உணர்ந்தேன்.நான் அதற்கு உடனடியாக பதில் சொல்லத் தேவையில்லை.ஏனெனில் அது என்னைக் குறித்து சொல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.நான் அவர் அருகில் இருப்பதே,அவர் கோபம் என் மீது பாயக் காரணமாகி விட்டது என்று நினைக்கிறேன்.அப்படியே நான் செய்தது தவறு என்று மனப்பூர்வமாக உணர்ந்தால்,அவரிடம் சென்று நேரடியாக,'என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்,'என்று கூறுகிறேன்.இது எனக்கு மன ஆறுதலாக இருக்கிறது. நான் சொன்னதுபோல 24 மணி நேரத்தில் மீண்டும் வரவில்லை என்றால் அது என்னைக் குறித்த கோபம் அல்ல என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று பொருள்.''




குழந்தைகளை அடிக்கலாமா?

குழந்தைகள் தவறு செய்யும்போது அடிக்கலாமா?அடிக்கலாம் என்பதைவிட தண்டிக்கலாம்.குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை:
**குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும்.பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.
**தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும்.மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.
**தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும்.உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.
**தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது,குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்டலாம்.
**தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான்,அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.
**குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும்.நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.
**குழந்தை தவறு செய்தால்,தொடர்ந்து தண்டிக்க வேண்டும்.ஒரு முறை தண்டிப்பதும்,மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.
**குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும்.தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தானுருவாகும்.
**குழந்தையைத் தண்டிக்கும் முன் செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.
**தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையைவிடமன ரீதியான அணுகு முறையே சிறந்தது.


ஆலோசனை

நம்மிடம் ஆலோசனை கேட்கப் பலர் வருவார்கள்.அவர்கள் எல்லோருமே நம்மை உயர்வாக மதித்து,நாம் கூறும் ஆலோசனைகளை அப்படியே எடுத்துக் கொண்டு அதன் படி செயல்பட வேண்டும் என்ன்ற எண்ணத்துடன் வருவார்கள் என்று நாம் நினைத்தால் அது மாபெரும் தவறு.அவர்களில் பெரும்பாலோர் தாம் எடுத்த முடிவு சரியானதுதானா என்பதை உறுதி செய்துகொள்ள வருகிறார்களே தவிர,நம்முடைய ஆலோசனையை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாட அல்ல.அவர்களுடைய சிந்தனையில் என்ன இருக்கிறதோ அதையே நாம் சொன்னால்,''நீங்கள் சொல்வது தான் சரி,''என்பார்கள்.அவர்கள் நினைத்ததற்கு நேர் மாறானஆலோசனையை நாம் சொன்னால் ,''இவரிடம் போய்க் கேட்டேன் பார்,''என்று மனதில் நினைத்துக் கொண்டு அதன் பின் நம் பக்கம் தலை காட்டக்கூட மாட்டார்கள். எனவே யாராவது ஆலோசனை கேட்டு வந்தால்,அவர்கள் முகக் குறிப்பு அறிந்து,''அட,உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லிவிடப் போகிறேன்,''என்று சொல்லலாம்.அதற்கு மேல் அவர்கள் வற்புறுத்திக் கேட்டால்,நம் கருத்தை சொல்லிவிட்டு,''உங்கள் பிரச்சினைக்கு பல தீர்வுகள் உள்ளன. எனக்குத் தெரிந்ததை நான் சொன்னேன்.நீங்கள் யோசித்து முடிவெடுங்கள்,''என்று சொல்லலாமே தவிர,நான் சொல்வது தான் ஒரே தீர்வு என்ற முறையில் பேசாதிருப்பது நல்லது.



எளிய அறிவுரை

நம் மீது யாராவது கோபம்கொண்டால்,நாம் நேரடியாக அவரைக் குற்றம் சொல்லாமல் 'நம் மீது அவன் கோபம் அடைய,நாம் அவனுக்கு என்ன செய்தோம்.அவன் ஏன் நம் மீது மட்டும் கோபப்படுகிறான்?மற்றவர்களிடம் நல்ல முறையில் தானே நடந்து கொள்கிறான்!'என்று எண்ணி அதற்கான காரணத்தை உங்களிடமே கண்டு பிடிக்க முயலுங்கள்.அடுத்து நீங்கள் அவனிடம் நேரடியாக,'நீ என் மீது கோபம் அடையக் காரணம் என்ன?உன் மனதைப் புண்படுத்தும்படி நான் என்ன செய்தேன்?நான் எந்தத் தீங்கும் உனக்கு செய்யவில்லை.உன் கோபத்திற்கு வேறு ஏதேனும் காரணம்இருக்க வேண்டும்.'என்று நட்பாகக் கேட்கவும்.உடனே அவன் கண்களில் நீர் மல்க உங்களிடம் மன்னிப்புக் கேட்கலாம்.
ஜார்ஜ் குருட்ஜிவ் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தை ஒரு எளிய அறிவுரையைக் கூறினார்.''யாராவது உன் மேல் கோபம் கொண்டால்,அதற்கு பதிலாக உடனே எதுவும் செய்யாதே.உடனே பதிலுக்கு சண்டை போடாதே.அவன் சொல்வதைக் கவனமாகக் கேள். பிறகு அவனிடம்,'நான் நீங்கள் கூறியவற்றைப் பற்றி சிந்திக்க எனக்கு 24 மணி நேர அவகாசம் கொடுங்கள்.பிறகு தகுந்த பதிலை உங்களுக்கு சொல்கிறேன்,'என்று கூறவும்.''குருட்ஜீவ் கூறுகிறார்,''இந்த அறிவுரைஎன் முழு வாழ்க்கையையும் மாற்றி விட்டது.ஏனெனில் சில சமயம் பிறருடைய கோபம் என்னை ஒன்றும் செய்வதில்லைஎன்பதனை உணர்ந்தேன்.நான் அதற்கு உடனடியாக பதில் சொல்லத் தேவையில்லை.ஏனெனில் அது என்னைக் குறித்து சொல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.நான் அவர் அருகில் இருப்பதே,அவர் கோபம் என் மீது பாயக் காரணமாகி விட்டது என்று நினைக்கிறேன்.அப்படியே நான் செய்தது தவறு என்று மனப்பூர்வமாக உணர்ந்தால்,அவரிடம் சென்று நேரடியாக,'என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்,'என்று கூறுகிறேன்.இது எனக்கு மன ஆறுதலாக இருக்கிறது. நான் சொன்னதுபோல 24 மணி நேரத்தில் மீண்டும் வரவில்லை என்றால் அது என்னைக் குறித்த கோபம் அல்ல என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று பொருள்.''


குழந்தை மேதையாக....

உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா?
சின்ன வயது முதல உங்கள் குழந்தையை அறிவுள்ளதாக வளர்க்க முடியும்.எவ்வளவுக்கு எவ்வளவு சின்ன வயதிலேயே தொடங்க முடியுமோ,அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
**படிப்பை ஒரு விளையாட்டாகச் சொல்லிக் கொடுங்கள்.
**தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரம் குழந்தையுடன் இருப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
**இரவுச் சாப்பாட்டின் போதுகுழந்தையின் வகுப்புப் பற்றியும்,பாடத்தைப் பற்றியும்,நண்பர்கள் பற்றியும் பேச்சுக் கொடுங்கள்.
**அகராதியில் தினசரி ஒரு வார்த்தை கற்றுக் கொள்ளப் பழக்குங்கள்.
**வெளியூருக்குப் போனால் அவ்வூர் இருக்கும் இடம், போகும் வழி பற்றி விளக்குங்கள்.
.**குழந்தையை மனப்பூர்வமாகப் பாராட்டுங்கள்.மிகச் சிறிய சுலபமான விஷயத்திற்குப் பாராட்டுவது தவறு.
**ஒரு புதிய விஷயத்தைக் குழந்தைக்குச் சொல்லித்தர வேண்டுமானால் ,அதற்குப் பழக்கமான வேறொன்றைக் காட்டி விளக்குங்கள்.
**எங்காவது செல்லும் போது,வழியில் காணப்படும் அறிவிப்புப் பலகைகளுக்கு விளக்கம் கொடுங்கள்.
**சாலை விதிகளைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள்.
**குழந்தையிடம் அடிக்கடி சொல் விளையாட்டு விளையாடுங்கள்.
**ஓரிடத்துக்குப்போய் வந்த பின் அதைப்பற்றி வர்ணித்துப் பேசக் குழந்தையைக் கேளுங்கள்.
**குழந்தைகளை அடக்காமல் ,நிறையக் கேள்விகேட்க இடம் கொடுக்க வேண்டியது அவசியம்.புரிகிற மாதிரி முழுமையாகப் பதில் கொடுங்கள்.
**படிப்பது ஒரு சந்தோசமான விஷயம் என்பதை உங்கள் குழந்தை அறியும் வண்ணம் படியுங்கள்.


முன் முடிவு

வாழ்வில் எந்த விஷயத்தை அணுகும் போதும் நாமே ஒரு முன் முடிவு செய்து கொள்ளாமல் நடுநிலையோடு அணுகுவதுமிக அவசியம். முன் முடிவோடு அணுகும் போது அதன் மீது நமக்கு இருக்கும் உடன்பாடோ,முரண்பாடோ உண்மையைக் காண முடியாமல் நம் கண்களையும் மனதையும் குருடாக்கிவிடும்.''அவரா?அவர் அப்படித்தான் சொல்வார்.''''அதுவா,அது அப்படித்தான் இருக்கும்.''என்று ஒரு முன் முடிவு எடுத்துக் கொண்டுஒரு விஷயத்தை அணுகுபவர்களால் உண்மை நிலையைக்காண முடியாது.முன் முடிவுக்காரர்களிடம் முட்டிக் கொள்வதை நாம் எப்போதுமே தவிர்ப்பது நல்லது.

திட்டி விட்டார்களா?

எவரேனும் திட்டிவிட்டால் உடனே சோகமாகி விடுவதும்,எல்லா வேலைகளையும் அப்படி அப்படியே போட்டுவிட்டுச் சோம்பி விடுவதும், முடிந்தால் ஏகமாக அழுவதும்,இப்படி அநியாயமாகத் திட்டி விட்டார்களே என்று பொருமுவதும் நம்மில் பலரது இயல்பாய் இருந்து வருகிறது.ஒருவர் திட்டி விட்டால் அதைப் பற்றிக் கொஞ்ச நேரம் சிந்தித்து விட்டு அப்புறம் மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கற்றுக் கொள்வது அவசியம்.
ஒருவர் திட்டினால் நாம் தவறாக நடந்து கொண்டோமா என நம்மை நாமே மனசாட்சியின் துணையுடன் சிந்திக்க வேண்டும்.ஆம் என்றால் அவர் திட்டியது சரிதான் என நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.இல்லையென்றால் அது உண்மை இல்லாத போதுநாம் ஏன் அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டும் என்று சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.
முன்பின் தெரியாத ஒருவர் திட்டினால்நம் அருமை தெரியாதவர் என அதைப் புறக்கணிக்க வேண்டும்.மிக வேண்டியவர் திட்டினால் அதன் பின்னே மறைந்திருக்கும் அக்கறையைபெரிது படுத்திப் பார்க்க வேண்டும். தவிர திட்டிய பாணியையும்,திட்டப்பயன் படுத்திய வார்த்தைகளையும் பெரிது படுத்திக் கொண்டிருக்கக் கூடாது.
தன தாயைப் பற்றித் திட்டியவனை வெட்டி விட்டு எத்தனை பேர் சிறை செல்கிறார்கள்?தன தாயைப் பற்றி நன்கு அறிந்தவன் கொலை செய்யும் அளவுக்கு ஏன் கோபம் கொள்ள வேண்டும்?
தெரிந்தவர்கள் திட்டினால் பதிலுக்கு மல்லுக்கு நிற்கக் கூடாது.நடந்த சம்பவத்தைப் பற்றி தண்டோரா போட்டு திட்டியவன் காதுக்கு வேறு விதமாகச் செய்தி போய் விடக் கூடாது.திட்டியவர் தணிந்து வருவார்.அப்போது நம் பக்கத்து நியாயம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.
இந்த முறையைக் கையாண்டால் நம் மீது அவர்களுக்கு அன்பு வளர நாம் வழி வகுத்து விட்டோம் என்று பொருள்.

--லேனா தமிழ்வாணன்






சலிப்பு தீர

சலிப்பிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் வெளிவர மிக எளிய வாழ்வியல் முறை,வாழ்க்கையை அதன் உச்சத்தில் வாழ்வதுதான்.
சாப்பிடும் போது ஒரு ரசகுல்லாவின் சுவையை அதன் உச்சத்தில் அனுபவிக்க முயற்சி செய்யுங்கள்.இரண்டு மூன்று கடியில் ஐந்து ரசகுல்லாவை சாப்பிடுவதும் ஒரே ஒரு ரசகுல்லாவை முழு சுவையும் வாயிலே கரைந்து போகும் அளவிற்கு பல நிமிடங்கள் சுவைத்து சாப்பிடுவதும் ஒன்றே.
சுவையின் உச்சத்தை ஒரே ஒரு முறை ருசித்து விட்டால் ஒருரசகுல்லா போதும்.திருப்தி கிடைத்துவிடும்.சுவையின் உச்சத்தை ருசிக்காவிட்டால் பத்து சாப்பிட்டாலும் திருப்தி கிடைக்காது.சலிப்பும் கஷ்டமுமே மிஞ்சும்.
நீங்கள் அனுபவத்தே ஆக வேண்டும் என்று துடிக்கும் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் நிதானித்து அதன் உச்சத்தில் அனுபவியுங்கள்.அப்போது 'இன்னும் கொஞ்சம்'என்று தொக்கி நிற்கும் உணர்வு இருக்காது.சலிப்பு நெருங்கவே நெருங்காது.


இரு கோடுகள்

ஒரு கோட்டை அழிக்காமலே அதை சிறிதாக்க முடியுமா என்று கேட்டார் ஆசிரியர்.அறிவு மிக்க மாணவன் ஒருவன் அச்சிறு கோட்டின் அருகே ஒரு பெரிய கோட்டை வரைந்தான்.ஆசிரியர் மாணவர்களிடம் சொன்னார்,''இதோ பாருங்கள்,இந்தப் பெரிய கோடு நமக்கு என்ன அறிவிக்கிறது?வாழ்க்கையில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் மற்றவரை வதைக்கவோ அழிக்கவோ தேவையில்லை என்பதைத்தான்.பெரியவன் ஆக விரும்புகிறவன் பெரிய காரியங்களைச்செய்தே மேல் நிலையை அடைய வேண்டும்,''


கோபம் தீர

கோபத்தைக் கட்டுப்படுத்த ஒரு வழிசொல்லுங்கள எனஒரு ஞானியிடம் ஒருவர் கேட்டார்.ஞானி சொன்னார்,''ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.உங்களின் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டு நீங்கள் கோபப்படுவதேயில்லை.இக்கோபத்தினால் நான் எதையாவது இழந்து விடுவேனோ,எனக்கு இது சாதகமா,பாதகமா என்று ஆராய்ந்து கொண்டேயிருக்கிறீர்கள்.பாதகம் வரும் என்றால் அந்தச் சூழல் அவமானம் தருவதாய் இருந்தால் கூட சிறு தடுமாற்றத்துடன் அமைதியாகிவிடுகிறீர்கள்.பாதகமில்லை என்றால் அந்தச் சூழலில் யாராவது சாதாரணமாகப் பேசி வைத்தால் கூட கோபம் பொங்குகிறது.எனவே உங்களின் கோபம் தர்க்கம் சம்பந்தப்பட்டது.உங்களின் தர்க்கத்தைச் சரி செய்யுங்கள்.கோபம் தன்னால் சரியாகும்.''



செடி இனத்தைச் சேர்ந்த அகத்தி, தோட்டங்களில் குறிப்பாக நீர் தேங்கிய நிலங்களிலும், வெற்றிலைக் கொடிக் கால்களிலும் விளையும். அகத்தியில் சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற சில வகைகள் உண்டு.


பொதுவாக அகத்தி வெள்ளை நிறத்தில் பூக்கும். சிவப்பு நிறத்தில் பூக்கும் அகத்தி சிவப்பகத்தி என்று அழைக்கப்படுகிறது.

சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடம் செய்யும்.

இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும் வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம்.

காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும்.


சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும்.

இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.

குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்துதலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.

இது வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது.


மருந்தாகும் அகத்தி

அகத்திக் கீரையை உண்பவருக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்துக்கு ஒருமுறையேனும் தவறாமல் அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் தேகத்தில் உஷ்ணம் தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும். மலம், சிறுநீர் தாரளமாக கழியும். குடல் புண் ஆற்றும்.
அகத்திக்கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிட நோய்கள் அகலும்.



அக்கரகாரம்




மலைப்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து வளரும் சிறு செடியினம். இதன் வேர் மருத்துவப் பயனுடையது. உலர்ந்த வேர் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். தொண்டையில் நோய்த்தொற்று மூச்சுக்குழல் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த மருந்து.

உமிழ்நீர்ப் பெருக்குதல், பட்ட இடத்தில் எரிச்சலூட்டுதல், நாடி நடையை மிகுத்து வெப்ப மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. ஒரு துண்டு வேரை மெதுவாக நீண்ட நேரம் மென்று விழுங்க பல்வலி, அண்ணாக்குத் தூறு அழற்சி, தொண்டைக் கம்மல், நாக்கு அசைக்கமுடியாமை, நீர்வேட்கை ஆகியவை தீரும்.

2. உலர்ந்த வேரைப் பொடியாக்கி நாசியில் உறிஞ்ச வலிப்பினால் ஏற்பட்ட நரம்புப் பிடிப்பு தீரும்.

3. 30 கிராம் வேர்ப் பொடியை 1 லிட்டர் நீரிலிட்டு 250 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய்கொப்பளித்து வர பல்வலி நீங்கிப் பல்லாட்டம் குறையும். வாய் தொண்டை ஆகியவற்றில் உள்ள புண்கள் -ஆறும்.




கிராம்பு மருத்துவ குணங்கள்

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.


பீட்ரூட்

தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.

பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.

பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.

பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.



நோய் தீர்க்கும் காய்கனிகள்

மாம்பழம்

மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம்

சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

அன்னாசி

அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.
தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

மாதுளம் பழம்

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

வாழைப்பழம்

மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும்.
ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் ஏ(A) உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் ஏ(A) உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

திராட்சைப் பழம்

எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.
தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும்.
எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவு கள் வராது.

பேரீச்சம்பழம்

தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

எலுமிச்சம்பழம்

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

பழங்களைப் போலவே காய்கறி களும் மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுது மாக குணப்படுத்து கிறதோ இல்லையோ ஆனால் நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது. நமது முன்னோர்களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.

பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய் கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.


சீதளத்தை போக்கும் காய்

சுரைக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இதனால் இது சூட்டைத் தணிக்கும். சிறுநீரைப் பெருக்குவதுடன், உடலை உரமாக்கும். இதுவொரு சிறந்த மலச்சுத்தி காய் ஆகும். தாகத்தை அடக்க வல்லது.

கருஞ்சுரைக்காய் என்று ஒரு வகை இருக்கிறது. அது குளுமை செய்வதுடன் தாகத்தை அடக்கும். அத்துடன் சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கி விடும்.

சுரைக்காய் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை உண்டாக்கும். இதனுடைய விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மையை இழந்தவர்கள் அதை மீண்டும் பெறுவார்கள்.

ஆனால் சுரைக்காய் பித்த வாயுவை உண்டு பண்ணும் சக்தி உடையது. ஆகையால் அடிக்கடி சாப்பிட வேண்டாம்.

என்னவெல்லாம் செய்ய முடியாது

யாராலும் கண்களைத் திறந்து கொண்டு தும்மவும் முடியாது, தூங்கவும் முடியாது.

பன்றிகள் தலை நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாது.

யானையால் துள்ளிக் குதிக்க முடியாது.முதலைகளால் அதன் நாக்குகளை வெளியே நீட்டி இரைகளை பற்ற முடியாது.

தட்டான் பூச்சிகளைப் பார்த்திருக்கிறீர்களா. அவற்றிற்கு ஒரு அதிசயம் உண்டு. என்னவென்றுத் தெரியுமா அவை பறந்தாலும் சரி, நின்றாலும் சரி அதனால் இறக்கையை மடக்கி வைக்க முடியாது.

முதலைகளும், திமிங்கலங்களும் நீரில் வாழ்ந்தாலும் அவற்றால் நீருக்குள் மூச்சு விட முடியாது.



அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் !!!

ஐ‌ந்து எ‌ன்பது பா‌‌ஞ்‌ச் எ‌ன்று சொ‌ல்‌ல‌ப்படு‌கிறது. எனவே ஐ‌ந்து பொரு‌ட்க‌ள் அட‌ங்‌கியவ‌ற்றை ப‌ஞ்ச எ‌ன்ற வா‌ர்‌த்தையுட‌ன் இணை‌த்து அழை‌க்‌கிறோ‌ம்.
நில‌ம்,
நீ‌ர்,
தீ,
கா‌ற்று,
ஆகாய‌ம்
என ஐ‌ந்து‌ம் அட‌ங்‌கியதுதா‌ன் ப‌ஞ்ச பூத‌ங்க‌ள்.
மெ‌ய்,
வா‌ய்,
க‌ண்,
மூ‌க்கு,
செ‌வி
என ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்தது ப‌ஞ்ச இ‌ந்‌தி‌ரிய‌ம்
வாழை‌ப்பழ‌ம்,
ச‌ர்‌க்கரை,
தே‌ன்,
நெ‌ய்,
பே‌ரி‌ச்ச‌ம் பழ‌ம்
இவை ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்ததுதா‌ன் ப‌ஞ்சா‌மி‌ர்த‌ம்.
நா‌‌ள்,
நி‌தி,
யோக‌ம்,
கரண‌ம்,
ந‌ட்ச‌த்‌திர‌ம்
எ‌ன்ற ஐ‌ந்தையு‌ம் அ‌றிய‌க் கூடியதை‌த்தா‌ன் ப‌ஞ்சா‌ங்க‌ம் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கிறோ‌ம்.
மு‌த்து,
வைர‌ம்,
மரகத‌ம்,
நீல‌ம்,
பொ‌ன்
ஆ‌கிய ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்தா‌ல் ப‌ஞ்ச ர‌த்‌தின‌ம்.
தர்மன்,
அர்ஜுனன்,
பீமன்,
நகுலன்,
சகாதேவன்
ஐந்து சகோதரர்களுக்கும் பஞ்ச பாண்டவர்கள் எனப்படுவர்.
ஐந்து திசைகளை நோக்கியவாறு இருக்கும் குத்துவிளக்கை பஞ்சமுக விளக்கு என்று அழைப்பர்.
ஜீலம்,
சீனாப்,
ரவி,
சட்லஜ்,
பியாஸ்
ஆகிய ஐந்து நதிகள் ஓடுவதால்தான் பஞ்சாப் என்று பெயரிடப்பட்டது.
இதுபோ‌ல் ப‌ஞ்ச முக ஆ‌ஞ்சநே‌ய‌ர், ப‌ஞ்ச பா‌த்‌திர‌ம் என ப‌ல‌ப் பெய‌ர்க‌ள் உ‌ள்ளன.


அத்திப்பழம்

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.


அன்னாசிப்பூ




புதிய நோய்களைப்பற்றி அறியும்பொழுது, எங்கே நமக்கும் பரவிவிடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்படுவது இயல்புதான். எலிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற போன்றவற்றைப் பற்றிய செய்திகள் காய்ச்சலைவிட வேகமாக பரவுகிறது. இத்தகைய நோய்களை தடுக்க முந்தைய காலங்களில் ஆறுகள், குளங்கள், கேணிகளில் மூலிகை வேர்களை ஊறவைத்தும், யாகங்கள், ஹோமங்கள் செய்து காற்றுமண்டலத்தை தூய்மை செய்தும், மூலிகை ஊறிய நீரை பிறர் மேல் தெளித்தும் அருந்த கொடுத்தும் நோய் வராமல் தடுத்துக் கொண்டனர். ஆனால் மாறி வரும் நவீன யுகத்தில் இதுபோன்ற வாய்ப்புகள் குறைந்துவிட்டதாலும், போக்குவரத்து எளிதானதாலும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் வாய்ப்பும் அதிகரித்துவிட்டது.


ஹோமங்கள், யாகங்களில் பயன்படுத்தப்பட்ட மூலிகை பொருட்கள் கிருமிநாசினி செய்கை உடையதுடன் வைரஸ் போன்ற நுண்கிருமிகள் பரவாமல் தடுக்கும் ஆற்றலையும் கொண்டிருந்தன. இவை ஹோமம், யாகத்தில் பயன்படுவது மட்டுமின்றி, அசைவ உணவுகளை உண்ணும்பொழுது ஜீரணிக்கச் செய்யவும் பயன்படும் அன்னாசிப்பூ என்னும் தக்கோலம் தொற்று நோய்க்கு காரணமான பல வகையான புளூ வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.

இலிசியம் வீரம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மேக்னோலியேசியே (இலிசியேசியே) குடும்பத்தைச் சார்ந்த இந்தச்செடிகளின் பூக்கள் அன்னாசிப்பூ அல்லது தக்கோலம் என்ற பெயரில் நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படுகின்றன. இதன்பூ மற்றும் பழங்களிலுள்ள டிரான்ஸ் அனித்தோல், பெனிக்குலின், ஈஸ்ட்ராகோல், பைசாபோலின், பார்னிசின், கேரியோபிலின், நிரோலிடால் போன்ற சத்துகள் சுரத்தை குறைக்கும் தன்மையுடையன.

வேதி தொழிற்சாலைகள் மூலமாக அன்னாசி பூவிலிருந்து பிரித்து எடுக்கப்படும் சிக்கிமிக் அமிலமானது எச்1என்1 வகை வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உடைய காரணத்தால் ஆசல்டாம்விர் என்ற வைரஸ் எதிர் உயிரி மருந்தில் ஒரு உள்வேதிப்பொருளாக இணைக்கப்படுகிறது. இந்த மருந்தின் ஆரம்பக்கட்ட ஆய்வின்பொழுது சிக்கிமிக் அமிலம் அன்னாசிப்பூவிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது. தற்சமயம் பன்றிக்காய்ச்சலை தடுக்க வழங்கப்படும் டாமிபுளூ மாத்திரை தயாரிக்க மூலப்பொருளாக விளங்கியது அன்னாசிப்பூதான் என்பது பாரம்பரிய மருத்துவத்தின் சான்றாகும்.

சுவாசப்பாதையில் ஏற்படும் நுண்கிருமி தொற்று மற்றும் கழிச்சல் நீங்க அன்னாசிப்பூவை பொடித்து அரை முதல் 1 கிராம் அளவு இரண்டு முறை தேனுடன் கலந்து உட்கொள்ள சுவாசப்பாதையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அன்னாசிப்பூவை 5 கிராம் அளவு எடுத்து 500 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து 100 மி.லி.,யாக சுண்டியபின்பு வடிகட்டி காலை மற்றும் இரவு உணவுக்கு முன்பு குடித்துவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அரை முதல் 1 கிராம் அளவு பொடியை சூடான பால் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட தொற்று காய்ச்சலினால் தோன்றும் தொண்டைக்கட்டு, இருமல், தொண்டைவலி நீங்கும். சளி நன்கு வெளியேறும்.

செரிமானக் கோளாறுகளை நீக்குவதுடன் வயிற்றிலுள்ள காற்றை வெளியேற்றி பசியை உண்டாக்கும் தன்மை உடையதால் அன்னாசிப்பூ பிரியாணி போன்ற செரிக்கக்கடினமான உணவுகள் தயார் செய்யும் பொழுது மசாலாவாக அரைத்து சேர்க்கப்படுகிறது.


இல்லவே " இல்லாத" நாடுகள்

இல்லவே " இல்லாத" நாடுகள் தொடர்பான சில சுவையான தகவல்கள் :
1) "திரையரங்குகள்" இல்லாத நாடு - பூட்டான்
2) "தினசரி பத்திரிகைகள் " இல்லாத நாடு - காம்பியா
3) "காகங்கள்" இல்லாத நாடு - நியூசிலாந்து
4) "ரயில்" இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்
5) "பாம்புகள் " இல்லாத நாடு - அயர்லாந்து
6) தனக்கென " உத்தியோகபூர்வ தலைநகரம்" இல்லாத நாடு - நவ்ரு
7) தனக்கென "தாய்மொழி" இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து
8) "பொதுக்கழிப்பறைகள்" இல்லாத நாடு -பெரு
9) " வாடகைக்கார்கள்" இல்லாத நாடு - பெர்முடா

அலுவலகம் செல்லும் ஆண்களுக்கு டிப்ஸ்!!


அலுவலகம் செல்லும் ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ...

சில டிப்ஸ் ...

1. ஆண்கள் போட்ற ட்ரெஸ், பக்கத்துல இருக்குற பெண்களின் கண்ண உறுத்தும், அதனால டவுசர் போட்டாலும், தாரளமா போடனும்.

2. ஆண்களோட வேல பாக்குற பெண்களிடம் பெர்சனலா பேசாதீங்க

3. கூட வேல பாக்குற பெண்களிடம் ஐடியா கேட்காதீங்க

4. கூட வேல பாக்குற பெண்களிடம் செல் நம்பர் கொடுக்காதீங்க, செல் நம்பர் வாங்காதீங்க

5. கூட வேல பாக்குற பெண்களிடம் கை கொடுத்து பேசாதீங்க

6. ஒங்க கிட்ட காசு இல்லன்னு கூட வேல பாக்குற பெண்களிடம் சொல்லாதீங்க

7. பெண்கள் காம்ப்ளிமென்ட்ஸ் கொடுக்குற அளவுக்கு ட்ரெஸ் பண்ணாதீங்க

8. ஆபீஸ் நேரத்துல ஆபீஸ் வேலைய பாருங்க, பெண்கள் வந்து பேச்சு கொடுக்குறாங்கன்னு அவுங்ககிட்டல்லாம் பேசாதீங்க

9. ப்ரெண்ட்லியா கூட பெண்களைப்பார்த்து ஸ்மைல் பண்ணாதீங்க

10. பெண்கள் டீ குடிக்க கூப்டுவாங்க, போகாதீங்க

11. பெண்கள் லிப்ட் கேட்டா கூட்டிகிட்டு போகாதீங்க, அப்பறம் பக்கத்துல இருக்குறவங்கல்லாம் ஒங்கள தப்பா நெனச்சிப்பாங்க

12. பெண்கள் கிட்ட எப்போதும் குசுகுசுன்னு பேசாதீங்க, எப்போதும் கைல ஒரு சின்ன ஸ்பீக்கர் வச்சிக்கோங்க

13. குட் லக்

14. சாப்டான பாட்டா, போஸ்டானியன், ஆல்டோ ஷூவெல்லாம் போட்டுகிட்டு ஆபீஸ் போகாதீங்க, பெண்களுக்கு பிடிச்சிடும்

15. பெண்கள் ஒங்க ட்ரெஸ் பாத்து, இந்த ட்ரெஸ் நல்லா இருக்கு அப்படின்னா, இனிமேல அந்த ட்ரெஸ் போடாதீங்க

16. வீட்ல நடக்குற கல்யாணம், காதுகுத்தி இதுக்கெல்லாம் பெண்களை கூப்டாதீங்க

17. கல்யாணம் ஆன ஆண்கள் ஒங்க மனைவியைப்பற்றி நல்ல விதமாக பேசுங்க (பேசுவீங்க, எனக்கு தெரியும்!), மற்ற பெண்கள் ஒங்ககிட்ட நெறுங்கவே மாட்டாங்க

18. ஆபீஸ்ல இருந்து அவுட்டிங் போம்போது, டூர் போம்போது, ஏன் லன்ஞ் சாப்ட போம்போது, ஒங்க பைக், கார் இதுல எல்லாம் பெண்களை ஏத்திட்டு போகாதீங்க

19. ஆபீஸுக்கு போம்போது, தலை வாரிட்டு போக கூடாது, ஷேவ் பண்ணிட்டு போக கூடாது ...



அரளிச்செடி



எங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி! அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.

இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் யன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.

வறண்ட நிலத்தில் கூட அரளி அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு, இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் அரளி தாவரம் வளர்க்கப்படுகிறது.

அரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.

அரளி நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.

வெற்றி இரண்டு விதம்

வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது ஒருவிதம். மற்றவர்கள் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில்கூடப்பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம்.


பாறைகள் குவிந்துகிடக்கிற இடம், பார்ப்பவர் கண்களின் தன்மைக்கேற்பகலைக்கூடமாகவோ குவாரியாகவோ மாறுகிறது.
ஆள்நடமாட்டமில்லாத இடத்தில், விவசாயத்திற்கும் பயனில்லாத வெற்றிட.ம்,சிலர் கண்களில் மட்டும் ஓய்வு நேர இல்லங்கள் உருவாக்குவதற்குறிய இடமாகத்தெரிகிறது.



மறந்துவிடாதீர்கள்! ஒரு பொருளோ, இடமோ, மனித ஆற்றலோ நிகழ்காலத்தில்என்னவாக இருக்கிறது என்பதல்ல முக்கியம். எதிர்காலத்தில் என்னவாக வளரும்என்பதுதான் முக்கியம். வாய்ப்புகள் வழியில் வரும்வரை காத்திருக்காமல்,விலகிச் செல்லும் வாய்ப்புகளைக்கூட வழிமறித்துப் பயன்படுத்தும் துடிப்புஇருந்தால் இத்தகைய புதுமைகள் புத்தியில் உதிக்கும்.இப்படிப் புதுமையாய் சிந்திப்பதில் முதல்தடை…

விமர்சனங்கள். ஆர்வமாய்ப்புதிய விஷயங்களைச் சொல்ல வருபவர்கள்கூட, விமர்சனங்கள் வந்ததும்துவண்டுவிடுவார்கள்.அதனால்தான் ஓர் அறிஞர் சொன்னார், “புதுமையாய் சிந்திக்க அறிவு மட்டும்போதாது, துணிவும் அவசியம்” என்று. சமுத்திரம் என்பது குடிக்கப் பயன்படாததண்ணீர் என்று பார்த்து ஆதிகாலத்தில் அநேகம்பேர் அலட்சியம்செய்திருப்பார்கள்.


அதில் உப்பு இருக்கிறது என்று ஒருவன் முதலில் கண்டுபிடித்திருப்பான்,முத்து கிடைக்கிறது என்று இன்னொருவன் கண்டுபிடித்திருப்பான். மீன்பிடித்துச் சாப்பிடலாம் என்று மற்றொருவன் கண்டுபிடித்திருப்பான்.


காலகாலமாய் இருக்கிற கடல், தேவையில்லாத தண்ணீர்ப்பரப்பு என்று விலகிநடக்காமல் வித்தியாசமாய்ச் சிந்தித்தவன்தான் இந்தப் புதுமைகளையெல்லாம்பூமிக்குக் கொடுத்தான்.இந்தப் புதுமைக் கண்ணோட்டம் என்பது, பணம் சம்பாதிக்கும் முறை என்றுமட்டும் பார்த்தால், வளர்ச்சி இருக்காது. புதுமைக் கண்ணோட்ட வழிகள்வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொள்கிற முறை. அதுவே ஒரு வாழ்க்கை முறை.

கண்ணில்படுகிற எதிலும் எண்ணிலடங்காத வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறநம்பிக்கை இதற்கான முதல் தேவை. சாதாரணமான ஒன்றைக்கூட சுவாரசியமாய்மாற்றுகிற படைப்பாற்றல் இதற்கான இரண்டாவது தேவை. படைப்பாற்றல் என்கிறகண்ணுக்குத் தெரியாத சக்திக்கு சொல்வடிவம் கொடுக்கிற திறமை, இதற்கானமூன்றாவது தேவை. ஒன்றை சுவாரசியமாக சிந்தித்து, செயல்படுத்தும் வரையில்பின்வாங்காத முயற்சியும் உழைப்பும் நான்காவது தேவை.

இந்த அம்சங்களை யாரெல்லாம் வளர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள், அதிசயமானவெற்றிகளை அனாயசமாகப் பெற்று விடுகிறார்கள்.
உங்களுக்குள் ஒரு தீப்பொறி இருந்தால், ஊதி ஊதி வளர்க்க வேண்டியவர்நீங்கள்தான். அது பெருநெருப்பாக உருவம்பெறும்வரை உங்களால்தான் அதைக்காப்பாற்ற முடியும். அதுவரையில் அதன் வெளிச்சம் ஊருக்குத் தெரியாது.




உங்களுக்குள் உதிக்கிற புதிய கண்ணோட்டங்கள் ஒவ்வொன்றுமே அத்தகையதீப்பொறிகள்தான்.



உற்சாமாய் ஊதி ஊதிப் பெருக்குங்கள்உங்களால் முடியும்….



முத்துக்கள் !!!

காலண்டரில் கண்ட முத்துக்கள்


திங்கள்- எழுதுவது அருமை. எழுதுவதை பலதடவை வாசிப்பது அதைவிட அருமை.

செவ்வாய்- திருவிளக்கு இட்டாரை தெய்வம் அறியும்.நெய் ஊற்றி உண்டாரை நெஞ்சு அறியும்.

புதன்- கடுமையாக உழைப்பதைத் தவிர வெற்றிக்கு வேறு வழியே இல்லை.

வியாழன்- எல்லோரும் பல்லக்கில் ஏறினால், பல்லக்கை யார்தான் தூக்குவது?

வெள்ளி- நல்ல அறிவு எந்த மூலையில், எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அதனைச் தேடிச் செல்.

சனி- நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதென்பது எளிது. ஆனால்,
உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது.

ஞாயிறு- காலத்தின் மதிப்பு உனக்குத் தெரியுமா?…அப்படியானால் வாழ்வின் மதிப்பு உனக்குத் தெரியும்.



கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது.


படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்!


பகைவனின் பலவீனத்தை அறிய, அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.


காலம் சாதகமாக இல்லாத வரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்!


விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்.


அழிவை நோக்கிச் செல்பவன் பிறருடைய அறிவுரைகளுக்குச் செவி சாய்க்க மாட்டான்.அளவுக்கு அதிகமானபணிவை ஒருபோதும் நம்பக் கூடாது


தன் கையே என்றாலும், விஷம் ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்!


எந்தச் செயலுக்கும் மனமே சாட்சி!


விதை எப்படியோ, பழமும் அப்படியே!


பகைவனே என்றாலும், அவனின் நல்ல பண்புகளும் நமக்கு ஆசான்!


பணத்தின் மிகப் பெரிய பயன், அதை இல்லாதவர் களுக்குக் கொடுத்து மகிழ முடிவதுதான்!


நம்முடைய தொழில் எதுவானாலும் அதில் நமக்குச் சில போட்டியாளர்கள் இருப்பது நல்லதுதான்.


தடைகளைக் கூட, நம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டும்!


மற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷயத்தை முடித்துக் காட்டுவதுதான், நல்ல தலைமைப் பண்பின் அடையாளம்.


உயர்பதவி என்பது நிரந்தர சிம்மாசனம் அல்ல. அது நமக்குச் சரிப்படாவிட்டால், மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிட வேண்டும்.
உங்களிடம் பணி புரிகிறவர்களை, மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்துங்கள். அவர்கள்தான் உங்களுடைய மிகப் பெரிய சொத்து.


உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான்.


இருக்கிற செல்வத்தைப் பகிர்ந்து கொடுத்தால், நம்முடைய நாட்டின் வறுமை எப்போதும் தீராது. இந்த வறுமையை ஒழிப்பதற்கு ஒரே வழி, நியாயப்படியும் தர்மப்படியும் நிறைய செல்வம் சேர்ப்பதுதான்!


தயாராக இருக்கிறவர்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன!


எப்போதும், எதற்காகவும் உங்களுடைய அக சந்தோஷத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்.

கோழையின் அச்சம்கூட சில சமயங்களில் அவனை வீரனாக்கிவிடுவது உண்டு.

இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள், ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்.

உள்ளத்தின் ஒழுங்குமுற்றிலும் குலைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.

அறியாமை, ஆண்டவனின் சாபம். அறிவோ, விண்ணை நோக்கி நாம் விரிக்கும் இறக்கை.

உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.

நன்மையென்றும் தீமையென்றும் எதுவும் இல்லை. அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே.

உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.

பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை.
ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.

தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை வேறு யாரும் காப்பாற்ற முடியாது.

சிப்பாய் தன் துப்பாக்கியைப் போற்றுவது போலவும் இசைக் கலைஞன் வீணையைப் போற்றுவது போலவும் ஒரு பெண் தன் காதலனைப் போற்றுகிறாள்.

சிலர் அளவுக்கதிகமான செல்வத்தில் திளைக்க, மற்றவர்கள் வறுமையில் வாடும்படியாக இருக்கும் நாடு சீர்குலைந்து அழிந்துவிடும்.

நூறு விதமாக கூறினாலும், விவாதித்தாலும், விளக்கினாலும் மதம் ஒன்றுதான்

நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

அதிகம் ஊக்கம் உடையவர்களாகவும் குறைந்தவேலை உடையவர்களாகவும் இருக்கும் மனிதர்களே பெரும்பாலும் சண்டைக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

நேல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக்கொள்ளும் நன் மதிப்பாகும்.

திட்டமோ கவனமோ இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குபவர்கள்தான் தடுமாறுகிறார்கள்.

நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.

எளிமையாகவும், இயல்பாகவும் இருப்பதையும் பேசுவதையும் மக்கள் அபூர்வமாகப் பார்க்கிறார்கள்.

நம்மையும், நமது திறமையையும் நாமே மதிப்பதும் நம்பிக்கை கொள்வதும் மிகவும் அவசியம்.

வாழ்த்தைக் கேட்டு வானத்தைத் தலைநிமிர்ந்து பார்க்கவும் வேண்டாம். வசவைக் கேட்டு தரை பார்த்துத் தலைகுனியவும் வேண்டாம்.

சினிமா என்பது உலகின் சக்தி வாய்ந்த ஊடகம். இப்பேர்ப்பட்ட சினிமாவில் அவரவர் நாட்டு நாகரிகம் காப்பாற்றப்பட வேண்டும்.
லட்சியம் ஏதுமின்றி அன்றாடத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேர்ந்துவிட்டால், அதிலேயே மூழ்கி மங்கிவிடுவோம்.


காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல் போல்தான் படைப்பாளியின் மனம்.

பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை.

எவன், எந்தெந்த அளவு பாத்திரத்தை என்னென்ன முறையில் வைத்திருக்கிறானோ… அந்தந்த அளவு அவனுக்குகடவுளின் கருணை கிடைக்கிறது.

உயர்வு, தாழ்வுக்கு இடமற்றதுதான் உலகம். அவ்விரண்டும் மனிதனாகக் கற்பித்துக் கொண்டவை.

சாவுக்குப் பயப்படாத ஒருவன், எதையும் சாதிக்கும் சக்தி பெற்றவனாகி விடுகிறான்.
வைராக்கியம் எங்கே தவறுகிறதோ, அப்போது துறவறம் தவறிப் போகும்.

கல்லூரிகளும் சர்வ கலாசாலைகளும் பட்டதாரிகளைத் தான் உண்டாக்கும். புத்திசாலிகளை உண்டாக்கா!

ஒதுங்கிவாழ்வதே சந்நியாசம். ஊருடன் வாழ்வதே இல்லறம்.

மனிதனுடைய ஆசை மேலோங்கி விட்டால் ஆண்டவனையே ஏமாற்ற முனைந்து விடுகிறான்.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்கிறவன், பொது வாழ்வில் ஒழுக்கமுடன் நடப்பான் என்பது வடிகட்டிய புரட்டு.

தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும்போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் எவ்வளவு அறியாமையில் இருந்தோம் என்பதை நமக்கு அளந்து கொடுக்கிற கருவிதான் அறிவு.

எல்லார் இடத்திலும் தெய்வம்உண்டு. ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை.

தேசபக்தனுக்கு தேசமே குறி. அரசியல்வாதிக்கு தேர்தலே குறி.

அதிகாரத்தில் இருப்பவனுக்கு அடக்க உணர்ச்சியும், அரசியல்வாதிக்கு நாவடக்கமும், தேசபக்தனுக்கு சேவா நோக்கமும் தவிர்க்க முடியாத தேவைகள்.
லட்சியத்தில் சுத்தம் இருக்கிறபோது எவ்வளவு பெரிய சக்தி எதிர்த்தாலும் அதை எதிர்க்க வேண்டியதுதான்.

மக்கள் புரட்சி செய்தால், அது எப்போதும் நியாயமாகத்தான் இருக்கும்.
உறுதி… உறுதி… இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பதுகூட கடினம்.


உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.

அதிர்ஷ்டம் வந்தாலும் வராவிட்டாலும் துரதிர்ஷ்டத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய துணிச்சலால் எதையும் சாதித்துவிடலாம்!

குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்த பிறகும் கூண்டைவிட்டுத் தாண்டக்கூடாது என்றால், அது ஆகக்கூடிய காரியமில்லை.

தன்னால் ஏற்படுகிற தவறுகளை ஒப்புக்கொள்ள ஒருவர் என்றுமே பின்வாங்கக் கூடாது!

நாளை என்பது மிகமிகத் தாமதமாகும். இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள்.

எந்த வேலையைச் செய்யத் தனக்குத் தகுதி உள்ளது என்பதை ஒவ்வொரும் முதலில் கண்டுபிடித்தாக வேண்டும்.

காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும்.

தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர்.



கல்லறை வாசகங்கள் !!!

உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்:

“”உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல வேளையாகப் பிணமானாள்.இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரிராஜ்ஜியம் தூங்க வேண்டியதாகி இருக்கும்”


புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தன் தாயாரின்கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை :




சாமியார் ரஜினிஷ் கல்லறையில் எழுதப்பட்டிருப்பது:


ரஜினிஷ் பிறக்கவுமில்லை # இறக்கவுமில்லைஅவர் இந்த உலகத்தைப் பார்வையிட வந்தார்.சப்தமிட்டு நடக்காதீர்கள்இங்கேதான்என் அம்மா இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்!


அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!!

ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்? தொடர்ந்து படிப்பதற்கு முன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்து ஒரு பதிலை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம். ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி 1,093 கண்டுபிடிப்புகளைச் செய்து அத்தனைக்கும் patents தன் பெயரில் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?



அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அத்தனைக்கும் அவர் கண்டுபிடிப்புகள் சாதாரணமானவை அல்ல. மின்சார பல்பு முதல் இன்று நாம் கண்டு மகிழும் திரைப்படம் (அவர் அதை Kinetoscope என்று அழைத்தார்) வரை பல மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும் அதில் அடங்கும்.அவர் எப்படி அதை சாதித்தார் தெரியுமா? தன்னுடைய அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல் அடுத்தவர் அறிவு மற்றும் அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஒரு பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் முன் அப்பொருள் பற்றி அதுவரை வெளியான எல்லா நூல்களையும் ஒன்று கூட பாக்கி விடாமல் படித்து விடுவார். மற்றவர்கள் கண்டுபிடித்து நின்ற இடத்திலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். எனவே அவர்கள் செய்திருந்த தவறுகளைச் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தது.

அவர்களது பல வருட அனுபவங்களின் பயனை அவர் எடுத்துக் கொண்டதால் தான் இத்தனை மகத்தான சாதனைகளை தன் வாழ்நாளிலேயே அவரால் செய்ய முடிந்தது.இப்படி அடுத்தவர் அனுபங்களைப் பயன்படுத்துவது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் பொருந்தும். அடுத்தவர் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டால் ஒழிய நாம் அந்த அறிவைப் பெற நம் வாழ்நாள் முழுவதும் செலவழிக்க வேண்டி வரும். அப்படிச் செய்தால் கற்ற அறிவைப் பயன்படுத்த மீதி நாட்கள் நமக்குப் போதாமல் போய் விடும்.ஒரு வேலையைச் சிறப்பாக செய்து கொண்டிருப்பவன் அந்தத் திறமையைப் பெற்றதெப்படி அதைப் பயன்படுத்துவது எப்படி என்று அற்புதமாக உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும், உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வமிருந்தால். ஒரு மாபெரும் வெற்றி நிலையை எட்டியவனைக் கூர்ந்து கவனித்தால், வெற்றியடைய வைத்த அம்சங்களை ஆர்வத்துடன் ஆராய முடிந்தால் வெற்றிக்கான வழிகளை நீங்கள் சுலபமாக நீங்கள் கற்க முடியும். அந்த அம்சங்களை உங்களிடத்தில் கொண்டு வர முடிந்தால் வெற்றி நிச்சயமே.

அதோடு நின்று விடாதீர்கள். அதைத் தொடக்கமாக வைத்துக் கொண்டு மேலும் அதிக வெற்றிகளைக் குவிக்கப் புது வழிகள் உள்ளனவா என்று யோசித்து செயல்பட்டு மேலும் அதிகமாய் சாதிக்கப் பாருங்கள்.வெற்றி அடைந்தவர்களிடமிருந்து மட்டுமல்ல; தோல்வி அடைந்தவர்களிடமிருந்து கூட எத்தனையோ கற்க முடியும்.


தோல்வியடைய வைத்த குணாதிசயங்களை ஆராய்ந்து உணர்ந்தால் அதுவும் கூட எத்தனையோ உங்களுக்கு சொல்லித்தரும். நீங்கள் அந்த குணாதிசயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கினால் தோல்வியையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்க முடியும். இப்படி நாம் கூர்ந்து நம்மைச் சுற்றிலும் கவனித்தால் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று தங்கள் வாழ்க்கையையே உங்களுக்கு உதாரணமாகக் காட்டும் பல மனிதர்களைப் பார்க்கலாம். உண்மையான புத்திசாலிகள் அதிலிருந்தே நிறைய கற்றுக் கொள்கிறார்கள்.

எத்தனையோ தவறுகளையும், முட்டாள்தனங்களையும் செய்யாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவனை என்ன கேட்பது, இவனை என்ன கவனிப்பது என்று அலட்சியமாய் இருப்பவர்கள் எத்தனையோ படிப்பினைகளை இழக்கிறார்கள். அவர்கள் தலையெழுத்து, தானாகப் பட்டுத் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. அந்தத் தலையெழுத்தை நீங்கள் தவிர்க்கலாமே.


அருகம்புல்



நம்மில் பலர் அருகம்புல்லை பூஜை அறையில் வைத்துப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், அருகம்புல்லின் மருத்துவப் பெருமைகளை அறிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்?

நமது உடலில் ஊட்டச்சத்து பெருக வேண்டும் என்பதற்காக ஹோர்லிக்ஸ், ஓவல்டின், போன்ற பானங்களைஸ் சாப்பிடுகிறோம். ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து முலிகை என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது.

நல்ல தளிர் அருகம்புல்லை சேகரித்து நீரில் கழுவி நைய அரைத்து பசும் பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லுமுன் சாப்பிட்டு வந்தால் பலவினமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும். வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற இதே முறையைக் கையாளலாம்.

அருகம்புல்லை நிரிலிட்டு நன்கு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து வந்தால் இத நோய்க்கு இதமளிக்கும்.

திடிரென ஏற்படும் வெட்டு, காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும், அருகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக் கட்டினால் உதிரப் போக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் ஆறிவிடும்.

குழ்ந்தை வளர்ப்பில் பல பரிணாமம் !

உங்கள் குழந்தையின் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள்!




குழந்தைகளுக்கு வகை வகையான உணவுகளை ஆக்கித் தருகிறீர்கள். விதவிதமான உடைகளை வாங்கித் தருகிறீர்கள். இது போதுமா? நிச்சயம் போதாது. குழந்தையின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் நடந்து கொள்ளவேண்டும். ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்?

*

நம்முடைய இயல்புகளைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தபடி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். இது தவறானது. குழந்தைகள் பெற்றோர்களிடம் பாதுகாப்பை மட்டுமல்ல, பரிவையும் எதிர்பார்க்கிறார்கள். அன்புடன் அக்கறையையும் தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மையையும் எதிர்பார்க்கிறார்கள்.


**

உங்கள் குழந்தைகளை நீங்களே புரிந்து கொள்ளாவிட்டால் பின்பு யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கும் தன்மை மனிதர்களிடம் காணப்படுகிற ஒரு விசேஷப் பண்பு. உங்கள் குழந்தை உங்கள் சக மனிதர்தான். அடிமைகளைப் போல அவர்களை நடத்தாமல் நண்பர்களிடம் நடந்து கொள்வதைப் போல நடந்து பாருங்கள். உங்கள் குழந்தை வளர்வதை உணர்வீர்கள்.

உங்கள் குழந்தையும் பிறர் உணர்வும் எந்தக் குழந்தையின் உணர்வுகளை அதன் பெற்றோர்கள் அக்கறையோடு புரிந்து பரிவு காட்டுகிறார்களோ, அந்தக் குழந்தைதான் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறது என்று டாக்டர் பார்னெட் தெரிவிக்கிறார்.


**

பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை குழந்தைகளிடம் எப்படி இருக்கிறது?

இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் விரிவான ஆய்வு செய்து தங்கள் முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள்.

குழந்தைகள் வளர்ந்து வரும் சூழல்கள் அவர்களது குணத்தில் ஏற்படுத்துகிற மாற்றத்தை அந்த ஆராய்ச்சிகள் துல்லியமாகக் கண்டறிந்துள்ளன. இரக்ககுணம், அலட்சிய மனோபாவம், விரோத மனப்பான்மை போன்றவற்றைக் குழந்தைகள் சூழ்நிலைக்குத் தக்கவாறு பெற்று வளர்வதாகத் தெரிந்தது.


“பாதுகாப்பற்ற சூழலில் வளரும் குழந்தைக்குப் பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்” என்று டாக்டர் பார்னெட் கூறுகிறார்.


தன்னுடைய இயல்புகளை உணர்ந்து கொள்ளும் விலங்குகளால்தான் பிற விலங்குகளின் உணர்வைப் புரிந்து கொள்ள முடியும் என்று விலங்கியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதைப்போல மற்ற விஷயங்களில் ஈடுபடுவதற்கு முன் தன்னுடைய தனித்துவம் மீது கட்டுப்பாடு இருப்பதை ஒரு குழந்தை உணர்ந்து கொள்ள வேண்டும். பிறரின் உணர்வு களைப் புரிந்து கொள்ளும் உணர்வு குழந்தைகளிடம் நான்கு கட்டங்களில் உருவாகிறது என்கிறார்கள் மனவியல் வல்லுநர்கள்.


**

முதல் கட்டம்:


தனக்கும் மற்றவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தெரியாத நிலையில் ஒரு குழந்தை இருக்கிறது. பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்தன்மை அவ்வளவாக இருக்காது. மற்ற குழந்தைகள் துன்பப்படுவதை அது பார்த்தால் பொதுவான ஒரு உணர்வைத்தான் வெளிப்படுத்தும்.


உதாரணமாக,

ஒரு குழந்தை தரையில் விழுந்து அதனால் சிராய்ப்பு ஏற்படுவதைப் பார்க்கும் இன்னொரு குழந்தை உடனே தன் முகத்தைத் தாயின் மடியில் புதைத்துக் கொள்ளும். இதுதான் ஏறத்தாழ 9 மாதத்தில் ஒரு குழந்தையின் வெளிப்பாடாக இருக்கும்.

**

இரண்டாவது கட்டம்:


குழந்தைகளின் வயது 14 மாத காலமாகும் போது அவை தனித்தன்மையைப் பெறத் துவங்கிவிடுகின்றன. அப்போது மற்ற குழந்தைகள் காயப்படுவதைப் பார்த்தால், இந்த குழந்தை காயம்பட்ட குழந்தையைச் சமாதானப்படுத்த முயற்சி செய்யலாம்.



அல்லது வேறு ஏதேனும் அரைகுறை முயற்சிகளை மேற்கொள்ளலாம். அடிபட்ட குழந்தையைத் தன் தாயிடம் அழைத்துச் செல்கிற நிலைமை வரையில்தான் இந்த அரைகுறை முயற்சிகள் தொடரும்.

**


மூன்றாவது கட்டம்:


இரண்டாவது வயது நிரம்பும்போது குழந்தை மூன்றாவது கட்டத்தை அடைகிறது. இப்போது தனக்கும் பிறருக்கும் உள்ள வேறு பாட்டை அறிந்து கொள்ளும் தன்மை அதனிடத்தில் ஏற்பட்டு விடுகிறது. இதனால் பிறரின் உணர்வுகளை உணரும் தன்மையும் உருவாகிறது.


***

நான்காவது கட்டம்:


குழந்தைப் பருவத்தின் இறுதி நிலையில்தான் பிறரின் உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்ளும் அறிவாற்றலை குழந்தைகள் பெறுகின்றன. இப்போது மற்ற குழந்தை அனுபவிக்கும் உணர்வை இந்த குழந்தை அப்படியே உணராது. மற்ற குழந்தைகளின் சூழல்களுடன் உணர்வையும் பொருத்திப் பார்த்து உணர்ந்து கொள்ளும்.

உதாரணமாக


புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை சிரித்து விளையாடினால் அந்த குழந்தையின் மகிழ்ச்சியை இது அனுபவிக்காது.


***

குழந்தையை மதியுங்கள்:


பிறரின் உணர்வுகளை நம் குழந்தைகள் உணர்ந்து கொள்வதன் அடிப்படை நம் குழந்தை களின் உணர்வுகளை நாம் மதிப்பதுதான். கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள் பிற குழந்தைகள் துன்பப்படும்போது இரக்கம் காட்டுவதில்லை.

*

துன்பத்துக்குள்ளான குழந்தையை இது வெறுமனே பார்த்துக் கொண்டு நிற்கும். அல்லது அதன்அருகில் சென்று கூக்குரலிட்டு விட்டு அதனைத் தள்ளிவிடும் என்கிறார் டாக்டர் பார்னெட்.


*

எனவே, ‘பிள்ளை நல்லவராவதும் தீய வராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்பதைப் பெற்றோர் புரிந்து கொண்டால் பிரச்சினை இல்லை. நம் பிள்ளையை நாம் மதித்தால் ஊரார் பிள்ளையை அது தானாய் மதிக்கும்.


***



குழந்தைகளின் குணமறிந்து செய்வோம் ஹோமியோ!



குழந்தைகளும் தெய்வமும் ஒன்று என்று பெரியவர்கள் கூறுகின்றார்கள். ஒவ்வொரு குழந்தையும் தனித்தனித் தன்மைகள் உள்ளன. ஹோமியோவில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு மருந்துகள் உண்டு.

AETHUSA BABY :

இக்குழந்தைகளுக்கு பால் ஒத்துக்கொள்ளாது.

பால் எந்த வடிவில் கொடுத்தாலும் பெரிய தயிர் கட்டிகளாக வாந்தியெடுக்கும்.

குழந்தை நிற்க முடியாமை.

தலை தொங்குதல்.

தலையை நேராக நிறுத்த முடியாமை.

மந்த நிலையில், குழம்பிய குழந்தை.

பல் முளைக்கும் காலத்தில் வரும் வயிறு உபாதை.

***

ANACARDIUM CHILD :

ஞாபக மறதி உள்ள சிறுவர்கள்.

திடீரென்று ஞாபக சக்தியை இழந்துவிடுவார்கள்.

தன்தோளில் ராட்சதன், தேவதை உட்கார்ந்திருப்பது போல் எண்ணம்.

குழந்தைகள் வயதானவர்கள் போல் தோற்றமளிக்கும்.

கால்கள் மெலிந்து காணப்படும்.

இச்சிறுவர்கள் சர்க்கரையை விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

எல்லாம் வியாதியும் சக்கரை அல்லது இனிப்பு தின்ற பின்புதான் ஏற்படும்.

மூத்திரம் தன்னையறியாமல் வெளியாகும்.


***


BARYTA CARB BABY :

புத்தி வளராத குழந்தை.

இக்குழந்தை பேசவும், நடக்கவும், தாமதமாகக் கற்றுக்கொள்ளுதல்.

புத்தியின்மை, ஞாபகமின்மை குழந்தைகள்.

புதிய மனிதர்கள் யாராவது வீட்டுக்கு வந்தால் குழந்தை கைகளால் முகத்தை மூடிக்கொள்ளுதல்.

நாற்காலி மேசைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் விளையாட விருப்பமில்லாது.

***

BELLADONNA BABY:

குழந்தையின் முகம்சிவந்து காணப்படும்.

சிறுவர்கள் பேய் பிசாசுகளை பார்ப்பதாகச் சொல்லுவார்கள்.

கருவிழி அகன்று இருக்கும்.

***

BOBAX-CHILD

குழந்தையைத் தூக்கி வைத்திருந்துவிட்டு கீழே இறக்கும் போது அலறும்.

கீழ் நோக்கும் எந்த அசைவும் பயத்தை கொடுக்கும்.

குழந்தையின் வாயில் புண் காணப்படும்.

எது சாப்பிட்டாலும் வாயில் இருந்து இரத்தம் வரும்.

குழந்தை மூத்திரம் போய்க்கொண்டே இருக்கும்.

***

CALCAREA CARB - BABY :

எலும்புகளில் பலமில்லாததால் சீக்கிரமாக நடக்காது.

குழந்தை மந்தமாய் உட்கார்ந்து கொண்டிருக்கும்.

புத்தியிருக்காது, சுறுசுறுப்பிருக்காது.

மிகப்பெரிய தலை மற்றும் உப்பிய வயிறு.

குழந்தையின் எலும்பு சரிவராமல் வளராது.

தலையில் எலும்பு சரிவராமல் வளராது.

தலையில் வியர்வை வரும்.

பல் முளைக்க கால தாமதம்.

குழந்தை செரிக்காத உணவை விரும்பி திங்கும்.

***

ALUMINA-BABY


குழந்தைகள் சாம்பல், கரி, கிராம்பு, மாவு, காபி, டீ, கொட்டை,போன்ற செரிக்காத உணவை விரும்பி சாப்பிடும்.

புட்டிப்பால் சாப்பிடும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும்.

***

AMBRA GRISEA - BABY:

குழந்தைகள் யாராவது இருந்தால் மூத்திரம் போகாது.

***

CHAMOMILLA - BABY

குழந்தைக்கு பல் முளைக்கும் காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு.

குழந்தைகள் வலி பொருக்காது.

குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டால் சமாதானடையும்.

குழந்தைகளை கீழே போட்டால் அழும்.

தன்னை பிறர் பார்ப்பதற்கோ அல்லது தொடுவதற்கோ விரும்பாது.

தூங்குவது போன்று நடிக்கும். ஆனால் தூங்காது.


***


CINA-BABY

நாக்குப்பூச்சி அதிகம் உள்ள குழந்தை.

மூக்கையும், ஆசனத்தையும் விரல்களால் நோண்டும்.

தூக்கத்தில் பற்களை நறநறவென்று கடிக்கும்.

கொடுக்கும் பொருட்களை தூக்கி எறியும்.

குழந்தை அழும்போது தூக்கி வைத்துக் கொண்டால் சமாதானம் அடையாது.

***

SULPHUR - BABY

குழந்தை கை, கால், கழுவ மற்றும் குளிக்க விரும்பாமை

குழந்தை அழுக்கடைந்து காணப்படும்.

உடல் மெலிந்து, வயிறு உப்பி காணப்படும்.

தண்ணீரைக் கண்டால் பயம்.

இரவு நேரங்களில் துணிகளை அவிழ்த்துப் போட்டுவிடும்.

(மேலே குறிப்பிட்டது போல் தங்கள் குழந்தையிருந்தால் அம்மருந்தை தக்க வீரியத்தில் கொடுக்கலாம்.)

**

குழந்தைகளின் குணநலன்களை மேம்படுத்தும் மலர் மருத்துகள்

“எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே பின்

நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பதிலே”


இன்றைய குழந்தையே நாளைய மனிதன். குழந்தைகள் வளரும்போது மனங்களில் மாசுபடிந்தால், அறிவுரைகளும், ஆலோசனைகளும் கூறி அவற்றை நீக்க முடியாவிட்டால் டாக்டர் பாச் மலர் மருந்துகள் மூலம் சிறந்த பலன்பெற முடியும்.

குழந்தையிடம் காணப்படும் இயற்கைக்குப் புறம்பான, எதிர்மறையான உணர்வுகளை, தீயபழக்கங்களை... ஆரம்ப நிலையிலேயே மலர் மருந்துகள் சிகிச்சை மூலம் எளிதில் திருத்த முடியும்.



ஒவ்வொரு குழந்தையும் சமுதாயத்திற்குப் பயனுள்ள பிரஜையாக மலர்ச்சி அடைய, சிறந்த ஆளுமைத் திறன்களைப் பெற கீழ்க்கண்ட மலர்மருந்துகள் பயன்படும்.

***


மலர்மருந்துகள்:


1. குழந்தை தூங்கி எழும் போது கோபத்துடன் எழுதல், தலையணை போர்வை மற்றவற்றை உதைத்தல், அழுதல் -செர்ரிப்ளம்

2. காலையில் நீண்ட நேரம் கழித்து விழிக்கும் குழந்தை - ஸ்கிளரான்தஸ்

3. எப்பொழுதும் தூங்கிக் கொண்டு இருத்தல். அதிக தூக்கம் - கிளமெடிஸ்

4. தூங்காமல் புரண்டு புரண்டு படுததல், அமைதியின்மையுடன் இருத்தல் - வொயிட்செஸ்ட்நட் + ரெஸ்கியூரெமடி

5. இரவு தூக்கத்தில் எழுந்து பயந்து வீறிட்டு அலறுதல் - Rock Rose, Aspen

6. தனியாக இருக்க தனியாக எங்கும் செல்ல பயம், பள்ளி செல்ல பயம் - மிமுலஸ்

7. பள்ளி செல்வதற்கு முன் வயிறு வலி, தலைவலி என ஏதோ ஒரு (பொய்) காரணம் சொல்லி பள்ளி செல்ல மறுக்கும் குழந்தை - செஸ்ட்நட்பட்

8. எல்லா நேரமும் விளையாட்டு விளையாட்டு என பொழுதை கழிக்கும் குழந்தைகள் ஓரிடத்தில் சிறிது நேரம் கூட அமைதி யாக உட்கார இயலாத குழந்தைகள் (Hyeractive children)) - வெர்வைன்

9. பேசுவதில், எழுதுவதில், சாப்பிடுவதில், நடப்பதில் எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும், அதிவேகம், நிதானமின்மை - இம்பேஷன்ஸ்

10. எந்த விஷயத்திலும் ஈடுபடாமல் எங்கோ வெறித்தபடி மந்தமாக இருத்தல். படிப்பிலோ, வேலையிலோ ஈடுபடாமல் கனவுகளில், கற்பனைகளில் மிதத்தல் (Hypoactive) - கிளமேடிஸ்

11. எல்லாரின் அக்கரையும் கவனமும் தன்மேல் செலுத்த விருப்பம் சுயநலமுள்ள குழந்தை - சிக்கரி

12. எந்தவித காரணமுமில்லாமல் வெறுப்புணர்வு ஏற்படுதல்; எல்லாவற்றிக்கும் வெறுப்பு ஏற்படுதல் - வில்லோ

13. சாப்பிட வெறுப்பு - ஹால்லி

14. அதிக பசி, எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காமை - செர்ரிப்ளம்

15. குச்சி, சாக்பீஸ், மண் தின்னும் பழக்கம் - செர்ரிப்ளம், வால்நட்

16. பிறந்த குழந்தையின் மலச்சிக்கல் - வால்நட்

17. மலம் போன திருப்தியில்லாமல் திரும்ப மலங்கழிக்கும் உணர்வு (neffectual Urgin for stool) - ஸ்கிளரான்தஸ்

18. கடுமையான இருமல், கக்குவான் இருமல் (Whooping Cough) - வொயிட்செஸ்ட்நட் + ரெஸ்கியூரெமடி

19. அடிக்கடி சளி பிடித்தல் மற்றும் குழந்தை, அடிக்கடி காய்ச்சல் ஏற்படுதல் - வொயிட்செஸ்ட்நட்

20. தட்ப வெப்ப மாற்றங்களினால் ஏற்படும் சளி தொந்தரவுகள் அல்லது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் - வால்நட்

21. அழுகை வந்தாலும் அடக்குதல். அழுகையை வெளிக்காட்டாமை மனதுக்குள் அழுதல் - அக்ரிமோனி

22. அதிக வலி காரணமாக அழுதல், வலி தாங்காமல் கதறுதல் -செர்ரிப்ளம்

23. அடுத்தவர்கள் அனுதாபப்படுமளவு அழுதல் - சிக்கரி

24. எந்த விஷயத்தையும் நினைவுக்கு கொண்டு வதுவதில் தாமதல் - ஸ்கிளரான்தஸ்

25. வேடிக்கை பார்த்துக் கொண்டு எதையோ வெறித்தபடி கவனமில்லாமல் உட்கார்ந்திருக்கும் குழந்தை - கிளமெடிஸ்

26. வகுப்பறையில் ஒரு இடத்தில் அமராமல், இங்கும் அங்கும் விளையாடிக் கொண்டு இருத்தல் - இம்பேஷன்ஸ்

27. தேர்வு நேரத்தில் பதட்டம் தணிய -ரெஸ்கியூரெமடி

28. தேர்வுக்கு தன்னை தயார் செய்யும் மாணவர்களின் கடுமையான உடல் சோர்வு நீங்க - ஆலிவ்

29. தேர்வு நேரத்தில் ஏற்படும் மனச்சோர்விலிருந்து விடுபட்டு புத்துணர்வு பெற - ஹார்ன்பீம்

30. எந்த ஒன்றையும் செய்ய தொடங்கும் முன் தன்னால் இயலாது என தயங்குதல் (தன்னம்பிக்கையின்மை)- லார்ச்

by-மாற்று மருத்துவம்

***


குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:






குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?


*

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


*

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.


*

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


*

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.


*

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.


*

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.


*

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.


*

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.


*

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.


*

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.


*

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.



***
thanks மாற்று மருத்துவம் ஏப்ரல் 2010
thanks கீற்று
****



"வாழ்க வளமுடன்"

ஹெல்மெட் ஆபத்தை விளைவிக்கும்!

ஹெல்மெட் அணிவதன் காரணமாக பாதகங்கள் எந்த அளவுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு அதிகரிக்கும்.




எந்த அளவுக்கு நாளைய வாழ்க்கையின் பெரும் தாக்கங்கள் இதன் காரணமாக உருவாக நேரிடும் என்பதை அக்குபங்சர் எனும் மேன்மையான சித்தாந்தத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். தலைப்பகுதியில் உயிர் இயக்க சக்தி நாளம் நடு மத்தியில் நேர்கோடாக அமைந்துள்ளது.

*

உயிர் சக்தி நாளத்தை அடுத்து சிறு நீர்ப்பை சக்தி நாளங்கள் அதன் இருபுறமும் அமைந்துள்ளது. இதனையடுத்து உயிர் சக்தி நாளம் அமைந்துள்ள தலை நடு மையக் கோட்டின் இருபுறமும் பித்தப்பை சக்தி நாளங்கள் அமைந்துள்ளன.

*

இதனையடுத்து நடு மையக் கோட்டின் இரு புறங்களிலும் தேக வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி நாளங்கள் அமைந்துள்ளன. இவையனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கக் கூடியது. தலைப்பகுதி, முதலில் தலையின் நடு மையக்கோட்டில் அமைந்துள்ள உயிர் சக்தி நாளத்திலிருந்து தூரமாக உள்ளது.

*

ஹெல்மெட் அணியும்பொழுது அதனுடைய கீழ் ஓரப் பகுதி இந்த நாளங்களை அழுத்திப் பிடிக்கிறது என்பதை நீங்கள் பார்க்க முடியும். சாதாரணமாக சக்தி நாளங்கள் அழுத்தப்படக் கூடாது. அவ்வாறு அழுத்தப்படுமானால் அதனுடைய விளைவுகளாக நோய்கள் தோன்றும்.

*

இந்த நோய்கள் படிப்படியாக வலிகளாக கழுத்திலும், பிடரிகளிலும் ஏற்படும். முழங்கை வலி, தோள்பட்டை வலி, மணிகட்டு வலிகள் இன்னும் விரல் மூட்டுகளில் வலிகள் போன்றவற்றைத் தோற்றுவிக்கும்.

*

காதைச் சுற்றி இந்த சக்தி நாளம் பரவியிருப்பதைப் பாருங்கள். ஹெல்மெட் அணிவதன் காரணமாக பிற்காலத்தில் காதுகளில் மந்தம் ஏற்படலாம். இன்னும் காதுகளில் வலிகளும் அடிக்கடி சீழ் பிடித்தலும் உருவாகும்.

*

கண்களின் இருபுறமும் வெளிப்புறங்களில் நெற்றிப் பொட்டுக்களில் தாங்க முடியாத வலி தோன்றினால் அது இந்த சக்தி நாளத்தில் ஏற்பட்டுள்ள பாதகங்களின் காரணமாகவே ஆகும்.
ஹெல்மெட் மற்றும் கண்ணாடிகளை அணிவது இந்த சக்தி நாளங்களை பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். சிறு பிள்ளைகளுக்கு கண்ணாடிகளை அணிவிக்கும் பொழுது காதுகளைச் சுற்றி அமையும்.

*

அதனுடைய ஃபிரேம் நிச்சயமாக இவர்களுடைய காதுகளை பாதிக்கும். அடிக்கடி காதுகளில் சீழ் பிடிக்கும். இதனை மற்ற மருத்துவத்தால் ஒரு போதும் குணப்படுத்த முடியாது.
எத்தகைய ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுத்தாலும் குணமாகாது.

*

குணமாக இந்தப் புள்ளிகளுக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் பாதுகாப்பீர்களானால் நாளை வரக்கூடிய மணிக்கட்டு வலிகள், விரல் மூட்டுகளின் வலிகள், முழங்கை தோள் பட்டை வலிகள், பிடரி மற்றும் காது, நெற்றிப் பொட்டு வலிகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

*

அடுத்து பித்தப்பை சக்தி நாளம் தலையின் பக்கவாட்டு முழுவதும் இந்த சக்தி நாளம் பரவியிருக்கிறது. தலையின் இருபுறமும் இது அமைந்திருக்கிறது. ஹெல்மெட் அணியும்பொழுது இந்த சக்தி நாளங்களே பெரும்பாலும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.

*

இதன் விளைவு வெயில் காலங்களில் ஏற்படும் மயக்கம், தலைவலி, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுகிறது. பலருக்கு சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு இறப்போரும் இருக்கின்றனர். ஹெல்மெட் அணிவதன் காரணமாக வெயிலின் உச்சக்கட்டத்தில் வாகனங்கள் ஓட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து ஏற்பட நிச்சயமாக வாய்ப்பு உண்டு.

*

ஹெல்மெட் அணிவதன் காரணமாக மயக்கம், வாந்தியுணர்வு ஏற்பட்டால் இது மட்டுமல்ல, ஹெல்மெட் கடுமையான கோடை காலங்களில் அணிந்ததன் காரணமாக அதன் விளைவுகள் ஹெல்மெட் அணியாததன் போதிலும் வெயிலில் செல்லும்போது சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு விடலாம்.

*

அடுத்து சிறு நீர்ப்பை சக்தி நாளம் அமையப் பெற்ற தலைப்பகுதியைப் பாருங்கள். ஹெல்மெட் அணிவதன் காரணமாக யாருக்கு சிறுநீர்ப்பை பலவீனமாக இருக்கிறதோ அவர்கள் அதை அணிய நேரிட்டால் இதன் காரணமாக இந்த சக்தி நாளங்கள் அழுத்தத்திற்கு உட்பட்டு விட்டால், கண்களிலிருந்து தலை முழுதும் வலி ஏற்பட ஆரம்பிக்கும். கண்களின் புருவங்களின் மத்தியில் கடுமையான உளைச்சல் ஏற்படும்.

*

தலையை ஆட்டினால் நடு மையக் கோட்டிற்கு இருபுறமும் தலையில் நீர் கோர்த்துக் கொண்டது போன்று பாரம் ஏற்படும். கழுத்தின் பின் பகுதியின் மையத்தில் ஏற்படும் வலிகள், குதிகால் வலி போன்றவை ஹெல்மெட் அணிவதன் காரணமாக எந்த நேரத்திலும் தோன்றக்கூடிய நோய்களாகும்.

*

இவையனைத்தும் கோடை காலங்களில் ஹெல்மெட் அணிவதன் காரணமாக உடல் நிலையில் ஏற்படும் மோசமான விளைவுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கோடை காலத்திலும் மற்ற நேரங்களிலும் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டியவர்கள் அவர்களுக்கு ஏற்படும் மேலே கண்ட அனைத்து நோய்களிலிருந்து அக்குபங்சர் சிகிச்சையின் மூலம் மேற்படி நோய்கள் வராமலும், ஏற்கனவே அவதிப்படுபவர்களையும் குணப்படுத்த முடியும்.

*

இரத்த அழுத்த மாத்திரைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளை அக்குபங்சர் மூலம் குணப்படுத்தலாம். எப்போது இரத்த அழுத்த மாத்திரைகள் ஒரு நோயாளி சாப்பிட ஆரம்பிக்கிறாரோ அப்போது தொடங்குவது தான் சிறு நீரகங்களின் அழிவு.


*

நுரையீரலும், சிறு நீரகங்களும் பாதிப்படைய ஆரம்பிக்கும்போது தூக்கமின்மை ஏற்பட ஆரம்பிக்கிறது. காரணம் தெரியாத பயமும் தூக்கத்தை கெடுக்கும். இரண்டு, மூன்று மணிக்கு மேல் பின்னிரவில் தூக்கம் கலைந்து விடுமானால் அது நுரையீரல் பாதிப்பை வெளிப்படுத்துகிறது. ஆண்களையும், பெண்களையும் மலடுகளாக்குவதும் இந்த இரத்த அழுத்த மாத்திரைகள்தாம்.

*

ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி, இரத்த அழுத்த மாத்திரையை உட்கொள்ள ஆரம்பித்த சில வருடங்களில் உடலுறவில் நாட்டமழிப்பார்கள். ஈடுபட நினைத்தாலும் அவர்கள் உறுப்புகள் ஒத்துழைக்காது.

*

சிலருக்கு வயிற்றின் மேல் பகுதிகளில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு இடுப்பு மடிப்புகளில், சிலருக்கு இடுப்பு மடிப்புக்கு கீழே தொடைப்பகுதியில், சிலருக்கு முதுகு அல்லது தோள் பட்டைகளில் இன்னும் சிலருக்கு கழுத்தின் முன்புறமோ, பின்புறமோ சதைகள் பருமனாகும்.

*

கழுத்தின் முன்புறம் சதை பருமனாகுதல் சிறு நீரகங்கள் சக்தியிழந்து வருவதை உணர்த்துகிறது. கழுத்தின் பின்புறம் போடும் சதை சிறுநீர்ப்பையின் சக்தி குறைவை வெளிப்படுத்துகிறது. பெண்களுக்கு பொதுவாக சதை போட ஆரம்பிக்கும்.

*

மார்பகங்களில் அதிகனமாக தோற்றமளித்தால் அது பெண்ணோ, ஆணோ வயிற்றுடன் சம்மந்தப்பட்டது. வயிற்றின் வேலை செய்யும் திறன் குறையும் போது அதிகப் பசி எடுப்பதோடு மட்டுமில்லாமல் மார்பகங்களில் ஊளைச் சதை போடும்.


*

மார்பகங்களுக்குப் பக்கவாட்டில் அக்குகளிலும் அக்குள் மடிப்புகளிலும் சதை விழுமானால் அது சிறு குடல், இருதயம் ஆகிய இவ்விரு உறுப்புகளின் பலவீனத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இது அவ்வப்போது குணப்படுத்தப்படாமல் போகும்போது தான் நாளடைவில் சிறு குடல் நோயின் காரணமாக ஏற்படும் அஜீரணக் கோளாறை காலமெல்லாம் அனுபவிக்க நேரிடுகிறது.

*

அது மட்டுமல்ல இருதயக் கோளாறுகளும் படபடப்பு, தூக்கமின்மை, மயக்கம், தலைச்சுற்றல் ஆரம்பம் பெற வழி ஏற்படுகிறது.

*

மேலே கண்ட அனைத்து நோய்களையும் அக்குபங்சர் சிகிச்சையின் மூலம் குணமாக்குவதுடன் தொடர்ந்து இரத்த அழுத்த மாத்திரைகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.


***
thanks டாக்டர் கலா தியகாராஜன்
***


"வாழ்க வளமுடன்"

லேப்டாப்பால் ஆண்களுக்கு அபாயம்!

லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து குழந்தையின்மை ஏற்படும் அபாயம் உள்ளதாக குழந்தைப் பெரும் சிறப்பு நிபுணரும் பெங்களூரு உதவி கருத்தரிப்பு மையத்தின் இயக்குனருமான டாக்டர். காமினி ராவ் தெரிவித்துள்ளார்.




18 முதல் 25 வயதுடைய ஆண்களில் 5 பேரில் ஒருவர் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

*

லேப்டாப் உபயோகிப்பதால் அதில் இருந்து வரும் வெப்பக் கதிர் ஆண்களை தாக்கி அவர்களின் உயிரணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி குழந்தையின்மையை ஏற்படுத்துவதாகவும், லேப்டாப்பின் மேல் பாகம் தயாரிக்க பயன்படும் மூலப் பொருளில் உயிரணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேதிப் பொருட்கள் கலந்து உள்ளதாகவும் ராவ் தெரிவித்துள்ளார்.

*

மேலும் அதிகமாக காப்பி அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் அதில் உள்ள நச்சுப் பொருளால் உயிரணுக்கள் குறையும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

*

நகர்ப் புறத்தில் இருக்கும் ஆண்களை விட கிராமப் புறத்தில் இருக்கும் ஆண்கள் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப் படாமல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்த ராவ் மாறி வரும் வாழ்க்கை முறைகளுக்கேற்ப நாமும் சில மாற்றங்களை கையாண்டால் இது போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.

*

இதன்படி முறையான உடற்பயிற்சி. சூடான நீரை பயன்படுத்தாமை, புகை மற்றும் காபி அருந்தும் பழக்கத்தை கை விடுதல், இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்தல் போன்ற பழக்கங்களை கடைப் பிடித்து வருவதன் மூலம் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


***
thanks டாக்டர். காமினி ராவ்
***


உங்கள் கடமையை புன்முறுவலோடு எதிர் கொள்ளுங்கள்!

இவனை வளர்க்குறதுக்குள்ள என் பிராணனே போயிடும் போலிருக்கு... எது வேணும்னாலும் அம்மா... அம்மான்னு உயிரை வாங்குறான்.



கழுதை வயசாயிடுச்சு இன்னமும் நான்தான் அவனை எழுப்பி, பல்தேய்ச்சு... குளிப்பாட்டி... ட்ரெஸ் போட்டு ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டியிருக்கு... முதல்ல ரொம்ப பயந்தவன்... இப்ப என்னடான்னா... எதைச் சொன்னாலும்... 'சும்மா மொக்கை போடாதம்மான்னு!' படக்கென்று எதிர்த்து பேசுறான்' என்று புலம்பும் தாய்மாரா நீங்கள்?

*

"கல்யாணமான புதுசுல... எதுக்கெடுத்தாலும் ஸ்வீட்டா பேசுவார்... நடந்துக்குவார். நான்கூட இவரை மாதிரி ஒருத்தர் கிடைச்சது கடவுள் புண்ணியம்னு அவரை காலைத் தொட்டு அடிக்கடி கும்பிடுவேன்...

*

போகப் போகத்தான் அவரோட மறுபக்கம் தெரியுது. இவருக்குன்னு சுய அறிவே கிடையாது. அவுங்க அம்மா சொன்னா போதும்... அதையே வேத வாக்கா... எடுத்துக்கிட்டு உயிரை எடுக்குறார்?!" என்று புலம்பும் மனைவியா நீங்கள்?

*

காலையிலிருந்து... நைட்டு ஒரு மணி வரை இந்த வீட்டுக்கு மாடா உழைக்கிறேன்... சாப்பிட்டியா... எதாவது உதவி செய்யவான்னு கேட்க ஒரு நாதியில்லே... இத்தனை மனுசங்க இருந்தும் என்ன பிரயோஜனம்? ஒரு டம்ளரை எடுத்து வைக்கணும்னாலும் நான்தான் தேவைன்னு புலம்பும் இல்லத்தரசியா நீங்கள்?

*

அப்படி என்றால் இந்தக் கட்டுரையை முதலில் படியுங்கள்.குழந்தைகள், நம்மை உதாரணமாக எடுத்துக் கொண்டுதான் பழக்க வழக்கங்களை மேற்கொள்வார்கள்.

*

பெற்றோர்கள் தொலைக்காட்சி முன்பாக உட்கார்ந்து கொண்டு ரிமோட்டை சுழற்றியபடி, டிவி பார்க்காதே... விளையாடாதே என்று கூறினால் எப்படி கேட்பார்கள்?

**

1. குழந்தைகளை நன்றாக வளர்க்கத் தெரியாத சில பெற்றோர்கள், 'அவன் யார் சொன்னாலும் கேட்கமாட்டான்!' என்று பெருமையாகக் கூறுவார்கள். இல்லாவிட்டால் டீச்சரிடம் சென்று நன்றாக கண்டிக்குமாறு கூறுவார்கள். இதெல்லாம் தேவையில்லாத செயல்.

*

2. குழந்தைகள் நம்முடைய பேச்சை கேட்கவில்லை என்றால் அவர்களை கண்டிப்பதற்கு முன்பாக 'நம்மை எங்காவது திருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா?' என்று ஆராய்ந்து பாருங்கள்.

*

3. நம் குழந்தைகளுக்கு நல்ல குண நலன்களையும், ஒழுக்கத்தையும், பழக்க வழக்கங்களையும் நாம்தான் கற்றுத்தர வேண்டும். அவர்கள் படிப்பில்... தொழிலில்... வேலையில் வெற்றி பெற வேண்டுமென்றால், அது நாம் கற்றுத் தந்துவிட்டால், வாழ்க்கையில் அவர்கள் பிரகாசிப்பது ரொம்ப சுலபம்.

*

4. படிப்பும், வேலையும் அவரவர்களுக்கு இருக்கும் திறமைக்கும், ஆர்வத்துக்கும் ஏற்ப அவர்கள் தேர்ச்சி பெற்று விடுவார்கள். படிப்பிலும், தொழிலிலும் கிடைக்கும் வெற்றி நிலைக்க வேண்டும் என்றால், அது நாம் கற்றுத்தரும் பண்புகளால்தான் முடியும்.

*

5. நல்ல விஷயங்களை போதனையாக... அறிவுரையாக சொல்லி திருத்துவதை விட கதைகள், உதாரணங்கள் மூலம் எடுத்துக் கூறினால் அவர்களை எளிதாக சென்றடையும்.

*

6. திருமணமான புதிதோ அல்லது பல வருஷங்கள் கழிந்தோ... சில பெண்களுக்குத் தங்களுடைய கணவரைப் புரிந்துக் கொள்ளாமல் இருப்பார்கள். இதற்கு மனைவி மட்டும் காரணம் அல்ல... கணவனும்தான்.

*

7. வெளியே... அலுவலகத்தில் ஏற்படும் கசப்புகளை வீட்டுக்குள் காண்பிக்கும்போதுதான் தம்பதிகளுக்குள் பிணக்கு ஏற்படுகிறது. அளவோடு பேசுங்கள்.

*

8. அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.

*

9. "வெற்றியை அடைய குறுக்கு வழியில் செல்லாமல் நேர்வழியில் செல்வது... அம்மாவிடமிருந்து உறுதியான மறுப்பு வரும்போது அதை செய்யக்கூடாது... ஏதாவது கலை அல்லது விளையாட்டில் சிறப்பு கவனம்..." ஆகியவற்றை அனுபவத்தால் உணரக்கூடிய சிறிய வயது விஷமங்களை கண்டித்துக் கொண்டே இருக்காமல், அனுபவம் மூலம் தெரிந்து கொள்ளவிடுவது.

*

10. ஒரு செயலை செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்று நாம் சொல்வதற்கான காரணத்தை அவர்கள் தெரிந்து கொள்ள செய்ய வேண்டும்.

*

11. தம் மீது பெற்றோர்கள் சந்தேகப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை... கணவர் உங்களைத் திட்டுவதையோ... உங்களோடு சண்டை போடுவதையோ, பிறர் முன்பாக செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்பதை அவரிடம் தனியாக எடுத்து சொல்லுங்கள்.

*

12. அவரைப் பற்றிய குறைகளை அம்மாவிடமும், தோழியுடனும் பேசுவதை விட, அவரிடமே பேசினால் நல்ல பலன் கிடைக்கும். நம் குழந்தைகள் சந்தோஷமான குழந்தைகளாக வளர்வதற்கும், நல்ல பண்புகள் கொண்ட வருங்கால இளைஞர்களாக இருப்பதற்கும், சாதனைகள் புரிவதற்கும் அடிப்படை காரணம் பெற்றோர்களின் வளர்ப்புதான்.

*

13. உங்களுடைய குழந்தைகளுக்கு பணம் சம்பாதிக்க... அல்லது பணத்தை சேர்த்து வைக்கவோ கற்றுத் தர வேண்டாம். நல்ல குணங்களை... வாழ்க்கையை கற்றுக் கொடுங்கள்.

*

14. சம்பாதிக்கவும், சேமிக்கவும் அவர்களே கற்றுக் கொள்வார்கள். உங்களது லட்சியத்தை அவரிடம் சொல்லுங்கள். அதை அடைவதில் உங்கள் முயற்சியையும், ஆர்வத்தையும் காட்டுங்கள்.


*

15. அவர்கள் ஏதாவது குற்றங்குறைகள் செய்யும் போது உங்களுடைய கணவருடைய ரேஞ்சுக்கு கண்டிக்காமல்... அல்லது தண்டிக்காமல் பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்.

*

16. எக்காரணம் கொண்டும் கணவருக்கு தெரியாமல் அவர்களுக்கு எந்த விதத்திலும் எதுவும் செய்ய வேண்டாம். ஏனென்றால் அதுவே உங்களுக்கு எதிராக திரும்பிவிடும்.

*

17. கணவர், குழந்தைகள், கணவரின் குடும்பத்தார் என எல்லோருக்கும் நீங்கள் தேவை என்பதை ஏன் நெகட்டிவ்வாக எடுத்துக் கொள்கிறீர்கள்... அதையே பாசிட்டிவ்வாக நினைத்துப் பாருங்கள்...

*

18. எல்லா மனிதர்களும் கஷ்டம் என்றால் ஆண்டவனைத் தானே நினைக்கின்றோம், அதைப் போல்தான் எது தேவை என்றாலும் உங்களை நினைக்கின்றார்கள்... உங்களை அழைக்கின்றார்கள்.

***
THANKS palani
***


உங்கள் குழந்தைகள் நல் ஒழுக்கமாக, புத்திசாலியாக வளர

ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே என்பார்கள். குழந்தை வளர்ப்பு என்பது தனி கலை.



ஒவ்வொரு குழந்தையும் தனக்கு என்று ஒரு உலகத்தை வைத்துக் கொள்கிறது. அதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

*

2. அவர்களின் உலகத்துக்குள் சென்று அவர்களின் எண்ணங்களை பாராட்டி, அதே நேரம் அவர்களை நமது நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டு வருவது ஒவ்வொருபொற்றோர்களின் கடமை ஆகும்.

*

3. குழந்தைகளுக்கே உள்ள பயத்தை போக்குவது முதலில் நம் கடமை. அதற்கான வழிகளை கையாள வேண்டும்.

*

4. இருட்டான நேரத்தில் அவர்கள் பயப்படுவதை தவிர்க்க தேவையான தன்னம்பிக்கை கதைகளை கூற வேண்டும். அப்போது இருட்டு பயத்தில் இருந்து குழந்தை விடுபடும்.

*

5. அதன்பிறகு குழந்தைகள் அணியும் உடைகளை பார்த்து அவர்களை பாராட்ட வேண்டும். இந்த பாராட்டால் முக மலர்ச்சி அடையும். குழந்தைக்கு தன்னை அறியாமல்தன்னம்பிக்கை வளரும்.

*

6. பள்ளிக்கூடத்தில் பாடம் படிப்பதிலும், வீட்டுப் பாடம் படிப்பதிலும் அனைத்து குழந்தைகளும் சரியாக செய்யும் என்று கூறமுடியாது. அப்போது அவர்களின் குறைகளையும், நிறைகளையும் ஆராய வேண்டும்.

*

7. அவர்களின் நிறைகளை பாராட்டி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, குறைகளை ஆராய்ந்து அந்த குறைகளுக்கான காரணத்தை அறிந்து அதை போக்க நாம் சில ஆலோசனைகளை கூறவேண்டும். இது அவர்களை உற்சாகப்படுத்தும்.

*

8. குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், ''டியூசன்'', அதன்பிறகு வீட்டு பாடம், சாப்பாடு, தூக்கம் என்று ஒரு வட்டத்துக்குள் விட்டுவிடக் கூடாது, ''டியூசன்'' முடிந்ததும் அவர்களுடன் காலாற நடந்து சென்று அவர்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடி திருப்தி படுத்த வேண்டும்.

*

9. பின்னர் தூக்கம் வந்த பிறகும் ''படி படி'' என்று கூறாமல் தூங்க வைக்க வேண்டும். தூங்க செல்வதற்கு முன் அன்போடு, வீட்டு பாடம் செய்ய வேண்டியது உள்ளது. ஆகவே காலை 6 மணிக்கு எழுந்து விட்டால் வீட்டு பாடம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்தி படுக்க வைக்க வேண்டும்.

*

10. காலை 6 மணிக்கே குழந்தை எழுந்து வீட்டு பாடம் செய்ய அலாரம் வைத்து, அவர்களுடன் நாமும் எழுந்து வீட்டுபாடம் முடிக்கும் வரை அருகில் உட்கார்ந்து இருக்க வேண்டும். குழந்தைகளை படிக்க சொல்லிவிட்டு டி.வி. பார்ப்பது தவறான செயல். அதை பெற்றோர்கள் தவிர்ப்பது அவசியம்.

*

11. குழந்தை தவறு செய்து விட்டு வந்து நம் மன்னிப்பை எதிர்பார்த்து நிற்கும் போது, அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி ''டேக் இட் ஈஸி'' என்று கூறுங்கள். அவர்களிடம் குற்ற உணர்வு பறந்துவிடும்.

*

12. நாம் தவறு செய்யும் போது ''சாரிடா கண்ணா'' என்று கூறினால் அவர்களும் அந்த வார்த்தைகளை பின்பற்றுவார்கள். அதே சமயம் குழந்தைகளுக்கு யாராவது ஏதாவது உதவி செய்யும் போது அதற்கு ''நன்றி'' தெரிவிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

*

13. பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை எட்டாத போது குழந்தை முகம் வாடி இருக்கும். அப்போது இந்த போட்டிகளில் கலந்துகொள்வது தான் முக்கியம் என்று கூற வேண்டும். அப்போது தோல்வியை கண்டு அவர்கள் பயப்பட மாட்டார்கள்.

*

14. பல போட்டிகளில் பங்குபெறும் ஆர்வமும் தன்னம்பிக்கையும் வளரும். பள்ளிகளில் நடக்கும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பை எக்காரணத்தை முன்னிட்டும் தவற விடக் கூடாது. ஏனெனில் குழந்தைகளின் திறமையை உரசி பார்க்கும் இடமே அதுதான். அங்கு கிடைக்கும் ''ரிசலட்''டை வைத்து குழந்தை செல்ல வேண்டிய பாதையை வகுக்க முடியும்.

*

15. இவை அனைத்துடன் சுற்றுப்புற தூய்மை அவசியத்தை விளக்குவதும் நமது கடமை ஆகும். இதையெல்லாம் பெற்றோர் சரி வர கடைபிடித்தால் தன்னம்பிக்கை உள்ள குழந்தை தயார்.


ஒரு குழந்தை பெரிய அறிவாளியாகவும், திறமைசாலியாகவும் வளர்வது ஒவ்வொரு பெற்றோர்களின் வளர்ப்பில்தான் உள்ளது.



ஹாச்ச்ச்...சில ஆண்கள் தான் முதலிடம்....

அடிக்கடி மூக்கை உறிஞ்சுவது, ஹாச்... என்று தும்முவது, தலையை பிடித்துக் கொள்வது எல்லாம் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது.



காரணம், ஏதோ வேலை பளு, குடும்ப பிரச்னை என்று எண்ணி, ஆண்களே, நீங்கள் புளகாங்கிதம் அடைய வேண்டாம். உண்மையில் ஆண்களுக்கு எதிர்ப்புச்சக்தி வெகுவாக குறைவாம்.

*

அதுபற்றி லண்டன் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வந்தாலும் குறிப்பாக எதிர்ப்பு சக்தி விஷயத்தில் புது தகவல்களை வெளியிட்டுள்ளனர். சிறிய வயதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாகத் தான் எதிர்ப்புச்சக்தி உள்ளது.

*

ஆனால், வயது அதிகமாக அதிகமாக, ஆண்களிடம் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களை விட அவர்களுக்கு குறைவாகவே உள்ளது.

*

அதனால் தான் ஆண்களுக்கு அதிகமாக ஜலதோஷம், தொண்டைக்கட்டு, இருமல் போன்ற பாக்டீரியா, வைரஸ் சார்ந்த பாதிப்பு வருகிறது. பெண்களுக்கு வருவது அவர்களை விட குறைவு தான். இதற்கு காரணம், பாக்டீரியா, வைரசை எதிர்த்து போராடும் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதே.

*

நம் உடலில் எதிர்ப்பு சக்தி முக்கியம். எந்த நோய் வந்தாலும், உடல் பலவீனமானாலும், பொதுவாக சிலரை பார்த்து, "என்ன உடலில் எதிர்ப்புச்சக்தியே இல்லையே' என்பது தானே.

*

டாக்டரை பார்த்தால் கூட, "உங்கள் உடலில் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளது. முதலில் நல்ல சத்துள்ள உணவு, உடற்பயிற்சி எல்லாம் செய்யுங்கள். மருந்தும் எழுதித் தருகிறேன்' என்பது தான்.

*

நிபுணர்கள் ஆய்வு குறித்த ஹெல்த் ஜர்னலில் கூறிய தகவல்கள்: நம் உடலில் மொத்தம் 1200 ஜீன்கள் என்ற மரபுக்கூறுகள் உள்ளன. மரபணுக் கூறுகளான இவை தான், நம் உடலில் எதிர்ப்புச்சக்தியை பராமரிக்கிறது.

*

எதையும் தாங்குவதற்கு நம் உடலில் போதுமான அளவில் சுரப்பிகள், ரசாயன மாற்றங்கள், எனர்ஜிகள் எல்லாம் உள்ளன. அவற்றை தகுந்த அளவில் குறையாமல் பாதுகாப்பது இந்த எதிர்ப்புச்சக்திகள் தான்.

*

இந்த எதிர்ப்புச்சக்தியை சீராக பராமரித்து வரும் இந்த 1200 மரபணுக்கூறுகளில் ஏதாவது பாதிப்பு வந்தால் தான் ஜலதோஷம், இருமல், ப்ளூ காய்ச்சல் என்று வருகின்றன.


*

பாக்டீரியா, வைரஸ் ஆகியவை ஒருவரின் உடலில் தொற்றுவதற்கு காரணம் அவர் உடல் பலவீனம் தான். பலவீனம் ஆக காரணம் எதிர்ப்புச்சக்தி இல்லாதது தான்.

*

முப்பது வயதை தாண்டியதும் பெண் களை விட, ஆண்களுக்கு, அவர்களின் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் என்று பல காரணங்களால் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களும் தான் இப்போது ஆண்களை போல செயல்படுகின்றனர் என்றாலும், எதிர்ப்புச்சக்தியை அவர்கள் இழக்க விடுவதில்லை.

*

அதற்கு காரணம், அவர்களின் பழக்க வழக்கம் மாறாமை தான். பெண்களுக்கு பருவம் மாறும் போது வேண்டுமானால், எதிர்ப்புச்சக்தி சற்று குறைய வாய்ப்புண்டு. அப்போது அவர்கள் தங்கள் எதிர்ப்புச்சக்தியை இழக்காமல் இருக்க டாக்டர்கள், மருந்து மாத்திரைகளால் சீராக வைக்கின்றனர்.

*

எதிர்ப்புச்சக்திகளில் இரண்டு வகை உள்ளன. தொற்று கிருமிகளை அண்ட விடாமல், உடலில் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கும் "ஆண்டிபாடிஸ்' உற்பத்தியை தொடர்ந்து செய்யும் ஒரு வகை எதிர்ப்புச்சக்தி. அது பெண்களிடம் அதிகம் உள்ளது.

*

அது ஆண்களுக்கு குறைவு தான். அதனால் தான் பாக்டீரியா, வைரஸ், தொற்றுகிருமிகள் தொற்ற வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.



டென்ஷனே இல்லாமல் புதிய நாளை வரவேற்க...

காலையில் விழித்தெழும்போது, இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்று சிந்தித்துக் கொண்டே எழுந்தால், "டென்ஷன்` தானாகவே தொற்றிக் கொள்ளும்.





இதைத் தவிர்க்க:


1. மூதல் நாள் இரவே, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி விட்டு, நிம்மதியாகப் படுத்துத் தூங்க வேண்டும்.


*

2. அடுத்த நாள் எழும்போது, இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், இனிமையான சங்கீதம் கேட்க வேண்டும். பல் துலக்குவது, பால்/ காபி/ டீ குடிப்பது, காலைக் கடன்களை முடிப்பது உட்பட முதல் அரை மணி நேர வேலைகளை செய்து முடித்த பின், முதல் நாள் இரவு எழுதிய பட்டியலைப் பார்த்துக் கொண்டால், எந்தெந்த வேலைகளை முதலில் செய்வது என்ற தெளிவு பிறக்கும்.

*

3. சுறுசுறுப்பாய் வேலைகளைச் செய்யத் துவங்கலாம். இது அடிப்படை. இது தவிர, தினமும் உங்கள் மனதை, "ரிலாக்ஸ்` செய்து கொள்ளலாம்.


***

சில யோசனைகள்:


1. இனிமையான சங்கீதம் கேட்க அடிப்படைத் தேவையாக அமைவது, குறைந்தபட்சம் ஒரு கருவி. அது கேசட் பிளேயராகவோ, எம்.பி.,3யாகவோ, கம்ப்யூட்டராகவோ இருக்கலாம்; இனிமையான சங்கீதத்தை இதமாகக் கேட்கும் வகையில், அறைகளில் ஸ்பீக்கர் வசதி செய்து கொண்டால், மிக நல்லது.

*

2. நீங்கள் பயன்படுத்தும் அந்தக் கருவி எந்தப் பிரச்னையும் இல்லாமல், சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியாக இயங்கவில்லை என்றால், அதைச் சரி செய்வதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது.


*

3. செடி வளர்க்கலாம். தினமும் ஒரே ஒரு பூவாவது தரக் கூடிய வகையில், பூச்செடி வளர்க்கலாம். எந்தச் செடியையும், அதன் அருகில் அமர்ந்து பேசி, கொஞ்சி, தண்ணீர் விட்டு வளர்த்தால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, பூக்களைக் கொடுக்கும்.


*

4. அவற்றுக்கும் மனது உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். நாமே வளர்த்து, ஒரே ஒரு பூ பூத்தால் கூட, அதில் கிடைக்கும் மன நிறைவு, நமக்கு நிம்மதியைக் கொடுக்கும்.


*

5. கவிதை எழுதப் பிடிக்குமா? அடி மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கவிதையாக அது அமைய வேண்டும். கவிதை எழுதப் பழகினால், மன வளம் பெருகும்; எழுத்து வளம் பெருகும். உங்களிடம் உள்ள வலிமையான கருத்துக்கள், பலவீனமான கருத்துக்கள் என்னென்ன என்பதைப் பாகுபடுத்திப் பிரித்துப் பார்க்கும் அறிவு வளரும்.

*

6. பாட்டு பாடலாம், ஓவியம் வரையலாம், துணி தைக்கலாம், நகைகள் செய்யலாம். இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடும்போது, உங்களிடையே உள்ள கலைத் தன்மை வெளிப்படும். இதுவே உங்களின் தனித் தன்மையை நிலைநாட்டும்.


*

7. ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, தேவையற்ற விஷயங்களை மனதில் அசை போட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் நாட்டம் செலுத் தும்போது வேலையில் கவனம் குறையும்.


*

8. அதுவே உங்களுக்கு ஆபத்தாய் அமைந்து விடும். முழுமையான பணி செய்த திருப்தி ஏற்படாது; மன நிம்மதி கெடும். மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றுவது மிகவும் கடினம் தான்.

*

9. வாழ்க்கையில் சந்தோஷமும் நிலைப்பதில்லை; துன்பங்களும் நிலைப்பதில்லை.

*

10. இன்றைய தினத்தில் உள்ள கடமைகளையும், பணிகளையும் சீராகச் செய்யும்போது கிடைக்கும் நிம்மதியுடன், திருப்தியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்.